Saturday, June 29, 2013

[vallalargroups:4986] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு ! பகுதி -7-

 
                      
            
                                
 
                    பசித்திரு !               தனித்திரு !               விழித்திரு !
 
 
                               அருட்பெருஞ்சோதி !  அருட்பெருஞ்சோதி !
                               தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி
!
 
      கொல்லாவிரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
      ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல் !
 
     எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
 
    இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !                பகுதி -7-
 
    அன்புஉள்ளம் கொண்ட ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் நாம் நம் வாழ்க்கையில்
   உணர்ந்துகொள்ளவேண்டிய தத்துவபாடல் சிலவற்றை கொடுத்துள்ளோம் எனவே அன்பர்களே
 நாமும்   ஜீவகாருண்ய தயவோடு வாழ்ந்து பெறவேண்டியதை   விரைவில் பெற்றுக்கொள்வோம்
 
                  61,         காரத்திற்கு வீரமென்ற கெந்தியே ஆதாரம் !
                               சாரத்திற்கு பூரமென்ற ரசமே ஆதாரம் !
                               வீரத்திற்கு உப்பென்ற பூநீரே ஆதாரம் !
                               பூரத்திர்கு வழலைஎன்ற அமுரியே ஆதாரம் !
 
                 62,         நீர்நெருப்பு காற்றினால் பூனீர் பூத்திடும் !
                              கார்த்திட மேனிவாசி யோகத்தில் நிலைத்திடும் !
                              பார்த்திட மூப்புவால் பொன்னுடல் ஜொலித்திடும் !
                              சார்ந்திட ஞானத்தால் உடலைஉயிர் கார்த்திடும் !
 
                 63,        ஒன்றான கடலினில் மீன்கள் இரண்டாகும் !
                              நன்றான மீன்கள் இரண்டும் ஒன்றாகும் !
                              மீன்களை அதன்நீரில் கெந்தியால் சமைத்திடும் !
                              மண்மீது தரித்திரம் விட்டோடும் அறிந்திடும் !
 
                64,         கல்லினில் வெண்மை சிகப்பு நிறமுண்டு !
                             கல்லென்றால் கல்லில்லை சொல்லில் சூட்சமுண்டு !
                             கல்லினில் உடலுயிர் ஆத்மா இயக்கமுண்டு !
                             கல்லினில் தகப்பனை உண்டிடும் தாய்உண்டு!
 
                65,        தனைபோல் உள்ளவனை தனஉள்ளே கிரகிக்கும் !
                            தனைபோல் தயார் ஆவியை தயாரிக்கும் !
                            தனைபோல் கோடிரவி ஒளியது பிரகாசிக்கும் !
                            தனைபோல் மூன்றும் இரண்டும் ஒன்றாகும் !
 
               66,        ஆதியில் மூப்பு அரனார்முடித்து வைத்தார் !
                           நீதியாய் சன்மார்க்கி பிரித்துகூட்டி முடித்தார் !
                           சாதிமான் நன்மார்க்கி மூப்பைஉண்டு களித்தார்  !
                           ஜோதிசுழி நடராசன் ஆனந்தவாய் நடித்தார் !    
 
              67,        அந்தரத்தில் ஆடுகின்ற நடராசனே சிற்றம்பலம் !
                          தந்திரத்தில் நீஉண்டால்  உன்உடலே பேரம்பலம் !
                          மந்திரத்தில் மெளனம் வாசியோகம் பொன்னம்பலம் !
                          கெந்திரசத்தில் விளைந்தது கனகசபை அம்பலம் !
 
              68,       பொற்பாந்த மூப்புவை போதம் புசித்தவர் !
                         கற்பாந்த காலங்கள் அழியாமல் வாழ்வார் !
                         கற்றவர் என்றாலே காலனை வென்றவர் !
                         நற்றவ வாழ்க்கையால் சிரஞ்சீவி யாவார் !
 
             69,        வேகாத மூப்புவை உண்டாலே உலகினில் !
                         சாகாமல் வாழ்வாரே சஞ்சலம் இல்லாமல் !
                         போகாத புனலாலே வேகாத தலையினால் !
                         சாகாத காலே மெய்பொருள் என்றுசொல் !
 
            70,        மண்ணிலும் விண்ணிலும் உன்னிலும் உண்டு !
                        என்னிலும் மற்றெங்கும் சுற்றிலும் உண்டு !
                        கண்ணில் பரம்பொருள் தன்னைநீ கண்டு !
                        தன்மையாய் தவம்செய்தால் மோட்சம்தான்உண்டு!
 
                                                                                                                       தொடரும் ......
                                                         
                                                             (இப்பாடலை இயற்றியவர் பொ. அன்பழக சாமி,
                                                              நெ.15,7,வது சந்து,பேய் கோபுர வீதி ,திருவண்ணாமலை )
 
 
     அன்பர்களே ஒளிமயமான  நம்முடைய வாழ்க்கைக்கு உற்றதுணையாக இருப்பது சூரியனாகும்
அந்த சூரியதேவனை போற்றி புகழாதவர்கள் வணங்காதவர்கள் யாரும்மில்லை என்று சொல்லலாம் 
அதனால் தான் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்பார்கள் அதைப்போலவே சந்திரதேவனையும் 
திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும் என்பார்கள் ஞானிகள் உயிர்வளரவும் பயிர்வளரவும் காரணமாக 
இருக்கும் சூரியனையும் சந்திரனையும் நாம் அன்றாடம் தெய்வ ஆலயங்களுக்கு சென்று வழிபடுகிறோம் 
 
இதைதான் நம் வடலூர் வள்ளல்பெருமான் இடைகலை பிங்கலை என்பார்கள்  உயிர்வளரவும் பயிர்வளரவும் 
எவ்வாறு சூரியனும் சந்திரனும் விளங்குகிரார்களோ அதைப்போல நாமும் பிறஉயிர்கள் நோயினாலும் 
பசியினாலும் உடல் உபாதையாலும் துன்பப்படும்போது அவற்றின் துயரங்களை எல்லாம் நம்முடைய 
துயரங்களாக பாவித்து அதாவது வாடிய பயிருக்கு வருத்தத்தை  போக்கும்  மேகத்தை  போல  நாமும்   நம்மால் இயன்ற நமைகளை செய்யவேண்டும்  
     
    எனவே நற்சிந்தைனை கொண்ட சான்றோர் பெருமக்களே சற்றே சிந்தித்து பாருங்கள் நமது  வடலூர்  வள்ளல்பெருமான் கூரிய உயிர் நேயத்தையும்  பசிப்பிணி போக்குதளையும் நாம் நம் வாழ்வில் இலட்சியமாக கொண்டு வாழ்ந்து வருவோமேயானால்  எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர்  நம்முள்ளே காரியப்டுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை .
 
 
   பசி என்று வருவோர்க்கு உணவுகொடு அதுவே ஜீவகாருண்யம் !
   ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல் !
 
   எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

     
 
  கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
 
  என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
  ஆன்மநேய .அ.இளவரசன்
  வள்ளலார் உயிர்வதை தடுப்பு இயக்கம்
  நெ.34,அண்ணா தெரு,
   திருவள்ளுவர் நகர்,
   ஜமின் பல்லாவரம்
   சென்னை -6000 043
   கைபேசி:9940656549

--
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
 
 

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)