காலைமாலை நீரிலே கிடந்த தேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே.
- சிவவாக்கியர்
பொருள்:
அதிகாலையில் எழுந்து தியானம் செய்ய வேண்டும்.
இரு புருவங்களுக்கு மத்தியில் நமது சிந்தனையை வைக்கவேண்டும்.
அப்படி செய்தால் முக்தி நிலை எளிதில் வாய்க்கும்.
தினமும் குளித்தால் மட்டும் போதாது, தவம் செய்யவேண்டும்.