🙏🔥
அருட்பெருஞ்ஜோதி 🌻
அருட்பெருஞ்ஜோதி 🌻
தனிப்பெருங்கருணை🌻
அருட்பெருஞ்ஜோதி 🌻
🏵 கருணை ஆரமுதே எனது கடவுளே 🏵
************************************
பணமே நிலமே பாவையரே
என்று பட்டிதொட்டி எல்லாம்
பருத்த உனோடு
பன்றிபோல்
ஆடி ஓடி தேடி
அலைந்து திரிந்த இப்பாவியை 🙏
அன்பென்பது ஓர்அணுவளவும்
தெரியாது,
அகங்காரம் என்னும்
யானைமீது ஏறிஅமர்ந்து,
பசியினால் கண் பஞ்சடைத்து,
காது செவிடுபட
பரிதவித்து நின்று ,
ஐயா ....!
என்று என்னையும் ஓர் பொருட்டாய் பசிபொறாது என்எதிர்நின்று
யாசித்த பெரியோரை,
கண்ணெதிரே நிற்பது
என்னுள் அமர்ந்திருந்து
என்னை வாழவைக்கும்
எனது ஆருயிர் தெய்வம்தான் என்று சிந்திக்கும் அறிவு சிறிதுமற்று
கடவுளை காணக்கிடைத்தும்
கைத்தொழ மனம் இல்லாது,
கல்நிகர் நெஞ்சனாய்,
ஈரமற்ற இதயத்தவனாய்,
ஏதும் தெரியாதவன் போல்
பசிமுகம் பாராமல்
கடந்து சென்ற
இவ்வன்மனத்து பாவியை 🌺
நெறியலா நெறிகளில்
காலத்தைக் கடத்தி,
எனது ஆருயிர்க்கு
துணையான கடவுள்
இவரோ ! அவரோ!
என்று ஊர்உராய்
ஓடித்திரிந்து
நாடித்தளர்ந்த
இப்பாவியை 🏵
கற்றக் கல்வியே
நம்மை கடைத்தேற்றும்
என்றுக் கருதி ,
எனது உயிர்க்கு
உற்ற கல்வியை கற்க தெரியாது ,
கற்பிப்பாரும் யாருமின்றி
கோலிழந்த குருடனாய்
கலங்கி நின்ற
இக் குருட்டுப்பாவிக்கு 🌼
கடவுளை ஒத்த
நுதற்கண்ணையே
அளித்து காக்கும்
"சுத்தசன்மார்க்கம்" என்னும்
ஊன்று கோலை
கொடுத்து
இக் கண்கெட்ட
குருட்டு பாவிக்கும்
வழிதுறை காட்டிய
சற்குருவே 🔥
சாதல் பிறத்தல் என்னும்
இயற்கைச் சட்டத்தையே
உடைத்தெறிந்து ,
சாகா வரத்தையும் பெற்று ,
ஏகர் அனேகர் என்று
இவ்வுலகம் போற்றும்
ஒன்றான அருட்பெருஞ்ஜோதி
கடவுளையும் ஒன்றி அணைந்தவரே வள்ளலே எந்தாயே🌻
வழிவழியாய் வந்த
அருளாலர்கள் மரபில் ,
தன்னுயிர் உய்தது
போதாதென்று,
இம்மண்ணுயிரெலாம்
உய்திட வேண்டும் என்று
ஆண்டவரிடம் கண்ணீர்விட்டு
கதறி அழுத வள்ளலே
எனதாருயிர் தந்தையே ஐயாவே🌺
இ்ப் பொல்லா வினையேன்
குற்றமெல்லாம்
குறிப்பில் கொள்ளாமல் ,
செல்லா நெறியில் சென்று ,
கல்லா கல்வியை கற்று
காலம் கழித்து வீண்போகாமல்,
மரணத்தை தவிர்க்கும்
சாகாக் கல்வியைக்
கற்றுத்தரும்
"சுத்தசன்மார்க்கத்தை"
காட்டுவித்து,
மண்ணுயிரெல்லாம்
கதிபெற்று வாழ்ந்திட
வழிதுறை காட்டிய
எனது இன்னுயிர் தந்தையே 🌺
வினைப் பெருக்கத்தால்
அவத்தையுற்று துன்பக்கடலில்
வருந்தி நெகிழ்ந்து ,
வினையை போக்குவதற்கு
வழிதுறை தெரியாது
மண்ணுயிர்கள் எல்லாம்
கலங்கி திரிவது கண்டு
மனம்தாளது ,
இம் மேதினியில்
பார்திலகம் என்றோங்கும்
உத்தரஞாண சிதம்பரமாயும்,
உத்தரஞாண சித்திபுரமாயும்,
வடலூர் என்றும்,
பார்வதிபுரம் என்றும்
திருவருளாலும்
உலகவராலும் அழைக்கப்படுகின்ற "சத்தியஞான" சபையில்
அண்டத்தையும் அகிலத்தையும்
ஆக்கி அழித்து காத்தருளுகின்ற அருட்பெருஞ்ஜோதி இறைவர்
இவ்வுலக உயிர்கள் எல்லாம் இன்பம் அடையும் பொருட்டே
ஒருமைத் திருநடம்புரிகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்ஜோதி தரிசனத்தை
ஜீவர்கள் எல்லோரும் கண்டு,
அவரவரவர்களின்
வல்லிய வினைகளைக் கழித்து,
அவர்கள் எல்லோரும்
சுத்தசன்மார்க்க அருள் நெறியில்
உடலும் உயிரும் அழியாமல்
தழைத்து ஓங்கி
நிலைத்து வாழ்ந்திட
திருவருள் கருணையால்
சங்கம்,சபை,சாலை என்பதை
அமைத்துக்கொடுத்து
இவ்வுலகவரை
சுத்தசன்மார்க்க நெறியில்
வாழ்விக்கும் வள்ளலே
எனது திருவருட் தயாநிதியே💥
இக்கடையேன்
உமது திருத்தாளினை
எனது உயிரால் பிடித்திருக்க ,
நீர் எனது கைப்பிடித்து ,
மண்,பெண்,பொன் என்ற
விடயக் காட்டில் மோகம் கொண்டு ஆசை,பாசம்,பந்தம்,பற்று என்ற நரகக்குழியில் விழுந்திடா வண்ணம் ,
அப்பனே அம்மையே குருவே
எனது உயிர்த்துணையே
வல்வினையேன் செய்த பிழைகள்
எல்லாம் திருவுளம் கொள்ளாது
என்கைப்பிடித்த
உமது திருக்கரம் தளர்ந்துவிடாமல்
இறுகப்பிடித்து காத்தருள்வாயே.............🌻🔥🌺🏵🙏
....நன்றி ,
....வள்ளல் மலரடிப் போற்றி போற்றி !
....பெருமான் துணையில்,
...வள்ளல் அடிமை,
...வடலூர் இரமேஷ்.
No comments:
+Grab this
Post a Comment