Monday, February 28, 2011

[vallalargroups:3935] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.

vallar logo.JPG 
 
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா  நெறியே குவலயமெல்லாம் !
ஜீவகாருண்யமே மொட்சவீட்டின் திறவுகோல்!
 
ஆண்மீக அன்பர்களுக்கு வந்தனம்!
 
 அன்பர்களே முன்பு ஒரு காலத்தில் சிவபாலன் என்ற ஒரு அன்பர் தன் மனைவி சிவ நங்கயுடன்  சிவநேசநல்லூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்தார்கள் சிவபாலன் தெய்வ நம்பிக்கை உடையவர் அதாவது நமது அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடத்தில் மிகுந்த பற்று கொண்ட சிதம்பரம் ராமலிங்கம்  வள்ளல் பெருமான் காட்டிய ஜீவகாருண்ய கொள்கையை சிறிதும் நெறிதவராம்ல்
ஒவ்வொருநாளும் அவர் தன்னால் முடிந்தவரை பலகோவில்களுக்கு சென்று தெய்வத்தின் பெயரால்  வாய்பேசா உயிர்கள் பலியிடபடுவதை  கண்டித்து அவர்களிடம் தெய்வம் எங்காவது தான் தந்த உயிரை கொள்ள நினைக்குமா  கடவுள் தான் நம்மையெல்லாம் படைத்தார்  அந்த கடவுள்  நம்மை அழிக்க நினைப்பாரா  நம்மை படைத்த தெய்வம் தாயுள்ளம் கொண்டவள் ஒருதாயானவள்    பெற்றதம் பிள்ளையை பலிகேட்பாளா ஒருபோதும் கேட்கமாட்டாள்  என்று பாமர  மக்களும்  புரிந்து கொள்ளும் அளவிர்க்கு எடுத்து சொல்லி  கோவில்களில்  பலிகொடுப்பதை தடுத்தும் மற்றும்  பிற உயிர்களின் பசிப்பிணியை
கண்டு தன் வருந்தி அவைகளுக்கு உணவு என்னும் மருந்தை கொண்டு அவைகளின் பசியை போக்கிவந்தார்  ஆனால் அவருக்கு வாய்த்த மனைவியோ நேர் எதிர்மாரனவள் எப்படி என்றால் வயல்வெளியில் ஒரு எலியோ அல்லது ஒரு புறாவோ கண்ணில் பட்டால் அவைகளை கொன்று தன் வயிற்றில் புதைக்கும் கல்நெஞ்சம் கொண்டவள் ஜீவகாருண்யம் சிறிதும் இல்லாதவள்  இப்படி பட்ட தன்மனைவியை எப்படியாகிலும் நல்வழிக்கு கொண்டுவரவேண்டும் அதாவது தெய்வசிந்தனை மற்றும் ஜீவகாருண்ய தயவுடையவலாக   மாறவேண்டும் என்று சிவபாலன் தினந்தோறும்  தெய்வீக  கதைகளையும்  ஜீவகாருண்யத்தை  உணர்த்தும் அருட்பா பாடல்களை  பாடி அதன் உட்பொருளை சொல்லியும்  அதாவது இந்த தேகம்  அழியக்குடியது ஆனால் நமது ஆன்மா அழிவற்றது அழிவற்ற இந்த ஆன்மா இந்த பூத உடலில் குடிகொண்டுள்ளது  ஆகவே நம் உடலை  தூய்மையாக வைத்திருக்க வேண்டும்  எவ்வாரெனில் கடும் நாற்றத்தை தரக்கூடிய பிற உயிர்களின் தசைபிண்டங்களை நம் வயிற்றில் புதைத்தால் நமது ஆன்மா எவ்வாறு தூய்மையாக இருக்கும் எனவே அதைவிடுத்து நம்முடைய இந்த தேகம் வளம்பெற  நல்ல   காய் பழங்கள் கீரை  போன்ற தாவர உணவுகளை உண்டு  நமது உள்ளத்தை நன்மார்க்கத்தில் செலுத்தி இறைவனை வழிபட்டால் நமது ஆன்மா தூய்மை அடையும் என்று அவர் தினந்தோறும் ஓதிவந்தார் ஆனால் சிவ நங்கையோ சற்றும் இவற்றை  எல்லாம்  செவிமடுக்கவில்லை அவள் ஒவ்வொருநாளும்  கதைகளை  கேட்டுவிட்டு முன்னுக்குபின் முரணாக பேசிவந்தாள் அவள் தன் நிலையில் சற்றும் மாறவில்லை  சிவநேசன் நாம் எவ்வளவு தான் தர்மசிந்தனைகளை ஓதினாலும்  எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகபோய்விட்டதே வருந்தி   தான் வணங்கும் வாடிய பயிரை கண்டபோது எல்லாம் வாடிய நமது வடலூர் வள்ளல் பெருமான் சிதம்பரம் ராமலிங்கம் அவர்களிடம் அவர் தினந்தோறும் முறையிடலானார் இப்படியே சிலகாலம் கடந்தன ஒருநாள் வயதான பெரியவர் ஒருவர் சிவநேசன் இல்லம் நாடிவந்து அம்மா பசிக்கிறது சற்று உணவு இருந்தால் போடுங்கள் தாயே என்று வாயிலில் நின்றபடி கேட்டார் ஆனால் அப்பொழுது சிவநேசன் வீட்டில் இல்லை அதே நேரத்தில் உள்ளிருந்து ஒருகடும் குரல் கேட்டது எவ்வாரெனில் யாரையா நீ வேலை  எதாகிலும் செய்து பிழைக்க வேண்டியது தானே என்று  இந்த பரதேசிகளுக்கு இது ஒருபொழப்பு வந்துடுரானுங்க என்று கடும் சொல் சொல்லி அனுப்பிவிடுகிறாள்  சிவநங்கை , இவள் கையேந்தும் கரம் ஒவ்வொன்றும்  ஆண்டவனின்  அருட்கரம் என்று அறியாதவள் போலும்  என்று அந்த பெரியவர்  மனம்போல் வாழ்வாய் அம்மா என்று  வாழ்த்தி சென்றார் இப்படியே சிலகாலம் சென்றன மனிதனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் முதுமை வரும் அப்பொழுது நாம் நடந்துகொண்ட  பழக்கவழக்கங்களுக்கு  தக்கவாறு பிணியும் சாக்காடும்  வந்துசேரும் என்பதிர்ர்க்கு  உதாரணமாக   சிவ நங்கை வயோதிகம் அடைந்து வியாதியால் அவதியுரளானால் அப்பொழுது அவள் வசிக்கும் வீதி வழியாக  பெரியவர்   ஒருவர் மனம் போல் வாழ்கிறாயா மகளே என்று கேட்டுவிட்டு சென்றுவிட்டார் அந்த பெரியவர் கூரிய சொல் அவள் மனதில் பசுமரத்தில் ஆணிதைத்தாற்போல்  பதிந்தது எவ்வாரெனில்  இவள் முன்பு ஒருநேரத்தில் அந்த பெரியவர் பசிஎன்று வந்து உணவு கேட்டபொழுது எவ்வளவு கடுஞ்சொல்  கூறி வாய்க்கு வந்த படியெல்லாம் வைதாள் அவைகளெல்லாம்  இப்பொழுத்து அவள்  கண்முன்னே  நிழ்ற்படம்போல் காட்சியளித்தது மற்றும்   என்னுடைய  கணவர் எனக்கு எவ்வளவு நீதிக்கதைகளையும்  ஜீவகாருண்ய மார்க்கத்தையும் பிற உயிரனங்களை கொன்று நம் வயிற்றில் புதைக்க கூடாது அவ்வாறு புதைத்தால் நம் உடல் சுடுகாடாக மாறிவிடுமே என்றெல்லாம் கூறினார் மற்றும்  பசிஎன்று  யார்வந்தாலும்   அவர்தம்  பசிப்பிணியை உணவு என்னும் மருந்தை கொண்டு  போக்கவேண்டும்  என்றெல்லாம் கூறினார் அவற்றை எல்லாம் நான் கடுகளவேனும் சிந்திக்காமல்  பெரியவர்களை  உதாசினபடுத்தியதால்  அல்லவோ எனக்கு இவ்வாறு பிணி மூண்டது என்று வருந்தினால்  ஒருமனிதன் தான் முன் செய்த தவறை நினைந்து வருந்தும்போது  கடவுள் அவன் முன்னே காரியபடுவார் என்பதிர்ற்கு ஏற்ப்ப இறைவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் சிவ நங்கையின்  சொப்பனத்தில் தோன்றி தங்கள் இதுநாள்வரையில்  செய்த துன்மார்க்க செயலை நினைந்து வருந்தியபோதே தாங்கள்  தூய்மையானவர்களாக  மாறிவிட்டீர்கள் எனவே தாங்கள் இன்றுமுதல் தங்கள் கணவர் கூறியபடி  ஜீவகாருண்ய சிந்தனையோடு  பிற உயிர்கள் பசியினால் வருந்துபோது அவைதம் பசிப்பிணியை 
 போக்கிவாருங்கள் என்று கூறினார் உடனே சிவ நங்கை இலங்கன்றானது தாய் பசுவை நாடி ஓடிவருவதை ஓடிவந்து  தன் கணவனின் பொற்பாதங்களில் விழ்ந்துவணங்கி அடியாள் முன்பு அறியாமல் செய்த பிழியானைத்தயும் பொருத்து  மன்னித்தருலவேண்டும் கூறி தான்  சொப்பனத்தில்  கண்ட காட்சியை எல்லாம்  ஒன்றுவிடாமல்  கூறினாள் மனம்மாறிய தன்மனைவியை  பார்த்த  சிவநேசனுக்கு  ஆனந்தம் எவ்வாரெனில் கார்மேகத்தை கண்ட மயில்  ஆடுவதைப்போல்  அவன் மனம் ஆனந்தத்தில் முழ்கியது  இவற்றுக்கு  எல்லாம் காரணமாக இருந்த அருட்பெருஞ்சோதி ஆண்டவருக்கு நன்றியை தெரிவித்தவாறு  தன்மனைவியை பார்த்து இன்றுமுதல் நாம் இருவரும் இங்கே ஒரு  தருமசாலை  அமைத்து அதில் நித்தம் பசிஎன்று வரும் அடியார்களுக்கு உணவு என்னும் மருந்தை கொண்டு  அவர்களின் பசிப்பிணியை போக்குவோம்  கூறினார் தன் கணவனின் வாக்கை வேதவாக்காக  சிரமேற்கொண்டு  அன்றுமுதல் தினந்தோறும் திருஅருட்பா என்னும்  திருவமுதத்தை   வாசித்து  அதன்  உட்பொருளை உணர்ந்து கொண்டு பசிஎன்று யார்வந்தாலும்  அவர்தம் பசிப்பிணிபோக்கி செயல்பட்டு வந்தார்கள்    இவ்வாறு செயல்பட்ட சிவநேசன் தம்பதியரை  அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அவர்கள் வாழ்வில் எல்லா  நலன்களும்  பெற்று சீரும்  சிறப்புமாக வாழ்க என்று அருளாசி வழங்கினார்  
 
எனவே அன்பர்களே நாமும் பிற உயிர்களின் பசிப்பிணியை  போக்கி உண்மை அன்பால் வழிபாடு செய்து வணங்கி வருவோமேயானால்  கடவுள் நம்முள்ளே காரியபடுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை 
 
 
ஆகவே பசி என்று யார்வந்தாலும் அவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

 

ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல்!
 
See full size image
 
 
 

 


என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன் 
 
 
ஆன்மநேய,அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்.9940656549,
                           9677160065
 
 
 
 
       
 
 
 
 
 
 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)