வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் உண்மையா ?
இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள்.
* இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம்
இவை முதலா இந்திர சாலங் கடையா உரைப்பார்
மயல் ஒருநூல் மாத்திரந்தான் சாலம் என அறிந்தார்
மகனேநீ நூலனைத்தும் சாலம்என அறிக
நான் அனைத்தையும் "எவ்வாறு" தெரிந்து கொள்வது?(அருளொளியால்)
செயல் அனைத்தும் "அருளொளியால்" காண்கஎன எனக்கே
திருவுளம் பற்றிய ஞான தேசிகமா மணியே
அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
- திருஅருட்பா 4176
Anbudan,
Karthikeyan
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment