பசித்திரு ! தனித்திரு ! விழித்திரு !
அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி !
தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி !
கொல்லாவிரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு ! பகுதி -6-
அன்புஉள்ளம் கொண்ட ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் நாம் நம் வாழ்க்கையில்
உணர்ந்துகொள்ளவேண்டிய தத்துவபாடல் சிலவற்றை கொடுத்துள்ளோம் எனவே அன்பர்களே
நாமும் ஜீவகாருண்ய தயவோடு வாழ்ந்து பெறவேண்டியதை விரைவில் பெற்றுக்கொள்வோம்
அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி !
தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி !
கொல்லாவிரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு ! பகுதி -6-
அன்புஉள்ளம் கொண்ட ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் நாம் நம் வாழ்க்கையில்
உணர்ந்துகொள்ளவேண்டிய தத்துவபாடல் சிலவற்றை கொடுத்துள்ளோம் எனவே அன்பர்களே
நாமும் ஜீவகாருண்ய தயவோடு வாழ்ந்து பெறவேண்டியதை விரைவில் பெற்றுக்கொள்வோம்
51, காலனை வென்றிட மூப்புவே ஈசன் !
ஞாலத்தால் கதிர்மதி சேர்ந்திட பிரகாசன் !
ஆலத்தை உண்ட அமிர்த லிங்கேசன் !
மேலான சிதம்பரம் மேவும் நடராசன் !
52, உடலுயிர் மூப்புவால் பிரியாமல் வைத்தான் !
திடம்பெற வாசியால் ஜோதிநிலை தந்தான் !
கூடலால் ஆண்பெண்ணால் உலகத்தை படைத்தான் !
ஆடலால் அனைத்தையும் இயங்கிட செய்தான் !
53, சிவசக்தி இரண்டுமே சேர்ந்திடில் சித்தி !
சிவகங்கை அமிர்தத்தை உண்டாலே முக்தி !
தவம் செய்யும் பெரியோரை பணிந்தாலே பக்தி !
சிவமான மலைஜோதி கண்டாலே முக்தி !
54, காரத்தை கண்டாலே கனகம் சித்தியாகும் !
சாரத்தால் சண்டன் துயர்விட்டு போகும் !
வீரமாம் வெள்ளை கல்லுப்பு வேதையாகும் !
பூரமாம் பூநீர் வ்ழ்லையால் வாழ்வாகும் !
55, சித்த ஸ்தலம்தனில் தெய்வம் இருந்திடும் !
மத்த ஸ்தலங்களில் மகிமைநீ அறிந்திடும் !
பித்தன் சிவன்ஜலம் சிரசினில் தங்கிடும் !
சுத்த ஜலமதால் சரக்கெல்லாம் வெளுத்திடும் !
56, கெந்தி ரசத்தினால் கீர்த்திநாம் பெறலாம் !
தொந்திக்க வகைஉணர்ந்தால் முக்தி அடையலாம் !
மந்திமனம் அடக்கினால் தவத்தில் இருக்கலாம் !
இந்திரன் போல்என்றும் சொர்க்கத்தில் வாழலாம் !
57, மண்ணில் விளைந்தது தண்ணீரில் பூப்பே !
தண்ணீரில் விளைந்தது நீர்மேல் நெருப்பே !
விண்ணில் கூத்தனாம் குதம்பையின் சிரிப்பே !
கண்ணில் நாட்டியம் நடராசன் களிப்பே !
58, அண்டமாய் நின்றது பிண்டத்தின் மகிமையே !
பிண்டமாய் வந்தது அண்டத்தின் தன்மையே !
தண்டலை விளங்கும்தில்லை நடராசன் உண்மையே !
வண்டல் இரண்டினால் சொர்ணத்தின் நிலைமையே !
59, குப்பை வழலையால் கோடிவந்தனம் காணலாம் !
அப்பை மையாக்கி அட்டமாசித் தாடலாம் !
உப்பை அகற்றினால் உடல்குற்றம் நீக்கலாம் !
கைப்பை நீக்கினால் கடவுளை காணலாம் !
60, விண்ணிலாடும் சொக்கன் உப்பினில் சூட்ச்சம்!
கண்ணிலாடும் விமலன் சுண்ணாம்பில் மோட்ச்சம் !
என்னிலாடும் கூத்தன் தவத்தின் கடாட்ச்சம் !
மண்ணிலாடும் வித்தன் பூநீர்க்கு ரவிசூட்ச்சம் !
தொடரும் .....
(இப்பாடலை இயற்றியவர் பொ. அன்பழக சாமி ,நெ .15,7,வது சந்து ,
பேய் கோபுர வீதி ,திருவண்ணாமலை )
(இப்பாடலை இயற்றியவர் பொ. அன்பழக சாமி ,நெ .15,7,வது சந்து ,
பேய் கோபுர வீதி ,திருவண்ணாமலை )
எனவே அன்பர்களே ஞானிகள் இந்த உலகபொருள் மீது சற்றும் பற்றில்லாமல் அவர்கள் எப்பொழுதும் இறைவனையே சிந்தித்திருப்பார்கள்.அவர்கள் திருஒட்டையும் எழுநிதியையும்
ஒன்றாக பாவிப்பவர்கள் அவர்கள் அடுத்தவேளை உணவிர்க்குகூட கவலைகொள்ளமாட்டார்கள்
சதாயிந்த உலக நன்மைக்காக சிந்திக்கும் அவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்க்கே உணவு தேடிவரும்
ஒருநாள் வடலூர் வள்ளல் பெருமானார் வீடுதிரும்ப வெகுநேரம் ஆகிவிட்டது வீடு தாழிட்டிருந்தது அய்யா அவர்கள் இல்லத்தில் இருப்பவர்களை எழுப்பமனம்மில்லாமல் மிகுந்த பசியுடன் வீட்டின்
வெளித்திண்ணையில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார்கள் அப்பொழுது இந்த உலகைபடைத்த
அன்னை அய்யாவின் தமக்கையார் வடிவேலே வந்து வெண்பொங்கல் ஊட்டினார்கலாம் இந்த நிகழ்வை
பெருமான் அவர்களே அருட்பா பாடல்களில் எழுதியுள்ளார்கள்.ஆகவே ஞானிகளுக்கு எச்சமயம்
எதுதேவை எனபதை அறிந்து உதவிபுரிந்து அவர்களுடனே ஒன்றியிருப்பார்கலாம் .
கடவுளைநாம் கோவில்குளங்களில் தேடவேண்டாம் பிறகுநாம் கடவுளை எங்கே காணலாம்
என்றால் ஒவ்வொரு ஜீவனிலும் அதாவது இந்த உலகத்தில் வாழுகின்ற அனைத்து உயிரிலும்
கடவுளை காணலாம் ஆகையால் ஒருஜீவன் பசியினால் வருந்தும்போது அவற்றிற்கு ஆகாரம் கொடுத்து
பசிப்பிணி போக்கினால் பலனூராயிரம் ஆண்டுகள் காட்டில் தவம்செய்து பெறுகின்ற பலன் எவ்வளவோ
அதைவிட பண்மடங்குகிடைக்கும் இதுசத்தியம்
எனவே அன்பர்களே நாமும் ஜீவகாருண்ய சிந்தனையோடு வாழ்ந்து பெறவேண்டிய லாபத்தை விரைவில்
பெற்று சீரும்சிறப்புடன் வாழ்ந்து நாம் இந்த உலகில் பிறந்ததின் பயனை அடைவோமாக
பசி என்று வருவோர்க்கு உணவுகொடு அதுவே ஜீவகாருண்யம் !
ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொள்ளா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
ஆன்மநேய .அ.இளவரசன்
வள்ளலார் உயிர்வதை தடுப்பு இயக்கம்
நெ.34,அண்ணா தெரு,
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை -6000 043
கைபேசி:9940656549
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
ஆன்மநேய .அ.இளவரசன்
வள்ளலார் உயிர்வதை தடுப்பு இயக்கம்
நெ.34,அண்ணா தெரு,
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை -6000 043
கைபேசி:9940656549
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
No comments:
+Grab this
Post a Comment