*சேலத்தின் மகானோ...??* மகாசித்தரோ...? விலங்குகளுக்கு உணவளிக்கவே பிறவி எடுத்த மாமனிதர்.!
கேட்டார் பாருங்க ஒரு கேள்வி
கோடி பதில் உள்வைத்து.!
இன்று மதியம் சேலம் கலெக்டர் பங்களா பின்புறம் காவல் துறை DIG அலுவலகத்திற்கு சென்றிருந்தேன் காவல்துறையை சார்ந்த நண்பர் திரு.முருகனோடு பேசிக்கொண்டிருந்தேன் அப்போது அவர் எனக்கு வயதான முதியவர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்.
அவரின் வயது 86.நாட்டு வைத்தியம் செய்வாராம் தன் சிறிய இரண்டு சக்கர வாகனத்தில் விதவிதமான பைகளில் பலவிதமான உணவுகளை மாட்டி வைத்திருந்தார் ஒரு பெட்டியிலும் உணவுகள் வைத்திருந்தார் அவர் ஓர் சப்தம் செய்தார் அந்த இடத்தில் பல தெரு நாய்கள் ஓடி வந்தன வரிசையாக அவைகளுக்கு இனிப்பு,காரம் என வித விதமாக விருந்து படைப்பது போல் கொடுத்தார் பின் இட்லி,பழங்களை பிட்டு அருகிலிருந்த காம்பவுண்ட் சுவர்மீது வைத்தார்.நான் எதற்காக அய்யா அங்கு வைக்கிறீர்கள் என்றேன் இப்ப பாருங்க அதைச் சாப்பிட வருவாங்க உங்களுக்கே புரியும் என்றார். சற்று நேரத்தில் அணில்கள் ஓடோடி வந்து உணவுகளை சாப்பிட்டது.பிறகு மற்றொரு இடத்தில் உணவுகளை வீசினார் பறவைகள் வந்து சாப்பிட்டது. மண்ணில் பொந்துகள் உள்ள இடத்தில் உணவுகளை வைத்தார் பெருக்கான் வந்து சாப்பிட்டது
எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது என் வாழ்நாளில் எலி வகை பெருக்கான்களுக்கு உணவு வைப்பதையும் அவைகளும் உடனே வந்து சாப்பிடுவதையும் இப்போது தான் பார்த்தேன்.
மீதம் உள்ள உணவுகளை குரங்குகளுக்கு வைக்கிறார்.
தினமும் ரூ.2000/=க்கு உணவுகள் வாங்குகிறார்.
கலெக்டர் பங்களா, அஸ்தம்பட்டி,புதூர்,செட்டி சாவடி,கொண்டப்பநாய்கன் பட்டி,ஏற்காடு அடிவாரம் என்று சுமார் 20.கிலோமீட்டர்
தூரம் தன் சேவையை செய்கிறார்.
நான் அவரிடம் தங்களுக்கு வருமானம் ஏது ஐயா என்று கேட்டேன் நாட்டு வைத்தியம் பார்ப்பேன் தினமும் 2000.கிடைக்கும் வண்டிக்கு பெட்ரோல் போட்டது போக மீதம் ஜீவன்களுக்குத்தான் உணவு வாங்கி அளிப்பேன் என்றார். எவ்வளவு காலமாக இதை செய்கிறீர்கள் என்றேன்.
சுமார் 65.வருடங்களாக செய்கிறேன் என்றார்.
உங்களுக்கு என்ன நன்மை இதனால் என்று கேட்டேன் சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்து நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு நீ பதில் சொல் என்றார்.
இந்த 65.ஆண்டுகாலமாக நான் செய்யும் இந்தப் பணியில்,ஒரு நாள் கூட எனக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டதில்லை,எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை தொடர் மழை பொழிந்தாலும்
எனக்கு தடை ஏற்பட்டதில்லை
தர்மம் செய்ய எல்லோராலும்
முடியாது இதெல்லாம் பிறவி பயன் பிராப்தம் வேணும் தம்பி என்று முடித்தார்.!
65.ஆண்டு சேவை...???
தடை ஏதுமில்லை...???
100.பதில் மனதில் ஓடின.!!
இவரை சந்தித்தது மிகவும் பெருமையென மகிழ்கிறேன்
உறவுகளே...
சேலம் பகுதி உறவுகளே...
இவரைக் கண்டால் ஐந்துநிமிடம் பேசி,ஒரு வாழ்த்து கூறி.
ஆசி பெற்று செல்லுங்கள்.
வாசித்த நெஞ்சங்களுக்கு
வணக்கம்.!
கண்ணால் கண்டதை காணிக்கை யிக்கியுள்ளேன்.
விரைவில் அந்த அற்புத மனிதருடன் ஒரு நாள் பயணிக்க உள்ளேன்.🙏🙏🙏
No comments:
+Grab this
Post a Comment