Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Thursday, December 6, 2018
Monday, December 3, 2018
[vallalargroups:6057] கலியுக முடிவு சுத்தசன்மார்க்க யுகம் தொடக்கம்
🙏🔥🔥🙏🔥🔥🙏🔥🔥🙏🔥🔥🙏🔥🔥🙏
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங் கருணை !
அருட்பெருஞ்ஜோதி !
🙏🔥🔥 நிறை அருள் பூரணத்தால் பெற்ற தெருள் நிறை திருவருட்பா 🔥🔥🙏
🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼🌻🌼
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுள்ள உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 🔥🙏
கலியுக முடிவு சுத்தசன்மார்க்க யுகம் தொடக்கம் 🌺
கர்மசித்தர் ஆட்சி முடிவு ஞானசித்தர் ஆட்சி தொடக்கம்🌺
உருவ வழிபாடு முடிவு ஜோதி வழிபாடு தொடக்கம்🌺
சாதி சமய மதங்களின் முடிவு சமரச சுத்தசன்மார்க்கத்தின் தொடக்கம்🌺
மனிதநேயம் கடந்த ஆன்மநேயம் வெளிப்படுதல்🌺
கோயிலில் சென்று இறைவனிடம் பத்தி செய்து முக்தி பெற்றது நீங்கி,
ஒவ்வொரு உயிர்களின் தேகங்களையே கோயிலாகக் கொண்டு அவற்றின் உயிர்களையே கடவுளாக கண்டு அவைகளுக்கு உபகாரம் செய்கின்ற ஜீவகாருண்ய செய்கையே கடவுள் வழிபாடாகவும் அறிந்து, அந்த ஜீவகாருண்யத்தினால் மட்டுமே மோட்சமாகிய அருள்வீட்டை அடைந்திடும் வழியாகவும் கண்டுகொள்ளப்பட்டது 🌺
பிரபஞ்ச வரலாற்றில் முதன்முதலில் ஓர் ஆன்மா ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரண அருள் வல்லபத்தைப் பெற்றுக்கொண்டு அருள்சக்தியின் வடிவாய் நின்று இவ்வுலகை அரசாளுகின்றது🌺
இதுவரை இவ்வுலகில் நிலம்,
நீர்,
காற்று,
நெருப்பு ,
ஆகாசம் ,
சூரியன்,
சந்திரன் என்று ஏழு மூர்த்தங்களுக்கு கர்மசித்தர்களின் ஆட்சியில் ஆலயங்கள் கட்டப்பெற்று உருவ வழிபாட்டால் வழிபடப் பட்டது 🌺
ஆனால் ,
எட்டாவது மூர்த்தமான ஆன்மாவிற்கு என்று ஓர் ஆலயம் எங்குமே இல்லாமல் இருந்தது🌺
ஏனென்றால் எட்டாவது மூர்த்தமான ஆன்மாவிற்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்றால் ,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரண அருள் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு, பூரணஅருள்வடிவாகி,
அருட்பெருஞ்ஜோதி மயமாய் நின்று,
இவ்வுலகில் எல்லாம் செய்யவல்ல ஞானசித்தியைப் பெற்றுக்கொண்ட ஓர் சுத்தசன்மார்க்க ஞானசித்தரால்தான் ,
அட்ட மூர்த்தங்களின் கடைசி மூர்த்தமான ஆன்மாவிற்கு என்று ஒரு திருக்கோயிலை,
உண்மை கடவுள் வழிபாடான ஜோதிவழிபாட்டுடன் கட்டப்படவேண்டும் என்பது திருவருள் சித்தமாய் இருந்ததனால்,
நமது அருட்பெருந் தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமானும் இதுவரை இவ்வுலகில் யாரும் பெறாத பூரண அருள் அனுபவத்தை பெற்றுக்கொண்டதனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் ,
அருட்பிரகாச வள்ளல் பெருமானின் அகமாகிய சத்தியஞானசபையில் வந்தமர்கின்றார்கள்🌺
இதனால் ,
பூரண அருள் ஞானசித்தராய் ,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தனது அகமாகிய சத்தியஞான சபையில் கண்டு தரிசித்து அனுபவித்த " அகவாழ்வாகிய சிற்சபை " அனுபவத்தையும்,
அகத்திலிருந்து அனகமாக பெற்ற
" பொற்சபை வாழ்வாகிய அனகவாழ்வு " அனுபவத்தையும் பெற்றுக்கொண்டதால்,
இப்பிரபஞ்சத்தில் பக்குவ ஆன்மாக்களாகிய ஞானிகளும் அருளாளர்களும் தனது அகத்தே கண்டு அனுபவித்துவந்த அருட்பெருஞ்ஜோதி அருள் தரிசனத்தை ,
இனி,
இவ்வுலகவரும் புறத்தே கண்டு தரிசித்திட வேண்டி ஆண்டவரும் திருவுள்ளங்கொண்டு ,
முதன் முதலில் இப்பூவூலகில் புண்ணியபூமியாம் வடலூரில்,
இயற்கை உண்மை (சத்து) நிறைவாகிய திருவுருவை தரித்து,
இயற்கை விளக்கம்(சித்து) நிறைவாகிய சுத்த சிவானுபவ சத்தியஞானசபையில்,
இயற்கை இன்பம்(ஆனந்தம்) நிறைவாகிய ஓர் சிவானந்த ஒருமை திருநடச் செய்கையை இவ்வுலக உயிர்கள் அனைத்தும் இன்பம் அடையும் பொருட்டும்,
மற்றும் தனது சச்சிதானந்த உண்மையை(மெய்யறிவானந்தம்) எவ்வுயிர்களும் அறிந்து
அந்த சச்சிதானந்தமயமாய் அருள் வாழ்வு வாழ்ந்திட வேண்டியும் ,
வேதாந்தம்,சித்தாந்தம்,சுத்தவேதாந்நம்,
சுத்தசித்தாந்தம் கடந்த பூரண அருள்நிலையான சுத்தசன்மார்க்க சுகப் பெரு நிலையில் கண்டுகொள்ளப்பட்ட சுத்தசிவமாகிய அருட்பெருஞ்ஜோதி கடவுளை பற்றி அனைவரும் அறிந்து தெளிந்து அனுபவம் பெறுவதற்கும் என்றே,
வடலூர் பெருவெளியில் சத்தியஞானசபையை திருவருட்பிரகாசப் பெருமானாரால் கட்டிமுடித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் அத்திருச்சபையில் சித்திஎல்லாம் விளங்க திருநடம் செய்து அருள்பாலிக்கின்றார்கள் 🌺
இதன்பொருட்டு இவ்வுலகில் புலைகொலை தவிர்த்த சுத்தசன்மார்க்கப் பெருநெறியை திருவருள் சம்மதத்துடன் நமது வள்ளல் பெருமானாரால் முன்னின்று நடத்தப்படுகின்றது.
அந்த சுத்தசன்மார்க்கப் பெருநெறி அனுபவத்தைப் பெறுவதற்கு , அதற்குரிய பக்குவத்தையும் பதத்தையும் அடைவதற்கு ஏதுவாக பூரண அருள் ஞானியாம் நமது அருட்பெருந்தந்தை திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரால் கொடுக்கப்பட்ட சுத்தசன்மார்க்க சுத்தவேதப் புத்தகமாகிய திருவருட்பா ஆறு திருமுறைகளை உள்ளடக்கமாய் கொண்டு விளங்குகின்றது 🌺
இதில் முதல் ஐந்து திருமுறைகள் ,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே அவரவர்களின் அருள் அனுபவத்திற்கு தக்கவாறு "அனேகராய்" இருந்த நிலையைக் காட்டியும்,
ஆறாம் திருமுறை,
பூரணமான அருள் அனுபவம் பெற்றபின் தனது முழு அருள் அனுபவ உண்மையை வெளிப்படுத்தி , அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே "ஏகராய்" இருக்கின்ற அருட்பெருநிலையையும் காட்டி அம்மயமாய் தம்மை ஆட்கொள்ளுகின்ற தன்மையையும் விளக்குவதாய் உள்ளது🌺
இதுவே இவ்வுலகின் கடைசி வேதப் புத்தகமாகும்.
இத்திருவருட்பா ஒன்றே இனி இவ்வுலகில் எங்கெங்கும் ஓதப்பட இருக்கின்ற வேதப் பொக்கிஷமாகும்🌺
காரணம் இது வரை இவ்வுலகில் நிலைபெற்று வந்த சமயம் மதம் மார்க்கங்கள் எல்லாம் சிறிது சிறிதாக மறையத் தொடங்கிவிட்டன,
அந்தந்த மதத்திலும் சமயத்திலும் ஓதிவந்த சமய மத நூல்களும் இனி சிறிது சிறிதாக ஓதுவார் இன்றி ,
எல்லோரும் சுத்தசன்மார்க்கம் சார்ந்து திருவருட்பா ஒன்றையே ஓதுவார்கள் இதுதான் திருவருள் ஆணையாகவும் உள்ளது🌺
சமய மதத்திற்காக வாதம் செய்கின்ற வாதிகள் கடைசிவரை இருக்கத்தான் செய்வார்கள் .
காரணம்,
அதுதான் அவர்களுக்கு இப்பிறவியில் கொடுக்கப்பட்ட வேலை ,அவற்றை அவர்கள் சரியாக செய்கின்றார்கள் .
அதுவும் திருவருள் காரியமேயாகும்🌺
அது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க சுத்தசன்மார்க்கம் உலகமெங்கும் வளர்ந்துகொண்டே இருக்கும்🌺
சமனத்தை கரையேற்ற திருஞானசம்பந்தர் வருவிக்கப்பட்டது போன்று ,
சமய மதத்தை கரையேற்றி கடவுள் உண்மையை வெளிப்படுத்தும் சுத்தசன்மார்க்கத்தை நிலைநிறுத்த வள்ளல் பெருமான் வருவிக்கப் பெற்றார்கள்🌺
எப்பொழுது சமயமடாதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இலங்கை ஆறுமுக நாவலரை அழைத்துவந்து கடலூர் நீதிமன்றத்தில் திருவருட்பாவை மருட்பா என்று குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துபொழுது,
அதில் திருவருட்பாவிற்கு சாதகமாக திருவருட்பா மருட்பா அல்ல அது திருவருட்பாவேயாகும் என்று நீதிமன்றம் நீதி வழங்கியதோ அன்றே சமயமும் மதமும் மறைவை நோக்கிய பயணத்தை தொடர்ந்தன🌺
இது எல்லாமே திருவருள் சம்மதம் ஆகும்.
எப்படி என்னில் அன்று சமய மடாதிபதிகள் எதிர்ப்புகாட்டி ஆறுமுகநாவலரைக் கொண்டு அரசு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததனால்தான் ,
உலகத்தின் எங்கோ ஒர் மூலையில் இருக்கும் வடலூர் என்ற ஊரில் தோற்றுவிக்கப்பட்ட சுத்தசன்மார்க்கம் ,
திருவருட்பாவிற்கு யாதும் தடைக்கிடையாது
அது மருட்பா அல்ல அருட்பாதான் என்று ,
திருவருட்பாவிற்கு அரசே அங்கீகாரம் தந்து இவ்வுலகமுழுதும் பரவியிருந்த சமயத்தார்கள் எல்லாம் அறிந்துகொள்ளும் அளவிற்கு திருவருட்பாவை அவர்களைக்கொண்டே உலகமறியச் செய்தது திருவருள் காரியமேயாகும் 🌺
திருவருட்பாவிற்கு எப்பொழுது அரசே அங்கீகாரம் கொடுத்து வழக்கு தொடர்ந்த சமயவாதிகளின் வழக்கு தோற்றுபோனதோ அப்பொழுதே சமயம் தேய்பிறையானது🌺
இவையெல்லாம் திருவருள் காரியமே என்பதைத்தான் நாம் அனைவரும் சத்தியமாக உணர்தல் வேண்டும்🌺
இங்கு ,
வாதம் செய்தல் கூடாது,
ஏனென்றால் இங்கு இதுவரை நான் சொல்லியுள்ளது எல்லாம் பெருமானே ஆறாம் திருமுறையில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்கள் மற்றும் தற்போது நாமும் ஒவ்வொரு சமயக்கோயில்களிலும் திருவருட்பாவே ஓதப்படுதலை கண்ணுறக் காண்கின்றோம்🌺
ஆகலில் ,
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய சகோதர சகோதரிகள்,
அனைவரும் இவ்வுண்மையை தயவாய் தங்களது மேலான அறிவால் ஆராய்ந்து உணர்ந்து,
இவ்வுலகில் அவர் "அன்றி ஓர் அணுவும் அசையாது என்றால்"
இன்று சாதி சமய மத பேதமற்ற சுத்தசன்மார்க்கம் இவ்வுலகில் நிலைபெற வேண்டி அருள்செய்தது அந்த ஒருவரே என்பதை உணர்ந்து ,
ஒத்தார் உயர்ந்தார் தாழ்ந்தார் என்ற பேதமற்ற சமரசத்தை போதிக்கும் சுத்தசன்மார்க்கத்தை அனைவரும் அடைந்து ,
அருள் வாழ்வைப் பெற்று , அருள் நிலையில் வாழ ,சாகாக் கல்வியைப் போதிக்கும் சுத்தசன்மார்க்கத்தை பற்றுவோம் ! போற்றுவோம் !🌺
......நன்றி !🔥🙏
......வள்ளல் மலரடிப் வாழ்க ! வாழ்க !🔥🙏
......பெருமான் துணையில் 🔥🙏
....தயவுடன் வள்ளல் அடிமை🔥🙏
.....வடலூர் இரமேஷ் ;
Thursday, November 29, 2018
[vallalargroups:6056] தீபம் அறக்கட்டளையின் கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணம்
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
*தீபம் அறக்கட்டளையின்*
*கஜா புயல் பாதித்த*
*டெல்டா மாவட்ட மக்களுக்கு*
*இரண்டாம் கட்ட நிவாரணம்*
📢📢📢📢📢📢📢📢📢📢📢
இயற்கை பேரிடரான கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க பசிப்பிணி போக்கியும், பல்வேறு நிவாரண பொருட்களையும் கடந்த 21-11-2018 ம்தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களாக நாகப்பட்டினத்தில் முகாமிட்டு வாரி வழங்கி உள்ளதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
3 விஷயங்கள் நம்மை இரண்டாம் கட்ட நிவாரணப் பணி செய்ய தூண்டியுள்ளது.
1) பாதிப்புகள் மிக மிக அதிகம். மக்கள் உதவிகோரி தெருக்களில், தெருமுனைகளில் கையேந்தி நிற்பது.
2) நமது அன்னதான வாகனம் உள்ளடக்கிய கிராமங்களின் தெருமுனையில் அன்னமளிக்க நின்றபோது பெருமழை கொட்டிக்கொண்டிருந்தது. அன்னதான வாகனத்தைப் பார்த்ததும் மழையில் நனைந்துகொண்டே குழந்தைகளும், வயதானவர்களும் கையில் பாத்திரங்களோடு ஓடி வந்த காட்சி இன்னும் கண்முன்னே வந்துகொண்டேயிருக்கிறது.
3) இரவு நேரம். எங்கும் கும்மிருட்டு. தீபத்தின் அன்னதான வாகனம் பாதிக்கபட்ட கிராமத்தில் வீடுவீடாக மெகாபோனில் *யாரும் பசியோடு இருக்கிறீர்களா* என்று கேட்டுக்கொண்டே செல்கிறது.எல்லா வீடுகளிலிருந்தும் மக்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெளியே வந்து உணவு வாங்கிய காட்சி கண்முன்னே நிற்கிறது.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
டெல்டா மாவட்டங்களையே புரட்டி போட்ட *கஜா புயலினால்* உலகிற்கே சோறு போட்டு வாழ வைத்த டெல்டா மாவட்ட மக்கள் படும் துன்பத்தையும், துயரத்தையும் வார்த்தைகளால் சொல்லி மாளாது. நாம் நேரில் சென்று அறப்பணிகளை ஆற்றி, களப்பணியில் இறங்கியபோது வீடின்றி, உடையின்றி, உடமைகளின்றி, உறக்கமின்றி அவதிப்பட்டதை கண்களால் கண்டு கண்ணீராய்த் தான் வடிக்க முடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. மக்கள் படும் வேதனையும், திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் போதித்த ஜீவகாருண்யத்தையும் கருத்தில் கொண்டு
*தீபம் அறக்கட்டளையின் சார்பில் இரண்டாம் கட்ட கஜா புயல் நிவாரணமாக விரைவில் புறப்பட இருக்கிறோம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்*
*தம்உயிர்போல் எண்ணி உள்ளே*
*ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்*
*யாவர்அவர் உளந்தான் சுத்த*
*சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்*
*இடம்எனநான் தெரிந்தேன் அந்த*
*வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்*
*சிந்தைமிக விழைந்த தாலோ*
என்ற திருஅருட்பாவின் வைர வரிகளுக்கு ஏற்பவும்,
*"உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க"*
*"எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி"* என்ற அகவலின் பொன்னான வரிகளுக்கு ஏற்ப டெல்டா மாவட்ட மக்களுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்ட தீபம் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. தானேபுயல், சென்னை பெருமழை வெள்ளம், வார்தா புயல் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொண்ட தீபம் தற்போது *கஜா புயலையும்* எதிர் கொள்கிறது.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இரண்டாம் கட்ட கஜா புயல் நிவாரணமாக டெல்டா மாவட்ட மக்கள் நிம்மதியாக உறங்குவதற்கு மிகமிக அவசிய, அத்தியாவசிய தேவையான
*2000 போர்வைகள்*
*2000 கொசுவலைகள்*
*500 டார்ச் லைட்டுகள்*
*500 தார்பாய்கள்*
கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தயா உள்ளம் கொண்ட மனிதநேய காவலர்களே, உயிர்நேய தொண்டர்களே, ஆன்மநேய உடன்பிறப்புக்களே, தீபம் அறக்கட்டளையின் அருட்பணிக்கு வாரி வழங்கும் கொடை வள்ளல்களே, ஈர நெஞ்சினர்களே தாங்களும் இதில் பங்கு பெற்று
*100 போர்வைகள் & கொசுவலைகள்*
*50 போர்வைகள் & கொசுவலைகள்*
என பாகம் தந்து ஆன்மலாபம் அடைய தங்களை அன்புடன் வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
போர்வைகள் கொசுவலைகள் சம்பந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்:
தீபம் பாலா: 9444073635
ஜோதி சதுரகிரியார்: 9789494009
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
முகவரி:
*தீபம் அறக்கட்டளை*
30, திரௌபதி அம்மன் கோவில் தெரு
வேளச்சேரி, சென்னை- 600042
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Bank Transfer:
State Bank of India
IIT Branch
Current A/c.No: 30265475129
IFSC:SBI0001055
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தாங்கள் அளிக்கும் நநன்கொடைகளுக்கு 80G பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வங்கி பரிமாற்ற தகவலை 9444073635 என்ற கைபேசி எண்ணிற்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தங்களின் மேலான தயவையும், பேராதரவினையும் எதிர்நோக்கி
உங்கள் வேளச்சேரி
*தீபம் அறக்கட்டளை*
(ஆன்மநேய அறப்பணியில் 21-ஆண்டுகளாக)
*அருட்பெருஞ்ஜோதி*
*அருட்பெருஞ்ஜோதி*
*தனிப்பெருங்கருணை*
*அருட்பெருஞ்ஜோதி*
*எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!*
*வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Tuesday, November 27, 2018
[vallalargroups:6055] கஜா புயலில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிர்பவர்களுக்கு வேலை வாய்ப்பு
திருப்பூர் நகர சேவாபாரதி பிரஸிடென்ட்டும், ஏற்றுமதியாளர்கள் அஸோஸியேஷன் ஜெனரல் செக்ரெட்ரி திரு டி.ஆர். விஜயகுமார் ஜி'யின் மிக சிறந்த உதவி திட்டம் இது. ஜி, வாழ்க உங்கள் பணி. 🙏🙏🙏
கஜா புயலில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தஞ்சை, நாகை, திருவாரூர், வேதாரண்யம் மற்றும் கடலோர மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில், இலவச பயிற்சிகள் அளித்து, திருப்பூரில் உள்ள பின்னாலடை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர சேவாபாரதி-தென் தமிழ்நாடு, திருப்பூர் அலுவலகம் மூலம் முயற்சி எடுத்து வருகிறது..
கல்வித் தகுதி, முன் அனுபவம் தேவையில்லை
வயது வரம்பு 18 முதல் 40 வரை*
ஆண் பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் தனி தனி தங்குமிடம்
சலுகை விலையில் மூன்று வேளை உணவு, பயிற்சிக்குப் பின் நல்ல சம்பளமும் நிரந்தர வேலைவாய்ப்பும்..
குடும்பத்துடன் வருபவர்களுக்கு நிறுவனத்தின் அருகிலேயே வீட்டு வசதி ஏற்பாடு செய்து தரப்படும்..தங்கும் விடுதி கட்டணம் இலவசம் (100 வீடுகள் தற்போது தயாராக உள்ளது)
கிட்டதட்ட ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக விஜயகுமார் ஜி தெரிவித்தார்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
சுந்தரேசன் - 9791266423
கன்னியப்பன் - 9894211005
(இச்செய்தியை பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் பகிர்ந்து, அவர்களுக்கு உதவ கேட்டுக்கொள்கிறோம்)
இப்படிக்கு,
சேவா பாரதி-தென் தமிழ்நாடு,
திருப்பூர் பிரிவு..
Sunday, November 25, 2018
[vallalargroups:6053] வள்ளலார் அருளிய மந்திரம்
கஜா புயலுக்கு தங்களால் பொருளால் உதவி செய்ய முடியவில்லையா? பரவாயில்லை..
மனத்தாலும்,நாவாலும் வள்ளலார் அருளிய இந்த மந்திரத்தை உச்சாடனம் செய்வோம்.
"பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை
ஆடுற காத்தருள் அருட்பெருஞ்ஜோதி"
வள்ளலார் அருளிய இம்மந்திரத்தை தினமும் குறைந்தது 1008 முறை உச்சாடனம் மனத்தாலும்,வாக்காலும் உயிர்களுக்கு ஜீவகாருண்யம் செய்வோம்.
கண்டிப்பாக அனைவராலும் முடியும்.உயிர் இரக்கத்தை கடைப்பிடிப்போம்
Saturday, November 24, 2018
[vallalargroups:6051] இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு
வள்ளலாரின் அருள் மொழிகள்
_________________________________
1, அனைத்து சமயம் மதம் ஜாதி குலம் கோத்திரம் என்று பேதம் பார்க்காமல் எல்லா உயிர்களையும் தம்முயிராக பாவித்து கருணையுடன் வாழுங்கள்.
2, ஏழைகளின் பசியை போக்கவும் பிற உயிரிணங்களின் துன்பத்தை கண்டு இரக்கம் காட்டும் ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டீன் திறவு கோல் எனவே பசியால் வாடும் ஏழைகளை தேடிசென்று அவர்களின் பசியை போக்கி இறைவன் அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அருளை பெற்று இன்புற்று வாழுங்கள்.
3, எல்லா உயிர்களுக்கும் இறைவன் ஒருவனே அவனே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக விளங்குகராா் அவர் ஒருமையை விரும்புகறார் எனவே அவர் மீது நம்பிக்கை வையுங்கள், ஆனால் ஒருபோதும் உஙகள் கடமையைச் செய்யத் தவறாதீர்கள்
எனவே அன்பர்களே பசியென்று வருவோர்க்கு உணவு என்னும் மருந்தை கொண்டு அவர்தம் பசியை போக்கினால் நாம் நம் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ்வோம் என்பதில் சிரிதும் ஐயமில்லை
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டீன் திறவு கோல்
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ.இளவரசன்
ஜமின்பல்லாவரம்
சென்னை 117
Wednesday, November 21, 2018
[vallalargroups:6048] கஜா புயல்: Help /contacts
Electricity Help மின்சாரம் இல்லாத ஊருக்கு ்2000வாட்ஸ் ஜென்ரேட்டர் உள்ளது அவசர தேவை படுபவர்கள் தொடர்பு 9500764610 7305103190 ##வாடகை #வேண்டாம்.
ஜெனரேட்டர் ம
தேவை இருந்தால் அனுகவும்...
இடம் - கரிக்காடு, பட்டுக்கோட்டை ...
9894503455
9042324217
தம்பி Pandian GA
#பட்டுக்கோட்டை வாசுகி திருமண மண்டபத்தில் உணவு தயார் நிலையில் உள்ளது..
தொடர்புக்கு : 9443743072 பழனி
மன்னார்குடி::
உணவு பால் தேவைக்கு தொடர்பு கொள்ளவும் 9944884459
#
தஞ்சை அருகில் கிராமங்களில் குடிநீர் தேவைக்கு மட்டும் அழைக்கவும் ..
80 72340883
#பட்டுக்கோட்டை குழந்தைகளுக்கு பால் வேண்டும் என்றால் இந்த எண்னை தொடர்பு கொள்ளவும் 7010207765
கஜா புயல்: பெட்ரோல், டீசல் தேவைக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனம்
தஞ்சை & திருவாரூர்: ஷெரில்- 94426 13008, நாகை: ஷெரீப்- 94433 89219, புதுக்கோட்டை: ராஜ்குமார்- 94448 30943இல் தொடர்பு கொள்ளலாம்
#Petrol #Diesel #GajaCyclone
வாகனம் Omr, பெருங்களத்தூர், திண்டிவனம், கடலூர், பாண்டிச்சேரி வழியாக செல்கிறது.
வழியில் நிவாரண பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு.
9840128425, 9626632362
9884491604, 8667274431
: மன்னார்குடி கிழக்கு பகுதியில் உணவு தேவை படுவோர் இந்த எண்களுக்கு அழைக்கவும்.
ராம் 7871892877
பாலாசி 9944332270
ராசா +91 88838 88147
ரஞ்சித் +91 90471 83130
மன்னையின் மைந்தர்கள் குழு
Tuesday, November 20, 2018
[vallalargroups:6046] நல்வழி.6.பேராசை கூடாது
6. உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்
கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி னாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு
(ஒருவர்க்கு - ஒருவருக்கு,
உள்ளது ஒழிய-(ஊழினால்) உள்ள அளவல்லாமல்,
ஒருவர் சுகம் - மற்றொருவருடைய சுகங்களை,
கொள்ள,-அநுபவிக்க விரும்பினால், கிடையா - அவை கூடாவாம்;
(ஆதலால்) குவலயத்தில்-பூமியில், உடலோடு வாழும் உயிர்க்கு - மக்களுடம்போடு கூடிவாழும் உயிர்களுக்கு,
வெள்ளக் கடல் ஓடி-வெள்ள நீரையுடைய கடல்கடந்து சென்று (பொருள் தேடி), மீண்டு கரையேறினால் - திரும்பிவந்து கரையேறினாலும்,
என் - அதனாற் பயன் என்ன?
கப்பலேறிச் சென்று பெரும்பொருள் ஈட்டினாலும் ஊழினளவன்றி அனுபவிக்க முடியாது.
Saturday, November 17, 2018
[vallalargroups:6045] புயலின் இயற்கை சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யத்தில் மக்களுக்கு உணவும், குடிநீரும், அத்தியாவசிய பொருட்களான போர்வை, குழந்தைகளுக்கு பால் பிரட் ....
[17/11 7:16 AM] எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க : 🔥அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥
🔥 தயவுடைய சகோதர சகோதரிகளுக்கு ஆன்மநேய வந்தனம். 🔥
🌺
புயலின் இயற்கை சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யத்தில் மக்களுக்கு உணவும் குடிநீரும் அத்தியாவசிய பொருட்களான போர்வை குழந்தைகளுக்கு பால் பிரட் முதலியவை தேவைப்படுகிறது.
🌺 சன்மார்க்கத்தை சார்ந்த தமிழ்தூதன் ஐயா வேதாரணயத்தில் வள்ளலார் சபை நடத்திவருகிறார்கள்.
🌺 சபை பழைய கட்டிடமாக இருந்ததால் முற்றிலும் சேதம் அடைந்துவிட்டதால் அங்கு அவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கமுடியாமல் வேதனைப்படுகிறார்
🌺 தயவுடைய சான்றோர் பெருமக்கள் தங்களால் முடிந்த பொருளாகவோ பணமாகவோ வழங்கினால் அம்மக்களின் துயர் துடைக்கவும் பசி நீக்கவும் உதவும். நான் வேதாரண்யம் அருகே நாகப்பட்டினத்தில் தான் வசிக்கிறேன்.
🌺 அதனால் இந்த ஜீவகாருண்ய பணியில் பங்குக் கொள்ள விருப்பம் உடைய அன்பர்கள் தகவல் தெரிவிக்கவும்.
🌺காலத்தால் நாம் செய்கின்ற உதவி துன்பத்தில் இருக்கின்ற அம்மக்களின் துயர் துடைக்க உதவும் .
மக்கள் அளிக்கின்ற உதவிகளை நானும் என் துணைவரும் வேதாரண்யம் சென்று நேரில் வழங்குவோம்.
🌺 தேவைப்படும் பொருட்கள். 🌺
🌺 1.வீணாகாத உணவுப் பொட்டலங்கள்.
2. பிரட்
3. தண்ணீர் பாட்டில்கள்.
4. போர்வைகள்.
5. பிஸ்கட் பாக்கெட்
6. நாப்கின்
7. பாய்
8 . பால்பவுடர்
9. அரிசி
10. சீனி.
🌺 அனுப்பவேண்டிய முகவரி.
🌺நாகராஜன் அஜந்தா.
PN டெக்ரேஷன்
நகராட்சி எதிரில்.
காடம்பாடி நாகப்பட்டினம்.
போன். 9600898718
9443456245.
🌺 நன்றி.🌺
🙏🙏🙏🙏🙏🙏
[vallalargroups:6044] நல்வழி :: கவலையுறுதல் கூடாது
5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.
வாராத-(ஊழால்) வரக்கூடாதவைகள், வருந்தி அழைத்தாலும் - பரிந்து அழைப்பினும்,
வாரா - வாராவாம்;
பொருந்துவன - (ஊழால்)
வரக்கூடியவை,
போமின் என்றால் - போயிடுங்கள் என வெறுப்பினும்,
போகா-போகாவாம்;
இருந்து ஏங்கி - (இவ்வுண்மை யறியாமல்) இருந்து ஏக்கமுற்று,
நெஞ்சம் புண் ஆக - மனம் புண்ணாகும்படி. நெடுந்தூரம் தாம் நினைந்து - (அவற்றைத்) தாம் நெடுந்தூரம் சிந்தித்து,
துஞ்சுவதே - மாண்டு போவதே,
மாந்தர் தொழில் - மனிதர் தொழிலாக வுள்ளது.
இருவினைப் பயன்களாகிய இன்பதுன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்க
தன்று.
Friday, November 16, 2018
[vallalargroups:6043] நல்வழி . 4.காலம் நோக்கிச் செய்க
எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற்-கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு.
யார்க்கும் - எத்தன்மையோர்க்கும்,
புண்ணியம் வந்து எய்துபோது அல்லால் - (முன்செய்த) புண்ணியம் வந்து கூடும்பொழுதல்லாமல்,
ஒரு கருமம்-ஒரு -காரியத்தை,
எண்ணி-ஆலோசித்து, செய்யொண்ணாது - செய்து முடிக்க இயலாது; (அப்படிச் செய்யின் அது)
கண் இல்லான்-குருடன், மாங்காய் விழ - மாங்காயை விழுவித்தற்கு,
எறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் - எறிந்த மாத்திரைக்கோலைப் போலும்; ஆம் காலம் - புண்ணியம் வந்து கூடும் பொழுது,
அவர்க்கு ஆகும் - அவர்க்கு அக்காரியம் எளிதில் முடியும்.
புண்ணிய மில்லாதவன் செய்யத் தொடங்கிய காரியம் முடியப் பெறாது கைப்பொருளும் இழப்பன்.
Thursday, November 15, 2018
[vallalargroups:6042] பாடாலூர் வடிவேல் அய்யா.. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அடி சேர்ந்தார்
பல ஆண்டுகளாக படாலுர் தர்மசாலையினை நடத்துபவரும் தமது 12வது அகவையில் சன்மார்க்கத்தில் வந்தவரும் பெருமானின் பல அற்புதங்களுக்கு சாட்சியானவரும் சன்மார்க்க பாடகருமாகிய உயர் திரு வடிவேல் அய்யா இன்று அரும்பெரும் சோதி ஆண்டவர் அடி சேர்ந்தர் 🙏🙏🙏
[vallalargroups:6040] நல்வழி.3.ஈதலின் சிறப்பு
ஈதலின் சிறப்பு
3. இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
(பதவுரை) இயல் உடம்பு இது - பொருந்திய இவ்வுடம்பானது, இடும்பைக்கு - துன்பமாகிய சரக்குகட்கு, இடும்பை அன்றே - இட்டு வைக்கும் பை யல்லவா, இடும் பொய்யை - (உணவினை) இடுகின்ற நிலையில்லாத இவ்வுடம்பை, மெய் என்று இராது-நிலையுடையதென்று கருதியிராமல், கடுக - விரையில், இடும் - வறியார்க்கு ஈயுங்கள், உண்டாயின் - (இவ்வறம் உங்களிடத்து) உண்டாயின், பெருவலிநோய் - மிக்க வலிமையுடைய பாசமாகிய பிணியினின்றும், விண்டாரை - நீங்கியவரை, கொண்டாடும் - விரும்புகின்ற, வீடு-முத்தியானது, ஊழின் - முறையாலே, உண்டாகும் - உங்கட்குக் கிடைக்கும்.
அறஞ் செய்தவர்க்கு முறையாலே வீடுபேறுண்டாகும், நீரிலெழுத்துப்போற் கணத்துள் அழிவதாகலின் உடம்பு பொய் எனப்பட்டது.
பயன் கருதாது செய்யும் அறத்தால் மனத்தூய்மையும், மெய்யுணர்வும், வீடுபேறும் முறையானே உண்டாகும் . (3)
[vallalargroups:6040] நல்வழி.2)ஈயாமையின் இழிவு
ஈயாமையின் இழிவு
2. சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.
(பதவுரை) சாற்றுங்கால் - சொல்லுமிடத்து, மேதினியில் - பூமியில், சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை - இரண்டு சாதியின்றி வேறில்லை, (அவ்விரண்டு சாதியாரும் யாவரெனின்) நீதி வழுவா நெறி - நீதி தவறாத நல்வழியில் நின்று, முறையின் - முறையோடு; இட்டார் - (வறியர் முதலானவர்க்கு) ஈந்தவரே, பெரியோர்-உயர்வாகிய சாதியார்; இடாதார் - ஈயாதவரே, இழிகுலத்தார் - இழிவாகிய சாதியார்; பட்டாங்கில் உள்ளபடி-உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவேயாம்.
கொடுத்தவர் உயர்குலத்தினர்; கொடாதவர் இழிகுலத்தினர்; இவ்வகையன்றி வேறு சாதியில்லை.
[vallalargroups:6039] நல்வழி.1
நன்மையே செய்க
1. புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல்.
(பதவுரை) புண்ணியம் ஆம் - அறமானது விருத்தியைச் செய்யும்; பாவம் போம் - பாவமானது அழிவினைச்செய்யும்; போனநாள் செய்த அவை - முற்பிறப்பிற் செய்த அப் புண்ணிய பாவங்களே, மண்ணில் பிறந்தார்க்கு - பூமியிலே பிறந்த மனிதர்களுக்கு, வைத்த பொருள் - (இப்பிறப்பிலே இன்பதுன்பங்களை அநுபவிக்கும்படி) வைத்த பொருளாகும்; எண்ணுங்கால் - ஆராய்ந்து பார்க்கின், எச்சமயத்தோர் சொல்லும் - எந்த மதத்தினர் சொல்லுவதும், ஈது ஒழிய வேறு இல்லை - இதுவன்றி வேறில்லை; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் - பாவஞ் செய்யாது புண்ணியமே செய்க.
புண்ணியத்தால் இன்பமும், பாவத்தால் துன்பமும் உண்டாதலால், பாவத்தை யொழித்துப் புண்ணியத்தைச் செய்க.
[vallalargroups:6038] ஈதலின் சிறப்பு
3. இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
(பதவுரை) இயல் உடம்பு இது - பொருந்திய இவ்வுடம்பானது, இடும்பைக்கு - துன்பமாகிய சரக்குகட்கு, இடும்பை அன்றே - இட்டு வைக்கும் பை யல்லவா, இடும் பொய்யை - (உணவினை) இடுகின்ற நிலையில்லாத இவ்வுடம்பை, மெய் என்று இராது-நிலையுடையதென்று கருதியிராமல், கடுக - விரையில், இடும் - வறியார்க்கு ஈயுங்கள், உண்டாயின் - (இவ்வறம் உங்களிடத்து) உண்டாயின், பெருவலிநோய் - மிக்க வலிமையுடைய பாசமாகிய பிணியினின்றும், விண்டாரை - நீங்கியவரை, கொண்டாடும் - விரும்புகின்ற, வீடு-முத்தியானது, ஊழின் - முறையாலே, உண்டாகும் - உங்கட்குக் கிடைக்கும்.
அறஞ் செய்தவர்க்கு முறையாலே வீடுபேறுண்டாகும், நீரிலெழுத்துப்போற் கணத்துள் அழிவதாகலின் உடம்பு பொய் எனப்பட்டது. உடம்பிற்கு மெய் என்று பெயர் வந்தது எதிர் மறை யிலக்கணை. பயன் கருதாது செய்யும் அறத்தால் மனத்தூய்மையும், மெய்யுணர்வும், வீடுபேறும் முறையானே உண்டாகும் . (3)
Wednesday, November 14, 2018
Wednesday, November 7, 2018
[vallalargroups:6036] நல்வழி ::: நன்மையே செய்வோம்
நன்மையே செய்க
1. புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல்.
(பதவுரை) புண்ணியம் ஆம் - அறமானது விருத்தியைச் செய்யும்; பாவம் போம் - பாவமானது அழிவினைச்செய்யும்; போனநாள் செய்த அவை - முற்பிறப்பிற் செய்த அப் புண்ணிய பாவங்களே, மண்ணில் பிறந்தார்க்கு - பூமியிலே பிறந்த மனிதர்களுக்கு, வைத்த பொருள் - (இப்பிறப்பிலே இன்பதுன்பங்களை அநுபவிக்கும்படி) வைத்த பொருளாகும்; எண்ணுங்கால் - ஆராய்ந்து பார்க்கின், எச்சமயத்தோர் சொல்லும் - எந்த மதத்தினர் சொல்லுவதும், ஈது ஒழிய வேறு இல்லை - இதுவன்றி வேறில்லை; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் - பாவஞ் செய்யாது புண்ணியமே செய்க.
புண்ணியத்தால் இன்பமும், பாவத்தால் துன்பமும் உண்டாதலால், பாவத்தை யொழித்துப் புண்ணியத்தைச் செய்க எ-ம். ஆக்கும் போக்கும் என்பன ஆம் போம் என நின்றன. (1)
Saturday, November 3, 2018
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
Blessed Immortal Soul, I totally agree with the explanation given by Mr.Raja. Let us see what Saivasidhantha philosophy says. Si...
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
-- web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெர...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
-
Bangalore Monthly Sath Vicharam OneDay Program Bangalore - Monthly SATH-VICHARAM / 9.30 am to 4.30pm/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ரா...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
Dear Sir! as we want to purchase this book, pl send the address of this book. thanks ! On 4 June 2012 17:02, Sri Nithyahimaadri < himaadr...
-
DEAR MR. RAM ATLAST VALLALAR MADE YOU TO RAISE THIS SENSIBLE QUESTION. THANKS. PREVIOUSLY EVERYBODY WERE TRYING TO ATTAIN A STATE...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)




