Dear Sanmarkka Anbargale!!!
திரு-நீறு அணியலாமா? வள்ளலார் பதில்:எவ்வாறு திருநீறு அணிய வேண்டும் என வள்ளலார் கீழே குறிபிடுகின்றார்.
"சிவாயநம" என்றிடு நீறு.... 25.புண்ணிய விளக்கம் #834. பாடற் கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும் கூடற் கினிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம்அளிக்கும் ஆடற் கினிய நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாயநம என் றிடுநீறே |
#835. கருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும் பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும் அருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் திருமால் அயனும் தொழுதேத்தும் சிவாயநம என் றிடுநீறே |
#836. வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந் துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும் ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் செய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாயநம என் றிடுநீறே |
#837. கோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும் நீல மணிகண் டப்பெருமான் நிலையை அறிவித் தருளளிக்கும் ஆல வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் சீலம் அளிக்கும் திருஅளிக்கும் சிவாயநம என் றிடுநீறே |
#838. வஞ்சப் புலக்கா டெறியஅருள் வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும் கஞ்சத் தவனும் கரியவனும் காணற் கரிய கழல்அளிக்கும் அஞ்சில் புகுந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் செஞ்சொல் புலவர் புகழ்ந்தேத்தும் சிவாயநம என் றிடுநீறே |
#839. கண்கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டிதனை விண்கொள் அமுதை நம்அரசை விடைமேல் நமக்குத் தோற்றுவிக்கும் அண்கொள் வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் திண்கொள் முனிவர் சுரர்புகழும் சிவாயநம என் றிடுநீறே. |
#840. நோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத் தூய விடைமேல் வரும்நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும் ஆய வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் சேய அயன்மால் நாடரிதாம் சிவாயநம என் றிடுநீறே |
#841. எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும் அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் திண்ண மளிக்கும் திறம்அளிக்கும் சிவாயநம என் றிடுநீறே |
#842. சிந்தா மணியை நாம்பலநாள் தேடி எடுத்த செல்வமதை இந்தார் வேணி முடிக்கனியை இன்றே விடைமேல் வரச்செயும்காண் அந்தோ வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் செந்தா மரையோன் தொழுதேத்தும் சிவாயநம என் றிடுநீறே |
#843. உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக் கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும் அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும் சிவாயநம என் றிடுநீறே |
#844. உற்ற இடத்தில் உதவநமக் குடையோர் வைத்த வைப்பதனைக் கற்ற மனத்தில் புகுங்கருணைக் கனியை விடைமேல் காட்டுவிக்கும் அற்றம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் செற்றம் அகற்றித் திறல் அளிக்கும் சிவாயநம என் றிடுநீறே |
#1294. நாடும் சிவாயநம என்று நாடுகின்றோர் கூடும் தவநெறியில் கூடியே - நீடும்அன்பர் சித்தமனைத் தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர் உத்தமனை நெஞ்சமே ஓது |
#2260. நான்செய்த புண்ணிய மியாதோ சிவாயநம எனவே ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற் றேன்எனை ஒப்பவரார் வான்செய்த நான்முகத் தோனும் திருநெடு மாலுமற்றைத் தேன்செய்த கற்பகத் தேவனும் தேவருஞ் செய்யரிதே |
#2285. காரே எனுமணி கண்டத்தி னான்பொற் கழலையன்றி யாரே துணைநமக் கேழைநெஞ் சேஇங் கிருந்துகழு நீரே எனினுந் தரற்கஞ்சு வாரொடு நீயுஞ்சென்று சேரேல் இறுகச் சிவாயநம எனச் சிந்தைசெய்யே |
#2371. கான்போல் இருண்டஇவ் வஞ்சக வாழ்க்கையில் கன்னெஞ்சமே மான்போல் குதித்துக்கொண் டோடேல் அமுத மதிவிளங்கும் வான்போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச்செந் தேன்போல் இனிக்கும் சிவாயநம எனச் சிந்தைசெய்யே |
#2400. மருக்கா மலர்க்குழல் மின்னார் மயல்சண்ட மாருதத்தால் இருக்கா துழலுமென் ஏழைநெஞ் சேஇவ் விடும்பையிலே செருக்கா துருகிச் சிவாயநம எனத் தேர்ந்தன்பினால் ஒருக்கால் உரைக்கில் பெருக்காகும் நல்லின்பம் ஓங்கிடுமே |
--
Please visit Our WebSite for all Discussions:
http://vallalargroupsmessages.blogspot.com/
No comments:
+Grab this
Post a Comment