புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாடிமனைப்பட்டி என்ற கிராமத்தில், ஒருவர் கூட அசைவ உணவுகள் உண்ணாமல் வாழ்ந்து வருகின்றனர்.
* வாடிமனைப்பட்டி கிராம மக்கள் அனைவரும் வள்ளலாரின் சன்மார்க்க நெறியை பின்பற்றுகின்றனர். எனவே வள்ளலாரின் கொள்கைப்படி, கிராமம் முழுவதும் ஒருவர் கூட அசைவ உணவுகளை சாப்பிடுவதில்லை.
* வெளியூருக்கு உறவினர் வீடுகளுக்கு சென்றால் கூட சைவ உணவுகளை மட்டுமே உண்ணுவதாக கூறுகின்றனர்.
* திருமணத்திற்கு பிறகு கிராமத்தில் குடியேறும் பெண்களும் சைவமாக மாற்றப்படுகின்றனர். அதே போல, ஆடு கோழிகளை வளர்த்து விற்றால், அவை பலி கொடுக்கவோ, அல்லது இறைச்சிகளுக்கோ தான் பயன்படுகிறது என்பதால் இங்கு ஆடுகளோ கோழிகளோ வளர்ப்பதில்லை.
* கண்மாயில் ஏராளமாக மீன்கள் வளர்கின்றன. ஆனால், இந்த கிராம மக்கள் மீன்கள் பிடிப்பதில்லை. சைவ உணவுகளை மட்டுமே உண்பதால், ஆரோக்கியமாகவும், அதிக ஆயுள் வாழ்வதாகவும், கிராம மக்கள் கூறுகின்றனர்.
* புது புது அசைவ உணவுகளை நோக்கி மனிதனின் தேடல் தொடர்ந்து கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில், வாடிமனப்பட்டி கிராமமே சைவமாக மாறி நிற்பது அருகே உள்ள கிராம மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
+Grab this
Post a Comment