மண் விஷய இச்சை, பெண் விஷய இச்சை,பொன் விஷய இச்சை "ஓரணுத்துனையும் இல்லை என வள்ளலார் தன்னுடைய "சத்திய பெரு விண்ணப்பத்தில்" கூறுகிறார் .
அதே சமயத்தில் வள்ளலாருக்கும் வேறு ஒன்றில் இச்சை இருந்தது. அது என்ன ?
வள்ளலாரின் இச்சை -1
- மண்ணுலகதிலே, உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிதெனினும், கண்ணுறப் பார்த்தும், செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன். நின்னுடைய அருள் வலத்தால் அந்த வருத்தத்தை தவிர்க்கும் நல்வரத்தை தர வேண்டும் . இதுவே என்னுடைய இச்சை என கீழ் காணும் பாடலில் கூறுகிறார்.
வள்ளலாரின் இச்சை -2
-
ஞான "சமரச சுத்த சன்மார்க்க சங்கமே" கண்டு களிக்கவும்,
-
சங்கம்சார் திருக்கோயில் கண்டிடவும்,
-
துங்கமே பெறுஞ் சற்சங்கம் நீடூழி துலங்கவும்,
-
சங்கத்தில் அடியேன் அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய் என கீழ் காணும் பாடலில் கூறுகிறார்
Song No : 3406. தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம்சார் திருக்கோயில் கண்டிடவும்
துங்கமே பெறுஞ் சற்சங்கம் நீடூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Looking for local information? Find it on
Yahoo! Local --~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment