Showing posts with label விண்ணப்பக் குறிப்புகள். Show all posts
Showing posts with label விண்ணப்பக் குறிப்புகள். Show all posts

Wednesday, January 22, 2014

[vallalargroups:5302] திருவருள் பேராற்றல்

1.      யாவராலும்  பிரித்தற்கு ஒருவாற்றானும் கூடாத பாசம் என்னும் மகாந்த காரத்தினின்றும்,
ஓர் கணப்பொழுதினுள் அதிக்காரணக் கிரியையால் அதிக்காரணப்பகுதி உருவில்
பிரித்தெடுத்தருளிய தேவரீரது திருவருள் பேராற்றலை என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்!
2.      காரணக் கிரியையால் காரணப் பகுதி உருவினும்,
அதிசூக்குமக் கிரியையால் அதிசூக்குமக் பகுதி உருவினும்,சூக்குமக் கிரியையால் சூக்குமக் பகுதி உருவினும்,
பரத்துவ சத்திசத்தரால் பூத உருவினும்,அபரத்துவ சத்திசத்தரால் பவுதிக வடிவிலும்,
ஓர் கணப்போதினுள் என்னைச் செலுத்தாமல் செலுத்திய தேவரீரது திருவருள் பேராற்றலை என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்!
3.      பற்பல புறஉறுப்புக்களும், புறப்புற உறுப்புக்களும் எனக்கு உபகரிக்கும் பொருட்டு
இப்பொதிக வடிவின்கண்ஒருங்கே உண்ணின்று தோன்ற, உண்ணின்று தோற்றாது
தோற்றுவித்த தேவரீரது , திருவருள் பேராற்றலை எங்ஙனம் அறிந்து, எவ்வாறு கருதி , என்னென்று துதிப்பேன்!



web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)