மனிதனுக்கு பெரிய தண்டனை எது ?
உயர்ந்த அறிவு பெற்ற மனிதப் பிறப்பு கிடைப்பதற்கு பலகோடி புண்ணியம் செய்த பின்பு தான் இறுதியாக இந்த மனிதப் பிறப்பு கிடைத்துள்ளது..
மனிதன் தவறு செய்வதால் தான் மரணம் வருகின்றது.என்பதை தப்பாலே சகத்தவர்கள் சாவதற்கே துணிந்து விட்டார்கள. என்று வள்ளலார் சொல்லுகின்றார்.
மரணம் வருவதை மரணப் பெரும் பிணி என்கிறார்.
மரணப் பெரும்பிணி வாரா வகைமிகுகரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே!
மரணம் என்னும் பிணி வராமல் காக்கும் மருந்து உள்ளது என்கின்றார் வள்ளலார்..
அந்த மருந்து என்ன எது ?
வெளியில் கிடைக்கும் மருந்தோ.நாம் தயாரித்து உண்ணும் காயகற்ப மருந்தோ அல்ல.நம் உடம்பிலே இறைவனால் வைக்கப்பட்டு உள்ளது.
என்றே என்னினும் இளமையோடு இருக்க நன்றே தரும் ஒரு ஞான மா மருந்தே ! ...என்றும் அவை இருக்கும் இடத்தையும் சுட்டிக் காட்டுகின்றார்.
சிற்சபை நடுவே திருநடம் புரியும் அற்புத மருந்து எனும் ஆனந்த மருந்தே !
நம் சிரநடுவில் திருநடம் புரியும் ஆன்மாவின்
.. அன்பு தயவு கருணையின் செயல்பாட்டால் அந்த அருள் என்னும் ஞான மருந்து சிற்சபையின் வழியாக சுரக்கும் .அவைதான் உண்மையான அருள் மருந்தாகும்...அந்த மருந்நை உண்டவர்கள் மரணத்தை வெல்ல முடியும்....
அடுத்து சுத்த சன்மார்க்கிகள் முயற்சி பற்றாமலும்.அஜாக்கிரதையாலும்.அறியாமையாலும்.மரணம் வந்தால்.அடுத்தப் பிறவி என்ன என்பது தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளோம்...
அடுத்த பிறவி என்ன என்பது மறைமுகமாக இறைவன் கொடுப்பது தான் தண்டனையாகும்.
பாவத்தின் சம்பளம் மரணம் என்று என்று ஏசுபிரான் சொல்லுகின்றார்...
வள்ளலார் மரணம் என்பது பெரும் பிணி என்கிறார். பிணியால் மரணம் வருவது தண்டனை அல்ல .அடுத்தப் பிறவி கொடுப்பது தான் தண்டனை...என்கிறார்
மேல் பிறவியான மனித பிறப்பே பிறப்பதற்கு ஆன்மாவிற்கு வாய்ப்பு கொடுத்தால் அவை தண்டனை இல்லை.மீண்டும் மரணத்தை வெல்லும் வாய்ப்புக்கு அனுமதி வழங்கப் படுகின்றது.
மரணம் அடைந்து ஆன்மாவிற்கு கீழ் பிறவி எது கொடுத்தாலும் அவைதான் தண்டனை என்பதாகும் அந்த தண்டனை தான் தாங்க முடியாத தண்டனையாகும்.
கீழ் பிறவி யார் யாருக்கு எல்லாம் கிடைக்கும் என்பதைத்தான் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..
வாய் பேசாத தாழ்ந்த பிறவியான ஜீவ உயிர்களை.தெரிந்தோ.தெரியாமலோ அளவில்லாமல் கொள்பவர்களுக்கும்.
அதன் மாமிசத்தை அளவில்லாமல் உண்பவர்களுக்கும்...
நிச்சயம் மனித பிறவி கிடைக்க வாய்ப்பே இல்லை....அதுதான் பெரிய தண்டனை.என்பதாகும்.
வள்ளலார் பாடல் !
உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிகபரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கேநயப்புறுசன் மார்க்கம்
அவர் அடையளவும் இதுதான்நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே
மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.!
என்ற பாடல் வாயிலாக தெளிவுப் படுத்துகின்றார்...
உயிர்க் கொலை செய்பவர்களும் .அதன் புலாலை உண்பவர்களும் இறைவன் அருளைப் பெற தகுதி அற்றவர்கள்.அவர்கள் சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்தால் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது என்பதை ஆன்ம நேயத்துடன் வற்புறுத்துகின்றார்..
அவர்கள் கீழ்பிறவி செல்லாமல் மீண்டும் மனிதப் பிறவி கிடைக்க நல் வழி காட்டுவது சன்மார்க்கிகளின் ஆன்ம நேய உரிமையாகும்.கடமையாகும்..
மரணம் என்பது தண்டனை அல்ல.கீழ்பிறவிதான் தண்டனை....
மரணம் என்பது தண்டனை அல்ல.மன்னிப்பு கொடுத்து மீண்டும் மனித தேகத்தில் வாழ்ந்து மரணத்தை வெல்லுவதற்கு வாய்ப்பு என்னும் சலுகை இறைவனால் வழங்கப் படுகின்றது..இந்த சலுகையை நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
மரணம் அடைந்து மீண்டும் மனிதப்பிறவி கிடைக்காமல் கீழ் பிறவி கிடைப்பதுதான் தண்டனை என்பதாகும்...
எனவே வள்ளலார் சொல்லும் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் நல் ஒழுக்கத்தில் வாழ்ந்து அஜாக்கிரதையால் மரணம் வந்தாலும் மீண்டும் மனிதப் பிறப்பு இறைவனால் வழங்கப்படும்...இது சத்தியம்.
வள்ளலார் பாடல் !
பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்
கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்றகளியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே.!
மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்கவும்....
விரித்தால் இன்னும் பெருகும்....
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..
No comments:
+Grab this
Post a Comment