5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.
வாராத-(ஊழால்) வரக்கூடாதவைகள், வருந்தி அழைத்தாலும் - பரிந்து அழைப்பினும்,
வாரா - வாராவாம்;
பொருந்துவன - (ஊழால்)
வரக்கூடியவை,
போமின் என்றால் - போயிடுங்கள் என வெறுப்பினும்,
போகா-போகாவாம்;
இருந்து ஏங்கி - (இவ்வுண்மை யறியாமல்) இருந்து ஏக்கமுற்று,
நெஞ்சம் புண் ஆக - மனம் புண்ணாகும்படி. நெடுந்தூரம் தாம் நினைந்து - (அவற்றைத்) தாம் நெடுந்தூரம் சிந்தித்து,
துஞ்சுவதே - மாண்டு போவதே,
மாந்தர் தொழில் - மனிதர் தொழிலாக வுள்ளது.
இருவினைப் பயன்களாகிய இன்பதுன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்க
தன்று.
No comments:
+Grab this
Post a Comment