Sunday, February 24, 2019

[vallalargroups:6085] Forward to NON veg People

⚠ Warning ⚠
மதுவை விட பாதிப்பு❓
   🐓🐓 கோழி 🐓🐓

கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.

⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠⚠

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

🐓ஆண்களின்  உயிரணுக்களை அழிக்கிறது.😯
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்

🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯

🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯

🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.😯

"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴

🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟

🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇

🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕

🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😳

🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.

🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯

🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟

🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர் களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.

📳வேகமாக நண்பர்களே பகிருங்கள் 📳

Friday, February 15, 2019

[vallalargroups:6083] ஞானசிங்காதனபீடம் Availability

**ஞானசிங்காதனபீடம்* 

அருவமான இறைவனுக்கு வள்ளலார் திருக்கரத்தால் அமைத்தது ஞானசிங்காதனபீடம். இதில் இறைவனை நாம் எவ்வாறாக பார்க்கிறோமோ அவ்வாறாக எழுந்தருள்வதாக வள்ளலார் குறிப்பிடுக்கின்றார். இது வடலூர் சத்திய தருமச்சாலையில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இதே போன்று அன்பர்கள் தங்கள் சங்களிலும் வீடுகளிலும் வைத்து வழிபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் சிறிய வடிவில் அனைவருக்கும் பயன்படுமாறு தயாரிக்கப்பட்டுள்ளது.
 *தாழ்மையான வேண்டுகோள்:* 
இதில் எக்காரணத்தை முன்னிட்டும் படங்களையோ, சிலையையோ, தீபத்தையோ வைத்து விட வேண்டாம். உருவாக்கியதின் நோக்கம் தவறாகிவிடும். நன்றி. 

தேவைப்படுவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும். 

உற்பத்தி விலைக்கே சேவையாக கொடுக்கப்படுகிறது. *விலை ரூ.350* 

சாது பாலமுருகன், திருப்பரங்குன்றம், மதுரை.
செல்- 9894559632* 

அருவமான இறைவனுக்கு வள்ளலார் திருக்கரத்தால் அமைத்தது ஞானசிங்காதனபீடம். இதில் இறைவனை நாம் எவ்வாறாக பார்க்கிறோமோ அவ்வாறாக எழுந்தருள்வதாக வள்ளலார் குறிப்பிடுக்கின்றார். இது வடலூர் சத்திய தருமச்சாலையில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இதே போன்று அன்பர்கள் தங்கள் சங்களிலும் வீடுகளிலும் வைத்து வழிபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் சிறிய வடிவில் அனைவருக்கும் பயன்படுமாறு தயாரிக்கப்பட்டுள்ளது.
 *தாழ்மையான வேண்டுகோள்:* 
இதில் எக்காரணத்தை முன்னிட்டும் படங்களையோ, சிலையையோ, தீபத்தையோ வைத்து விட வேண்டாம். உருவாக்கியதின் நோக்கம் தவறாகிவிடும். நன்றி. 

தேவைப்படுவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும். 

உற்பத்தி விலைக்கே சேவையாக கொடுக்கப்படுகிறது. *விலை ரூ.350* 

சாது பாலமுருகன், திருப்பரங்குன்றம், மதுரை.
செல்- 9894559632

Friday, February 8, 2019

[vallalargroups:6081] சுத்த சன்மார்க்க ஆராய்ச்சியாளர்களுக்கு சில கேள்விகள்

அன்புடையீர் வணக்கம்
சமயம் மற்றும் சுத்த சன்மார்க்க ஆராய்ச்சியாளர்களுக்கு சில கேள்விகள் வைக்கப்படுகிறது.

1.முதல் ஐந்து திருமுறை சமயம் என்றால் சுத்த சன்மார்க்கப் பாடல் அதில் இல்லையா.

2.6ந்திருமுறையில் குறிப்பாக சைவ சமய கடவுளான சிவம். ஓம் நமசிவய .ஷடாந்தம். அடியார்களின் குறிப்பு இவையெல்லாம் வருகின்றனவே எப்படி இது சமயங் கடந்தது?

3.பேருபதேசம் தவிர வேறெங்காவது மகாமந்திரம் பெருமான் கைப்பட உள்ளதா?

4.சமய மதங்களையும் ஷடாந்தங்களையும் விட்டுவிட்டேன் என்று சொன்னவர் மகா மந்திரத்தின் இன்பானுபவத்தை தாயுமான சுவாமிகளின் பாடலின் பிரமானத்தால் உணர்க என்று ஏன் சொல்ல வேண்டும்.அப்படியென்றால் மகாமந்திரம் கூட சமயமா?

5.10ரூபாய் பொருமான விபூதியை துறந்த சுத்த சனமார்க்கிகள் 10,000 மதிப்பிலான நகையை ஏன் துறக்கவில்லை.மாயையாகிய மனைவிமக்களை தன் உடமைகளையும் ஏன் துறக்கவில்லை?

6.6திருமுறைகளும் அகவலில் அடக்கம் .
அகவல் மகாமந்திரத்தில் அடக்கம்.
மகாமந்திரம் தாயுமான சுவாமிகளின் பாடலுக்கு அடக்கம் . அப்படியா?

7.அரசியல்வாதி ஏழை எளிய மக்களுக்கு இட்லி போடராரு.
ஆன்மீகவாதி கஞ்சி ஊற்றுகிறார் யாருக்கு தயவு அதிகம் .

8.சுத்த சன்மார்க்கத்தில் கணவன் இறந்தால் தாலி வாங்கக்கூடாது.ஆனால் தாலி கட்டலாமா? இது சமயமா இல்லையா ?

9.ஜீவகாருண்யத்தில் சத்விசாரம் பற்றி வரேவயில்லை.பேருபதேசத்தில் ஜீவகாருண்யம் என்ற வார்த்தையே வரவில்லை.

10.உண்மையிலேயே ஒரு சுத்த சன்மார்க்க சாதகனின் சாதனா முறைகளை வரிசைப்படுத்த முடியுமா?

11.எதற்கு எடுத்தாலும் இடைச்செறுகல் என்று சொல்லி உண்மையறியாது .
ஒன்றுகிடக்க ஒனாறு உளறுவது சரியா?

12.சுத்த ,பிரணவ, ஞான தேகத்தையே வணங்கக்கூடாது என்ற அளவிற்கு அறிவு விளங்கிய சுத்த சன்மார்க்கிகள் கதவையும் பூட்டையும் சுவற்றினையும் பெட்டியையும் வணங்குவது சமயமா ?சுத்த சன்மார்க்கமா?

யார் சுத்த சன்மார்க்கி 
நரை-20%
திரை-40%
பிணி-60%
மூப்பு-80%
சாக்காடு-100%எங்கே?யார்?எப்போது.

-சாது ஹரி

Sunday, February 3, 2019

[vallalargroups:6078] நல்வழி.9.குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார்

9.  ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
       ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
       நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
       இல்லையென மாட்டார் இசைந்து

ஆற்றுப் பெருக்கு அற்று - ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய், 
அடி சுடும் அந்நாளும்-(மணலானது வெயிலினாலே காய்ந்து நடப்பவருடைய) அடியைச் சுடுகின்ற அக்காலத்திலும், அவ் ஆறு - அந்த ஆறானது, 
ஊற்றுப் பெருக்கால் - ஊற்றுநீர்ப் பெருக்கினால், 
உலகு ஊட்டும் - உலகத்தாரை உண்பிக்கும்; 
(அது போல) நல்ல குடிப்பிறந்தார்-நற்குடியிற் பிறந்தவர், 
நல்கூர்ந்தார் ஆனாலும்-வறுமையுடையவரானாலும், 
ஏற்றவர்க்கு - இரந்தவர்க்கு, 
இசைந்து - மனமிசைந்து, 
இல்லையென மாட்டார்-இல்லையென்று சொல்லமாட்டார் (இயன்றது கொடுப்பர்).

உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார் .

Saturday, February 2, 2019

[vallalargroups:6077] ஞானிகள் பற்றற்றிருப்பர்

ஞானிகள் பற்றற்றிருப்பர்

    7.  எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
       பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
       அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
       பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு


எல்லாப் படியாலும் - எல்லா வகையாலும், எண்ணினால் - ஆராயுமிடத்து, 
இவ்வுடம்பு - இந்த உடம்பானது, பொல்லாப் புழு-பொல்லாத புழுக்களுக்கும், 
மலி நோய்-நிறைந்த பிணிகளுக்கும், 
புல் குரம்பை - புல்லிய குடிசையாக இருக்கின்றது; 
நல்லார் - நல்லறிவுடையோர், அறிந்திருப்பார் - (இவ்வுடம்பினிழிவை) அறிந்திருப்பார்கள்; 
ஆதலினால்-ஆகையால் (அவர்கள்), கமல நீர் போல் - தாமரை இலையில் தண்ணீர் போல, 
பிறிந்து இருப்பார் - (உடம்போடு கூடியும்) கூடாதிருப்பார்கள்;
 பிறர்க்குப் பேசார் - (அதைக் குறித்துப்) பிறரிடத்தில் பேசமாட்டார்கள், 
ஆம்: அசை.

உடம்பின் இழிவை யறிந்த ஞானிகள் உடம்போடு கூடி இருப்பினும் அதிற் பற்றற்றிருப்பார்கள்

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)