Tuesday, June 26, 2018

[vallalargroups:5973] First Sunday Online July'18 Satsang by Thiru.Thmbaiah , Arutperunjothi Trust,Thanjavur

[vallalargroups:5972] உடைந்த சமயக்குழி நின்று எழுந்து உணர்மின்...வடலூர் இரமேஷ்

அருட்பெருஞ்ஜோதி🌺
அருட்பெருஞ்ஜோதி🌺
தனிப்பெருங்கருணை🌺
அருட்பெருஞ்ஜோதி🌺
   🌷🍀உடைந்த சமயக்குழி நின்று எழுந்து உணர்மின்🍀🌷
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
     ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்🙏
    
        இவ்வுலகில் அன்றுதொட்டு இன்றுவரை நடந்துகொண்டிருக்கின்ற ஆன்மீக அருள் செயல்கள் எல்லாமும் அருட்பெருஞ்ஜோதி என்ற ஒரே கடவுளால்தான் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றது என்பதை சத்தியமாக அறிவோம்🌹

      அன்று வந்த அருளாளர் கூட்டங்கள் முதல் இன்று வருவிக்கப்பட்ட நமது அருட்பெருந்தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் வரை அனைவரையும் வருவித்தருளியது அருட்பெருஞ்ஜோதி என்ற ஒரேக் கடவுளே ஆகும்🌹
     
       இவையனைத்தும் ஏன் மாறுபட்டு கொண்டே இருந்தன என்றால் அனைத்தும் ஆறறிவு ஜீவர்களாகிய நமது அறிவின் பக்குவத்தை மேம்படுத்தும் பொருட்டே மாறுபட்டது என்பதை சத்தியமாக உணர்தல் வேண்டும்🌹
     
         ஆம் இவ்வுலகில் நடக்கின்ற ஒவ்வொரு அருள்செயல்களும் நமக்காகவே திருவருளால் நடத்தப்படுகின்றன.
      அன்று சமணம் புத்தம் முதலிய சமயங்களை தோற்றுவிக்க அதற்குரிய அருளாளர்களை வருவித்து அப்போதைக்கு இருந்த நமது அறிவின் தரத்திற்கு தக்கவாறு அவர்களால் பல நன்னெறிகளை கூறி அதற்குரிய நெறிமுறைகளை வகுத்ததும்,

        பிறகு சிறிது காலம் கடந்து  நமது அறிவின் தரம் சற்று மாறுபட்டு உயர்ந்த பிறகு அந்த சமணத்தையும் புத்தத்தையும் கரையேற்ற சைவம் வைணவம் முதலி சமயங்களை தோற்றுவிக்க அதற்குரிய அருளாளர்களை வருவித்து அவர்கள்மூலம் அவற்றிற்குரிய நெறிமுறைகளை வகுத்து பலகாலம் நமது அறிவின் தரத்தையும் பக்தியின் தரத்தையும் உயர்த்தியருளியதும் ,
   
       இன்று அதே சமயத்தையும் மதத்தையும் மறுக்கச்செய்து உண்மைக் கடவுள் என்பவர் சாதி மதம் சமயம் என்ற ஆச்சார சங்கற்ப விகற்பங்களைக் கடந்து சுத்தசமரசமாய் அனைத்து உயிர்களுக்கும் பொதுவாய் நின்று அருட்பெருஞ்ஜோதி மயமாய் விளங்குகின்றார் என்ற பேருண்மையை உணர்த்தி சாதியையும் சமயத்தையும் மதத்தையும் கரையேற்றி சமரச சுத்தசன்மார்க்கம் என்ற புலைகொலை தவிர்த்த ஒரு புணித நெறியை இவ்வுலகில் நிலைபெறச்செய்து அந்த புணிதநெறியில் இவ்வுலகவர்களை எல்லாம் ஒருமிக்கச்செய்து அவரவர்களின் வாழ்வையும் நிலைபெறச்செய்து அழியாப் பெருவாழ்வாகிய மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்வித்திட வேண்டும் என்ற பெருங்கருணையில் ,
நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமானை இவ்வுலகிற்கு வருவிக்கச் செய்து ,
அவர்களுக்கு தனது பூரண அருள்அனுபவத்தைக் கொடுத்தருள்பாளித்து, 
இவ்வுலகில் தேகாதி முதல் எல்லாம் செய்யவல்ல ஞானசித்தியையும் அளித்து ,
அருட்பெருஞ்ஜோதி இயற்கை தேகமாகிய முத்தேக சித்தி அனுபவத்தையும் கொடுத்து ,
தன்மயமாக்கிக்கொண்டு , இவ்வுலகை அருளாள் ஆட்சிசெய்யும் ஓர் அருட்செங்கோலையும் கையில்கொடுத்து அதற்கு சாட்சியாக கங்கணத்தையும் கையில் கட்டி ,அண்டபகிரண்டம் முழுவதும் அருளால் உனது விருப்பப்படி சுத்தசன்மார்க்க நல்லாட்சி செய்து அருள்வாய் மகனே என்று ,
தனது அடிமுடியை(அந்தம் ஆதி) அறிந்துகொண்ட முதல் ஆன்மா என்பதால் பிள்ளைப் பட்டத்தையும் நமது வள்ளல் பெருமானுக்கு கொடுத்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னைத்தானே நமது வள்ளல் பெருமான் மூலம் வெளிப்படுத்தி அருள்பாளித்தருளினார்கள்🌺🌷🌹.

   அவ்வாறு ,நமது பெருமானாற் 
தான் பூரண அருள் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு இறைஅனுபவத்தின் உச்சியில் நின்று ஆண்டவர் தம்மை அணைய வருகின்ற தருணத்தை ,
ஆண்டவரே இவ்வுலகிற்கு அறிவிக்குமாறு உணர்த்திடவும்,
நமது பெருமானும் அந்த புணித தருணத்தை இவ்வுலகவருக்கு அறிவித்து ,நம்மை ஆளும் பரம்பொருள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பொருட்டு இவ்வுலகிற்கு வரஇருக்கின்றார்கள், அவ்வாறு ஆண்டவர் வரும் தருணத்தில் நீங்கள் எல்லாம் தக்க பக்குவத்தில் இருந்தால் அவரது வருகையினால் அந்த அற்புத பேரொளியின் பேராற்றலால் பெறவேண்டியதை எல்லாம் பெற்று அழியா வாழ்வு பெற்றிடலாம் இவ்வுலகில் என்றும் இளமையோடு நரைதிரை மூப்பற்று  அருள் வாழ்வில் நிலைபெற்று வாழலாம் என்று கூறி,
      அதற்குரிய பக்குவத்தைப் பெறுவதற்கும் நமக்கு தெரியாது என்பதையும் அறிந்த நமது பெருமான்,அப் பக்குவத்தை வருவிப்பதற்கான வழிபாட்டு நெறியையும் "ஞானசரியை" என்ற தலைப்பில் பெருமான் பாசுரங்களாக வகுத்துக்கொடுத்து அப்பாசுரங்களில் கண்டபடி ஆண்டவரை அழுது தொழுது வழிபட்டுவருவீர்களானால் ,என்னைப் போன்று தாங்களும் பெருவாழ்வடைவீர்கள் என்று கூறி ஞானசரியை பாசுரங்களை நமக்கு பெருந்தயவுடன் அளித்துள்ளார்கள்.
  அவற்றில் 11 வது பாடல்தான் கீழ்கண்ட பாடல் இப்பாடலின் பொருளை அடுத்த இரண்டாவது பகுதியில் காண முற்படுவோம்.
  
          ஏனெனில், மலம் ஐந்தையும் காட்டிலும் மிகவும் கொடியது தூக்கமும் சோம்பலும் ,
இவ்வளவு நீண்ட பதிவாய் இருந்தால் அருளை நாடுபவர்களைத் தவிர மற்றவர்கள் சோம்பலால் படிப்பதை தவிர்த்துவிடுவார்கள் என்ற காரணத்தினால் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தொடர்வதற்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் அருட்பிரகாச வள்ளல் பெருமானையும் பிரார்த்தித்துக்கொண்டு இத்துடன் இப்பதிவை நிறைவுசெய்கின்றேன் 🌹
.....நன்றி🙏
....வள்ளல் மலரடிப் போற்றி! போற்றி!🙏
....பெருமான் துணையில்🙏
....வள்ளல் அடிமை🙏
....வடலூர் இரமேஷ்;

[vallalargroups:5971] தத்துவ விளக்கமே நடராஜர் சொரூபமாகும் - வடலூர் இரமேஷ்

அருட்பெருஞ்ஜோதி🌻
அருட்பெருஞ்ஜோதி🌻
தனிப்பெருங்கருணை🌻
அருட்பெருஞ்ஜோதி🌻

    🏵அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்  மெய்த்தொழிலாகிய பஞ்சகிருத்திய தத்துவ விளக்கமே நடராஜர் சொரூபமாகும்🏵
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🍀🍀
     ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்🙏
       
     தில்லைச் சிதம்பர நடராஜர் உருவம்தான் அண்டபிண்டத்தை ஆக்கி ,காத்து, அழித்து, மறைத்து, அருள்பாளிக்கின்ற இயற்கை உண்மைக் கடவுளின் உண்மையான தோற்றமா? அல்லது அந்த தோற்றத்திற்கு காரணமான கடவுள் வேறு யார் ?என்று விசாரம் செய்வோம்  🌺
     
    உண்மைக் கடவுள் ஒருவரே என்பதும், அவர் ஒருவரே இப்பிரபஞ்சத்தில் எல்லாவுமாய் இருக்கின்றார் என்பதும் ,
அவரது இயற்கை உண்மை விளக்கத்தை ,இவ்வுலகவர்களுக்கு தத்துவமாக விளக்கி காட்டுவதற்காக மானுட வடிவில் காட்டப்பட்ட தத்துவ உருவம்தான் நடராஜர் உருவம் என்பதும் நாம் அனைவரும் அறிவோம் 🌺

இயற்கையில் எங்கும் நிறைந்தவராய் ,
இயற்கையில் எல்லாவுமாய் விளங்குபவராய்,
 இயற்கையில் கலந்து நிறைந்திருக்கும் இயற்கை உண்மைக் கடவுளின் தன்மையை,
தத்துவ விளக்கமாக காட்டப்பட்ட  
தத்துவ உருவத்தையே 
உண்மைக் கடவுளாக மனதில் பதியவைத்து வழிபடுவதைக் காட்டிலும்,
அந்த தத்துவ விளக்கத்திற்கு காரணமான இயற்கை உண்மைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், 
தத்துவங்கள் எல்லாம் கடந்த நிலையில் தத்துவாதீதராக இருக்க ,
அவரது உண்மை சொரூபமாகிய அருட்பெருஞ்ஜோதி  நிலையில் வழிபடுவதே ,
உண்மை வழிபாடாகும் 🌺

 🔥மெய்த்தொழில்🔥
          இயற்கை உண்மைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் , தமது "மெய்த் தொழிலாகிய " பஞ்ச கிருத்தியம்" என்னும் ஐந்து பெருங்கருணைத் தொழில்களாகிய சிருட்டித்தல்,
காத்தல்,
அழித்தல்,
மறைத்தல்,
அருளல் என்ற ஐந்து பெருங்கருணைத் தொழில்களை இவ்வண்ட பகிரண்டம் முழுவதும்  நடத்திக்கொண்டு இவ்வுலக உயிர்கள் அனைத்தும் இயற்கை விளக்கம் பெற்று இயற்கை இன்பத்தை அடையும் பொருட்டு  இடையறாது தடையறாது தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருப்பதையே அருட்பெருஞ்ஜோதியின் அசைவு என்றும்,
அந்த அசைவை வெளிப்படுத்தும் உருவத் தோற்றமே நடராஜர் என்றும்,
அந்த அசைவையே "நடம்" என்றும்,
"நடனம்" என்றும்,
 "திருநடம்" என்றும்  இவ்வுலக உயிர்கள் அனைத்தும் இன்பம் அடையும் பொருட்டு நடம் புரிவதால் "ஆனந்த திருநடனம்" என்றும் அருளாளர்களால் பல்வேறாக பெயர்வைத்து வழங்கப்பட்டது 🌺

    இதுபோன்ற பெயரையும் உருவத்தையும்  வைத்தே பல்வேறு சமயங்களும் மதங்களும் தமக்கு ஏற்றாற்போன்று ஒன்றாய் இருக்கும் இறைவனை பல்வேறு தோற்றத்தில் வடிவமைத்துக்கொண்டு ,அதற்கென்று பல்வேறு நெறிமுறைகளையும் வகுத்து வழிபட்டு வந்தன . 
 எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் ஆன்மாக்களின் அறியாமைக்கு தக்கவாறு,
அறிவார் அறியும் வண்ணமாகவும்,
கருதுவார் கருதும் வண்ணமாகவும்,
துதிப்பார் துதிக்கும் வண்ணமாகவும் 
ஆகிய எல்லா வண்ணமுமாக இருந்து நமக்கு வேண்டியதை அருள்பாளித்தார்கள்🌺
       
      தற்போது நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் வருகைக்குப் பிறகு , 
   பெருமான் முன்னின்று நடத்தும் சுத்தசன்மார்க்கத்தின் வாயிலாக
 இவ்வுலகம் உண்மைக் கடவுளை அவரின் உண்மை வடிவமான அருட்பெருஞ்ஜோதி வடிவிலேயே, உண்மை வழிபாடு செய்து, இயற்கை உண்மை லாபத்தை அடையும் பொருட்டு ,அருட்பெருஞ்ஜோதி  வழிபாட்டிற்கு என்று ஓர் ஆன்ம ஆலயமாக சத்தியஞானசபையை  வடலூர் பெருவெளியில் அமைத்து இவ்வுலகத்தின் முதல் ஆன்மத் திருக்கோயிலாக வடலூர் சத்தியஞானசபையை இவ்வுலகத்திற்கு பெருமான் திருவருள் ஆணையால் கட்டாக்கொடுத்து அருளியுள்ளார்கள்🏵

     இவ்வுலகமும் பெருமான் கண்ட சுத்தசன்மார்க்கத்தை சார்ந்து மரணத்தை தவிர்த்து வாழக்கூடிய சாகாக்கல்வியை பயிற்றுவிக்கும் சுத்தசன்மார்க்க நெறியில் பயணித்துக்கொண்டிருக்கின்றது 🌺 

   இனி இவ்வணடம் முழுவதும் சுத்தசன்மார்க்கம் ஒன்றே தழைத்து ஓங்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் திருவுளம் கொண்டுள்ளதாலும் , 
இதுவரை இருந்த சமயம் மதம் போன்ற மார்க்கங்கள் எல்லாம் சுத்தசன்மார்க்கம் என்ற ஓர் அருட்குடையின்கீழ் ஒன்றுசேர்ந்து பயணிக்கும் என்பதுதான் கடவுள் ஆணை என்பதும் திருவருட்பாவின் வாயிலாக நமது வள்ளல் பெருமான் சத்தியம் செய்து சொல்கின்றார்கள்.
அதற்கு ஏற்றார் போல் வடலூர் பெருவெளியில் தோற்றுவிக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமும் இன்று இவ்வுலகம் முழுவதும் பரந்து விரிந்து பல்வேறு கிளைகளாக சுத்தசன்மார்க்க அன்பர்களைக்கொண்டு திருவருளால் நடத்தப்பட்டு வருவதையும் நாம் கவணிக்கின்றோம்🌺

ஆதியில் ஏகராக இருந்த கடவுளே பின்பு ஜீவர்களின் அறிவின் பக்கவம் பொருட்டு அனேகராக வடிவம்கொண்டு அருள்பாளித்தும் ,
தற்போது புலைகொலை தவிர்த்த சுத்தசன்மார்க்கம் தழைத்து ஓங்கும்  சுத்தசன்மார்க்க காலத்தில் மீண்டும் தமது உண்மையை இவ்வுலகம் அறிந்து  வழிபட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற ஒருவரே உண்மைக் கடவுள் என்று மீண்டும் ஏகராகவே தற்போது இவ்வுலகமெல்லாம் ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி வடிவில் சத்திய ஞான சபைகளின் வாயிலாக விளங்குகின்றார்கள் .
அப்படி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிந்து துதித்து வழிபடுபவர்கள் சுத்தசன்மார்க்க சங்கத்தார்களாக இவ்வுலகம் கண்டுகொண்டுள்ளது 🌺 

     ஆகலில் எனதருமை ஆன்மநேய உயிர் உறவுகளே ஆதியில் ஏகராகவும் பிறகு திருவருளால் வருவிக்கப்பட்ட அருளாளர்களின் பக்குவத்திற்கு தக்கவாறு அனேகராகவும் இருந்த  "அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் " என்ற இயற்கை உண்மைக் கடவுளே மீண்டும் ஏகராக சுத்தசன்மார்க்கத்தில் இருந்து அருள்பாளிக்கின்றார்கள் என்பதை உணர்ந்து ,கடவுள் ஒருவரே என்பதும் அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதையும் உணர்ந்து சுத்தசன்மார்க்கம் சார்வோம் 🌺
சுகம் பெறுவோம்🌺
....நன்றி🙏
...வள்ளல் மலரடிப் போற்றி போற்றி 🙏
....பெருமான் துணையில் 🙏
...வள்ளல் அடிமை🙏
....தயவுடன் வடலூர் இரமேஷ்.

Wednesday, June 20, 2018

[vallalargroups:5970] Bangalore KRPuram அன்னதானம்... திவாகர் பிறந்தநாளை முன்னிட்டு

சீவகாருணிய ஒழுக்க முடையவர்களாகிச் சீவர்களைப் பசி யென்கின்ற அபாயத்தினின்றும் நீங்கச் செய்கின்ற உத்தமர்கள், எந்தச் சாதியாராயினும், எந்தச் சமயத்தாராயினும், எந்தச் செய்கையை யுடைவர்க ளாயினும், தேவர், முனிவர், சித்தர், யோகர் முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்புடையவர்களென்றுசர்வசக்தியையுடைய கடவுள்சாட்சியாக சத்தியஞ் செய்யப்படுமென்று அறிய வேண்டும்.

திவாகர் நீடுழி வாழ இறைவனிடம் பிரார்த்தனை...

Monday, June 18, 2018

[vallalargroups:5969] மனிதனுக்கு பெரிய தண்டனை எது

மனிதனுக்கு பெரிய தண்டனை எது ?

உயர்ந்த அறிவு  பெற்ற மனிதப் பிறப்பு கிடைப்பதற்கு பலகோடி புண்ணியம் செய்த பின்பு தான் இறுதியாக இந்த மனிதப் பிறப்பு கிடைத்துள்ளது..

மனிதன் தவறு செய்வதால் தான் மரணம் வருகின்றது.என்பதை தப்பாலே சகத்தவர்கள் சாவதற்கே துணிந்து விட்டார்கள. என்று வள்ளலார் சொல்லுகின்றார்.

மரணம் வருவதை மரணப் பெரும் பிணி என்கிறார்.

மரணப் பெரும்பிணி வாரா வகைமிகுகரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே!

மரணம் என்னும் பிணி வராமல் காக்கும் மருந்து உள்ளது என்கின்றார் வள்ளலார்..

அந்த மருந்து என்ன எது ? 
வெளியில் கிடைக்கும் மருந்தோ.நாம் தயாரித்து உண்ணும் காயகற்ப மருந்தோ அல்ல.நம் உடம்பிலே இறைவனால் வைக்கப்பட்டு உள்ளது. 

என்றே என்னினும் இளமையோடு இருக்க நன்றே தரும் ஒரு ஞான மா மருந்தே ! ...என்றும் அவை இருக்கும் இடத்தையும் சுட்டிக் காட்டுகின்றார்.

சிற்சபை நடுவே திருநடம் புரியும் அற்புத மருந்து எனும் ஆனந்த மருந்தே !

நம் சிரநடுவில் திருநடம் புரியும் ஆன்மாவின்
.. அன்பு தயவு கருணையின் செயல்பாட்டால் அந்த அருள் என்னும் ஞான மருந்து சிற்சபையின் வழியாக சுரக்கும் .அவைதான்  உண்மையான அருள் மருந்தாகும்...அந்த மருந்நை உண்டவர்கள் மரணத்தை வெல்ல முடியும்....

அடுத்து சுத்த சன்மார்க்கிகள் முயற்சி பற்றாமலும்.அஜாக்கிரதையாலும்.அறியாமையாலும்.மரணம் வந்தால்.அடுத்தப் பிறவி என்ன என்பது தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளோம்...

அடுத்த பிறவி என்ன என்பது  மறைமுகமாக இறைவன்  கொடுப்பது தான் தண்டனையாகும்.

பாவத்தின் சம்பளம் மரணம் என்று என்று ஏசுபிரான் சொல்லுகின்றார்...

வள்ளலார் மரணம் என்பது பெரும் பிணி என்கிறார். பிணியால் மரணம் வருவது தண்டனை அல்ல .அடுத்தப் பிறவி கொடுப்பது தான் தண்டனை...என்கிறார் 

மேல் பிறவியான மனித பிறப்பே பிறப்பதற்கு ஆன்மாவிற்கு வாய்ப்பு கொடுத்தால் அவை தண்டனை இல்லை.மீண்டும் மரணத்தை வெல்லும் வாய்ப்புக்கு அனுமதி வழங்கப் படுகின்றது.

மரணம் அடைந்து ஆன்மாவிற்கு கீழ் பிறவி எது கொடுத்தாலும் அவைதான் தண்டனை என்பதாகும் அந்த தண்டனை தான் தாங்க முடியாத தண்டனையாகும்.

கீழ் பிறவி யார் யாருக்கு எல்லாம் கிடைக்கும் என்பதைத்தான் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..

வாய் பேசாத தாழ்ந்த பிறவியான   ஜீவ  உயிர்களை.தெரிந்தோ.தெரியாமலோ அளவில்லாமல் கொள்பவர்களுக்கும்.
அதன் மாமிசத்தை அளவில்லாமல் உண்பவர்களுக்கும்...
நிச்சயம் மனித பிறவி கிடைக்க வாய்ப்பே இல்லை....அதுதான் பெரிய தண்டனை.என்பதாகும்.

வள்ளலார் பாடல் !

உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்

பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிகபரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கேநயப்புறுசன் மார்க்கம்

அவர் அடையளவும் இதுதான்நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே

மயர்ப்பறுமெய்த் தவர்போற்றப் பொதுவில்நடம் புரியும்மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.!

என்ற பாடல் வாயிலாக தெளிவுப் படுத்துகின்றார்...

உயிர்க் கொலை செய்பவர்களும் .அதன் புலாலை உண்பவர்களும்  இறைவன் அருளைப் பெற தகுதி அற்றவர்கள்.அவர்கள் சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைபிடித்தால் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது என்பதை ஆன்ம நேயத்துடன் வற்புறுத்துகின்றார்..
அவர்கள் கீழ்பிறவி செல்லாமல் மீண்டும் மனிதப் பிறவி கிடைக்க நல் வழி காட்டுவது சன்மார்க்கிகளின் ஆன்ம நேய உரிமையாகும்.கடமையாகும்..

மரணம் என்பது தண்டனை அல்ல.கீழ்பிறவிதான் தண்டனை....

மரணம் என்பது தண்டனை அல்ல.மன்னிப்பு கொடுத்து மீண்டும் மனித தேகத்தில் வாழ்ந்து மரணத்தை வெல்லுவதற்கு வாய்ப்பு என்னும் சலுகை இறைவனால் வழங்கப் படுகின்றது..இந்த சலுகையை நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

மரணம் அடைந்து மீண்டும் மனிதப்பிறவி கிடைக்காமல் கீழ் பிறவி கிடைப்பதுதான் தண்டனை என்பதாகும்...

எனவே வள்ளலார் சொல்லும் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் நல் ஒழுக்கத்தில் வாழ்ந்து அஜாக்கிரதையால் மரணம் வந்தாலும் மீண்டும் மனிதப் பிறப்பு இறைவனால் வழங்கப்படும்...இது சத்தியம்.

வள்ளலார் பாடல் !

பொய்விளக்கப் புகுகின்றீர் போதுகழிக் கின்றீர்புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்

கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங் கிணற்றில்விழு கின்றகளியர்எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்

ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை நினைத்தால்அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்

மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே.!

மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்கவும்....

விரித்தால் இன்னும் பெருகும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

Tuesday, June 5, 2018

Friday, June 1, 2018

[vallalargroups:5967] July 2018 First Sunday online speech by Thiru.Thambaiah Avl, Arutperunjothi Trust , Thanjavur

[vallalargroups:5965] அருட்பா ம.கோவிந்தசாமி ஐயா அவர்கள் உயிர் அடக்கம்

தயவுடையீர் !
வந்தனம்.

1.6.2018 (வெள்ளிக்கிழமை) இன்று அதிகாலை 4.30 மணியளவில் சன்மார்க்க உலகின் ஒப்பற்ற அருளாளர்
திருவருட்பா அகவல் உரை நூலாசிரியர் , ஆன்மீக சிரோமணி தயவுத்திரு.
அருட்பா ம.கோவிந்தசாமி ஐயா அவர்கள் உயிர் அடக்கம்
பெற்றார் என்பதனை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அய்யா அவர்களின் நல்லடக்கம் இன்று மாலை 4.00 மணியளவில் விழுப்புரத்தில் நடைபெறும் .

முகவரி:

வள்ளலார் இல்லம்
இந்திரா நகர்
விழுப்புரம்.605602

📱9843207841

அய்யா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் சன்மார்க்க அன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை கண்ணீரோடு காணிக்கையாக்குகின்றோம்!!


மீளாத் துயரில் :
 ------------------------
அனைத்துலக சன்மார்க்க சங்க அன்பர்கள்...

செய்தி வடிவம் : சன்மார்க்க சேவை மையம் வடலூர்

[vallalargroups:5965] விழுப்புரம் கோவிந்தசாமி அய்யா அவர்கள் இறைவன் அடி சேர்ந்தார்

காலமானார்.

வள்ளலார் கொள்கையில் நீண்ட கால அனுபவமும்.சிறந்த பேச்சாளருமான விழுப்புரம் கோவிந்தசாமி அய்யா அவர்கள் இறைவன் அடி சேர்ந்தார்.

Great soul in Sanmargam. He did lot of service at Vadalour peruvali 

RIP

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)