மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம்
மரம் வாழ்ந்த பின்பு பலகையாகிறது. சந்தன மரம் மட்டும் வாழ்ந்தபின்பும் சந்தனமாகவே இருக்கிறது. ஒப்பற்ற மனித சமுதாயம் மட்டும் வாழும் போதே மூட்டுவலியால் முக்கி, முனங்கி இயக்கம் தடைப்பட்டு மூலையில் ஏன் முடங்க வேண்டும்.
உடல் பருமன் அடைவது போல், இதயமும், மூட்டும் பெரிதாவதில்லை. எனவே அதிக உடல் எடையால் அடிக்கடி மூட்டு வலியால் அவதிப்படும் அன்பர்கள். (நெல்லி, வெண்ப+சனி, கொள்ளு சூப், சாப்பிட வலி குறையும்) நரம்பு பிடிப்பால் சிதைந்து வரும் மூட்டு வலியை முருங்கையும் முடக்கற்றானும் சரி செய்யும்.
முறையான தூக்கம், சாந்தி ஆசனம், தியானம், நல்ல இசை, வழிபாடு முதலியவைகளால் அருமையான மனநலம் பெற்று பிட்ய+ட்டரி சுரப்பிகள் சிறப்பாக இயங்கச் செய்யலாம். குளிர்காலத்தில் உடல் சூடு குறைவதானலும் நரம்புகள் பிடிப்பும், தசை இறுக்கம் மிகுவதாலும் வேர்வை சுரப்பிகள், தோல் சுருங்குவதாலும் மூட்டுக்களின் தரையில் வேலை செய்தாலும், உட்கார்ந்தாலும், படுத்தாலும் மூட்டு வீக்கம், வலி, வளையும் தன்மை அதாவது முடக்குவதாகும் உண்டாகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையால் இரத்த சோகையால் வந்த மூட்டு வலியை மாதுளையும், பேரீட்சையும் சரிசெய்யும். கால்சியம் குறைவால், எலும்பு மஜ்ஜை குறைவால் ஏற்படும் வலியை கீரைச் சாறுகள். முந்திரி, கோஸ், முருங்கை, உணவில் சேர்த்து சரிசெய்யலாம். வாயுப் பிடிப்பால் விளைத்திடும் மூட்டு வலியை போக்க ப+ண்டு சூப், வெங்காய பச்சடி அருந்த வேண்டும்.
மூட்டுவலி பெருக சில காரணி உணவுகள்:
- அதிய அளவு காபி, டீ அருந்துதல்
- அதிக அளவு எண்ணெய் உணவுகள் சாப்பிடுதல்
- கடல் உப்பு, உணவில் அதிகம் சேர்த்தல்
- வெள்ளைச் சீனி சேர்த்த இனிப்புகள், பானங்கள் எடுத்தல்
- அசைவ உணவு
- மொச்சை, பட்டாணி, தட்டைபயறு, உருளை
- பதப்படுத்திய இரசாயன குளிர்பானங்கள் எலும்புகளை உருக்கி சிதைத்து விடுகின்றன.
- மன உளைச்சல், மனபயம், மன சோர்வுகளால் தூக்கமின்மை ஏற்பட்டு பிட்ய+ட்டரி சுரப்பிகளின் இயக்கம் சீர்குலைந்தால் மூட்டு வலி அதிகரித்திட வாய்ப்புகள் உண்டு.
எளிய தீர்வுகள்
- மூன்றுநாள் உபவாசம் (அ) பழச்சாறு நோன்பு 30 நாட்களுக்குள் மூட்டுவலி விரட்டிவிடும்.
- தினமும் மூன்று நிமிட முழங்கால் விரல்களில் கொடுக்கும் பயிற்சி.
- தினமும் மூட்டுகளைச் சுற்றி ஈரத்துணியால் பட்டி போட்டால் 30 நாளில் குணமாகும்.
- இரவு நேர மண்ப+ச்சும், மண்பட்டியும் பகல் நேர மூட்டு வலியை போக்கும்.
- எண்ணெய் இல்லாத உணவுகள் எவ்விதமூட்டிவலியையும் போக்கும்.
- வெள்ளைப+ண்டு, முடக்கற்றான், மூட்டு வலியை ஒட ஒட விரட்டும்.
- வஜ்ஜிராசனம், பத்மாசனம், உட்கடாசனம், தாளாசனமும் கருடாசனம், பாதங்குஸ்தாசனம், படகு ஆசனம், விருச்சிகாசனம் முதலிய ஆசனங்கள் செய்தபின் சாந்தி ஆசனம் செய்து வந்தால் மூட்டுவலி உடலை விட்டு ஓடிவிடும்.
- காலை, மாலை, கனி உணவு உண்பார் கடும் மூட்டு வலியாயினும் கலங்கிடார்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதிசுத்த சன்மார்க்க அன்பன்
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
பாலமுருகன்
காஞ்சிபுரம்
--
Regards,
Manivannan.G.
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment