அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
சுத்த சன்மார்க்க அன்பன்
On 3/8/13, Vallalar Groups <vallalargroups@gmail.com> wrote:
> தமிழ் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவியர்
> ஏன்?<http://selvanuran.blogspot.in/2009/10/blog-post_31.html>
> <https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQY8W0WPcRwcmwo3eYNGUMqsR28qUaUVkwByPh3K3lFflmSKJC3RQ4mEpRiwzXsjre1_T8Bqv2d2OvZwEYQhmHwqB80_uwK49B-0LW_TS0U4CxcwBoicOTWfQLK8uqMK_96hwuDmqBz1U/s1600-h/Muruga+with+Valli+&+Devayani.jpg>
> ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு. சில So called தமிழ் காவலர்கள் இதை
> பின்பற்றாமல் இரண்டு மூன்று என மனைவியர் வைத்துக் கொண்டாலும் பெரும்பாலான
> தமிழர்கள் ஒன்றே போதும்!!!! என தமிழ் பண்பாட்டைக் கட்டிக் காப்பாற்றி
> வருகின்றனர்.
>
>
> சில பேர் என்னிடம் கேட்டதுண்டு "தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த
> தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ்
> பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர்
> பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது இருப்பினும்
> என்னால் முடிந்தவரை அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில்
> சொல்லுகிறேன்.
>
>
> அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் *சுழுமுனை *என்றால் என்ன என்பதினை
> தெரிந்து கொள்ள வேண்டும். மகான் சிறீ சதானந்த சுவாமிகள் தன் கந்தகுரு
> கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.
>
> "நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
>
> பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.
>
> சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
>
> சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"
>
>
> சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு. நமது உடலில் இரண்டிரண்டு
> ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள்,
> மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச்
> சொல்லலாம் இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி
> பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது ஆகும்.
>
>
> இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல்
> ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின்
> மத்தியிலேயே அமைகின்றன. இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால்
> மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்
>
> 1.நெற்றி (பிரம்மந்திரா)
>
> 2.தொண்டைக் குழி (ஆங்ஞை)
>
> 3.மார்புக்குழி (விசுத்தி)
>
> 4.தொப்புள் குழி (மனிப்புரம்)
>
> 5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)
>
> 6.மலக்குழி (மூலாதாரம்)
>
> இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை
> என்பதாகும். இந்த சுழுமுனை புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின்
> குவிந்து ஒடுங்குகிறது இந்த தலைப் பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ்
> எனவும் அழைப்பர்.மருத்துவர்களின் லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால் இது
> எளிதாக புரியும்.
>
>
> <https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMcM9oXS0P-9-YF__4FlpfBHW6kE38d0E243OywM5yb5uE3fk5qyaiBxFV6IVWFXefQxDHzf6xPUc8KrZlhRptbND63PyOw0XM9hjP_Pwd2gAbQ-6eAxUZ0dm_B3pHbTdHvGfTpQoybT4/s1600-h/images%5B4%5D.jpg>
> முருகன்
> கையிலுள்ள வேலும் இந்த சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது
> நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை
> கோடாகவும் உள்ளது.
>
>
> <https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLHfs9AJcCSwzxfKQIJfCnHFZXBssTUjN_m6HvRUJh-UPgtgmj-l-AYf1LL0mebbEbD8TOF_KLI-1JgD6Z7xqN1jysrzaL8E2H7teSQU4ViWIAf3SlBq7Y9PwCsCdKVwiuGUze-r_FpBQ/s1600-h/images.jpg>
> மருத்துவர்களின்
> லோகோவில் இடது புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பினைந்து
> செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது
> இடகலை.
>
> இதைத்தான் கந்தகுருகவசத்தில் சதானந்த சுவாமிகள் சொல்லுகிறார்
>
> "இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
>
> இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"
>
>
> எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த
> சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும்
> அறிந்திடலாம் குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழு முனை முடிச்சான
> நெற்றிப் பரப்பேதான்.
>
> ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன்
> உள்ளான்.
>
> இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்
>
> "உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவான்
>
> தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
>
> எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்"
>
>
> சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என
> திட்ட வேண்டாம்.
>
> *ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும்
> வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி தெய்வானை.* ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே.
> ஆனால் மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த
> மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
>
> இறுதியாக ஒன்று
>
> கடவுள் ஒருவரே
>
> அவர் எவராலும் பெறப்படவும் இல்லை
>
> அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை.
>
> எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு
>
> மனைவியர் இரண்டு என்பது
>
> இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர
>
> வேறொன்றும் இல்லை.
>
>
> *பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்*
>
> *அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> *
> [image: 2634-40.gif]*எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க* [image: 2634-40.gif]
>
> *சுத்த சன்மார்க்க அ**ன்**பன்***
> * பாலமுருகன்
> காஞ்சிபுரம் *
>
>
> E-Mail : vallalargroups@gmail.com
> அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
>
> --
> Please visit Our WebSite for all Discussions:
> http://vallalargroupsmessages.blogspot.com/
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "Vallalar Groups" group.
> To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
> Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
>
>
>
--
venkatesh babu
--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts , Vallalar Education ,Vallalar Study Material , Vallalar MP3 Speeches , Vallalar DVD , Vallalar Books,Vallalar Functions - Information Sharing etc
Friday, March 8, 2013
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
The Master "The Master is the one who removes the darkness of the consiousness and illuminate them, as the sun in the physical sky remo...
-
G etting goosebumps while listening to Raja's Thiruvasagam is nothing uncommon, but the following real life incident gave me goosebu...
-
Health No. Book Title Author Download 1 Siddha herbal medicine -சித்த மருத்துவ மூலிகைகள் Dr. Kasi Pitchai 2 Siddha herbs - ச...
-
🙏🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🔥🌺 *அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தின் ...
-
Sir forgive me for typing in english i do not have the tamil font in Ema sithi Suriya kalaiyil swasipathan moolam ayul perugum endrum chandi...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment