Wednesday, June 29, 2011

[vallalargroups:4236] Message from harimanigandan v : Teacher vs Guru



---------- Forwarded message ----------
From: harimanigandan v <chamundihari@gmail.com>
Date: 2011/6/29
Subject: Teacher vs Guru



எல்லோருக்கும் வணக்கம்,

மொழிபெயர்ப்புக்கு நான் பெயர் கொடுக்கவில்லை. இருந்தாலும் செய்து பார்க்க ஆசைப்பட்டேன். அதன் விளைவை கீழே காண்க. சிலவற்றை நேரடியாகவும் சிலவற்றை கவித்துவமாகவும் சொல்லியிருக்கிறேன். பிழை இருந்தால் பொறுத்தருளுக.

1.A teacher takes responsibility of your growth

  A Guru makes you responsible for your growth

 ஆசான் : உன் வளர்ச்சிக்கு நான் பொறுப்பு.

 குரு : உன் வளர்ச்சிக்கு நீயே பொறுப்பு.

2.

A teacher gives you things you do not have and require

A Guru takes away things you have and do not require.


ஆசான் : உனக்கு எது வேண்டும் , அது எனக்குத் தெரியும்.

குரு : உனக்கு எது வேண்டாம், அதான் எனக்குத் தெரியும்.


3.

A teacher answers your questions

A Guru questions your answers 


ஆசான் : உனக்கு கேள்வி உண்டா ? எனக்கு பதில் தெரியும்.

குரு : உனக்கு பதில் தெரியுமா, எனக்கு கேள்வி உண்டு.


4.

A teacher helps you get out of the maze 

A Guru destroys the maze 


ஆசான் : சிக்கல் வரும், வழி சொல்கிறேன்.

குரு :  சிக்கல் வேண்டாம், வழி சொல்கிறேன்.


5.

A teacher requires obedience and discipline from the pupil 

A Guru requires trust and humility from the pupil 


ஆசான் : எனக்குத் தேவை உன் பணிதலும் ஒழுக்கமும்.

குரு : எனக்குத் தேவை உன் நம்பிக்கையும் அடக்கமும்.


6.

A teacher clothes you and prepares you for the outer journey 

A Guru strips you naked and prepares you for the inner journey 


ஆசான் : வெளியில் போகிறாயா, இந்தா சட்டை உடுத்திக் கொள்.

குரு : குளிக்கப் போகிறாயா எதற்கு சட்டை ? 


7.

A teacher is a guide on the path 

A Guru is a pointer to the way 


ஆசான் : இதான் வழி வா போகலாம்.

குரு : இதான் வழி போ.


8.

A teacher sends you on the road to success 

A Guru sends you on the road to freedom


ஆசான் : கண்டபடி மேயாதே, இந்தா கடிவாளம்.

குரு : கடிவாளம் எதற்கு, மேய் கண்டபடி.


9.

A teacher explains the world and its nature to you 

A Guru explains yourself and your nature to you 


ஆசான் : வெளியில் வா உலகம் தெரியும்.

குரு : உள்ளே பார் உலகம் புரியும்.


10.

A teacher makes you understand how to move about in the world 

A Guru shows you where you stand in relation to the world 


ஆசான் : உலகத்தோடு சம்பந்தப்படுத்திக் கொள்ள வேண்டுமா, நான் கற்றுத் தருகிறேன்.

குரு : உனக்கும் உலகத்துக்கும் என்ன சம்பந்தம், நான் சொல்கிறேன்.


11.

A teacher gives you knowledge and boosts your ego 

A Guru takes away your knowledge and punctures,your ego 


ஆசான் : தலை லேசாக இருக்கிறதா, கனமாக்குகிறேன்.

குரு : தலை கனமாக இருக்கிறதா, லேசாக்குகிறேன்.


12.

A teacher instructs you 

A Guru constructs you


ஆசான் : நான் உன்னைப் புதுக்குவேன்.

குரு : நான் உன்னைச் செதுக்குவேன்.


13.

A teacher sharpens your mind 

A Guru opens your mind 


ஆசான் : உன் மனதைக் கொண்டு வா, ஆயுதம் செய்வோம்.

குரு : உன் மனதைக் கொண்டு வா, ஆலயம் செய்வோம்.


14.

A teacher shows you the way to prosperity 

A Guru shows the way to serenity 


ஆசான் : உனக்கு பொருள் சம்பாதிக்க வேண்டுமா என்னிடம் வா.

குரு : உனக்கு அருள் சம்பாதிக்க வேண்டுமா என்னிடம் வா.


15.

A teacher reaches your mind 

A Guru touches your soul 


ஆசான் : என் எல்லை உன் மனம்.

குரு : என் எல்லை உன் ஜீவன்.


16.

A teacher gives you knowledge 

A Guru makes you wise 


ஆசான் : என்னிடம் வா அறிவு கிடைக்கும்.

குரு : என்னிடம் வா ஞானம் கிடைக்கும்.


17.

A teacher gives you maturity 

A Guru returns you to innocence 


ஆசான் : என்னிடம் வா உன்னை அறிஞன் ஆக்குகிறேன்.

குரு : என்னிடம் வா உன்னை குழந்தை ஆக்குகிறேன்.


18.

A teacher instructs you on how to solve  problems 

A Guru shows you how to resolve issues 


ஆசான் : பிரச்சினையா, தீர்த்து வைக்கிறேன்.

குரு : பிரச்சினையா, தீர்வு சொல்கிறேன்.


19.

A teacher is a systematic thinker 

A Guru is a lateral thinker 


ஆசான் : நான் ஒருமுகச் சிந்தனையாளன்.

குரு : நான் பன்முகச் சிந்தனையாளன்.


20.

A teacher will punish you with a stick 

A Guru will punish you with compassion 


ஆசான் :  
நான் பிரம்பால் அடிப்பேன்.

குரு : நான் அன்பால் அடிப்பேன்.

21.

A teacher is to pupil what a father is to son 

A Guru is to pupil what mother is to her child 


ஆசான் : நான் உனக்கு அறிவைத் தருவேன், அப்பாவைப் போல.

குரு : நான் உனக்கு அன்பைத் தருவேன், அம்மாவைப் போல.


22.

One can always find a teacher 

But a Guru has to find and accept you 


ஆசான் : நீ என்னைக் கண்டறியலாம், அது கடினமல்ல.

குரு : நான் தான் உன்னைக் கண்டறிவேன் அது சுலபமல்ல.


23.

A teacher leads you by the hand 

A Guru leads you by example 


ஆசான் : நான் சொல்லித் தருவேன்.

குரு : நான் வாழ்ந்து காட்டுவேன்.


24.

When a teacher finishes with you, you graduate 

When a Guru finishes with you, you celebrate  


ஆசான் : என்னை விட்டு விடை பெறுகையில் பட்டம் பெறுவாய்.

குரு : என்னை விட்டு விடை பெறுகையில் பட்டம் ஆவாய்.


25.

When the course is over you are thankful to the teacher 

When the discourse is over you are grateful to the Guru.


ஆசான் :  என்னிடம் கற்ற பின் நன்றி சொல்வாய்.

குரு :  என்னிடம் கற்ற பின் நன்றி கொள்வாய்.


அன்புடன்,

நிரஞ்சன்




Thank & Regards

Harimanikandan.V

H/P   :+91 9841267823
        
                                                  
ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
 
(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)





அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)