Sunday, May 27, 2018

[vallalargroups:5961] திருவருட்பா - பதைத்தேன்

திருவருட்பா - பதைத்தேன் 


நாளும் பல கொடிய செய்திகள் நம்மை வந்து சேர்கின்றன. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அவை நம் காதிலும் கண்ணிலும் விழுந்து கொண்டே இருக்கின்றன.

தொலைக் காட்சிகளில் , எங்கே நாம் மறந்து விடுவோமோ என்று காண்பித்த செய்திகளை மீண்டும் மீண்டும் காண்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இதன் விளைவுகள் என்ன என்றால்,

ஒன்று, கொடிய செய்திகளை கேட்டு கேட்டு மனம் மரத்துப் போகும். இது தான் தினம் நடக்கிறதே. வழக்கமான ஒன்று தான் என்று நினைக்கத் தொடங்கி விடுவோம்.

இரண்டாவது, தீய செயல்களில் நம்மை அறியாமலேயே ஒரு சுவை வந்து விடும். நல்லவன் கூட , அட இப்படி செய்யலாமா ? நாமும் செய்து பார்த்தால் என்ன ? என்று ஒரு ஆர்வத்தை தூண்டி விடும்.

தீமைகளை கண்டு உள்ளம் பதை பதைத்தால் தான் அதை செய்யாமல் இருப்போம். செய்பவர்களை விட்டு விலகி நிற்போம். தீயவைகள் சாதாரணமானவை , எப்போதும் நடக்கும் ஒன்று தான் நினைத்து விட்டால், தீமைகளை தட்டிக் கேட்கும் மனம் போய்விடும். நாமும் செய்யலாம் என்றும் நினைக்கத் தொடங்கி விடுவோம்.

வள்ளலார் கடற்கரையில் நடந்து செல்கிறார். அங்கு மீன் பிடிக்கும் வலை, தூண்டில் எல்லாம் வெயிலில் காய வைத்து இருக்கிறார்கள். நாமாக இருந்தால் என்ன நினைப்போம் ? ஏதோ வலை, தூண்டில் எல்லாம் கிடக்கிறது என்று நினைப்போம்.

ஆனால், வள்ளலார் அவற்றைக் கண்டு மனம் பதைக்கிறார். ஐயோ, இந்த கொலை கருவிகளைக் கொண்டு எவ்வளவு மீன்களைப் பிடிப்பார்கள். அவற்றை கொல்வார்கள் . அப்போது அந்த மீன்கள் எவ்வளவு துடிக்கும். தூண்டிலில் சிக்கிய மீன்  எப்படி தவிக்கும் , தொண்டையில் முள் குத்தினால் எவ்வளவு வலிக்கும் என்று நினைத்து பதறுகிறார்.

கொடியவர்கள் மற்றவர்களை கொல்லத் தொடங்கிய போதெல்லாம் பயந்தேன். மற்ற உயிர்கள் பதைக்கும் போதெல்லாம் நானும் பயந்தேன்.  வலையையும் , தூண்டிலையும் கண்டபோதெல்லாம் உள்ளம் நடுங்கினேன்  என்கிறார் வள்ளலார்

பாடல்

துண்ணெனக் கொடியோர் பிற வுயிர்  கொல்லத் தொடங்கிய பேதெல்லாம் பயந்தேன் 
கண்ணினால் ஐயோ பிற வுயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போதெல்லாம் 
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திரு உள்ளம் அறியும் 


பொருள்

துண்ணெனக் = துணுக்குறும் படி

கொடியோர் = கொடியவர்கள்

பிற வுயிர் = பிற உயிர்களை

கொல்லத் தொடங்கிய = கொல்லத் தொடங்கிய

போதெல்லாம் பயந்தேன் = போதெல்லாம் பயம் கொண்டேன்

கண்ணினால் = கண்ணால்

ஐயோ = ஐயோ

பிற வுயிர் = மற்ற உயிர்கள்

பதைக்கக் கண்ட காலத்திலும் = பதைக்கின்ற காலத்திலும்

பதைத்தேன் = பதைப்பு அடைந்தேன்

மண்ணினில் = பூமியில்

வலையும் = (மீன் பிடிக்கும்) வலையும்

தூண்டிலும் = தூண்டிலும்

கண்ணி வகைகளும் = பறைவைகளைப் பிடிக்கும் கண்ணி வகைகளை

கண்ட போதெல்லாம் = பார்கின்றபோதெல்லாம்

எண்ணி = அவற்றை எண்ணி

என் உள்ளம் = எனது மனம்

நடுங்கிய நடுக்கம் = நடுங்கிய நடுக்கம்

எந்தை = என் தந்தையாகிய

நின் = உன்

திரு உள்ளம் = திரு உள்ளம்

அறியும் = அறியும்

துப்பாக்கியை கண்டால் மனம் பதற வேண்டும்.  கறி வெட்டும் கத்தியைக் கண்டால் மனம்  பதைக்க வேண்டும்.

உயிர்கள் துன்பப் படும் போது மட்டும் அல்ல, இனி துன்பப் படுமே என்று நினைத்து வருந்துகிறார் வள்ளுவர்.

அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை என்பார் வள்ளுவர்.

மற்ற உயிர்களை நம் உயிர் போல் நினைக்க வேண்டும்.

அருளின், கருணையின் உச்சம் இது.

அந்த உயர்ந்த அன்பு நம் மனத்திலும் சுரக்கட்டும்.

Monday, May 14, 2018

[vallalargroups:5959] நெஞ்சை உருக்கிய கதை.

நெஞ்சை உருக்கிய கதை.

🍀 தலைப்பு:- இன்னும் சில நாட்கள்.....

🍀 காலை நேரம்., அலுவலகத்திற்கு 
கிளம்பியாக வேண்டும் நான்.

🍀 செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். 
அய்யோ....

🍀 என்ன ஆயிற்று எனக்கு?

🍀 நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?

🍀 ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....

🍀 நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.

🍀 காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? 
மணி பத்தாகிவிட்டது

🍀 என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம்.

🍀 அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான்.

🍀 அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்......

🍀 என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். 
என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.

🍀 நான் இறக்கவில்லை.,
இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன்.

🍀 ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை.

🍀 என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை.

🍀 அய்யோ என்ன செய்வேன் நான்? 
எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?

🍀 நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா?

🍀 என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான்.
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள். 
அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும்.
இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.

🍀 அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான்.

🍀 ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன்.

🍀 "ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்" என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் "
என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை.
உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை.

🍀 "கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்!

🍀 திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி.
ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..

🍀 என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன் முதன் முறையாக.
முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

🍀 இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.
நண்பர்களே......

🍀 இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள்.

🍀 ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!!!

Thursday, May 10, 2018

[vallalargroups:5957] Bangalore Sanmarkka Thondar Nagaraj Marriage @ Vadalur

பெங்களூர் சங்கத்தின் வள்ளற் தொண்டர் நாகராஜிற்க்கு திருமணம் நடைபெற உள்ளது. அனைவரும் வள்ளற்பெருமானிடம் பிரார்த்தனை செய்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

[vallalargroups:5956] முத்தேக சித்தி அனுபவத்தைப் பெறுவதற்கு

அருட்பெருஞ்ஜோதி🔥
            அருட்பெருஞ்ஜோதி🔥தனிப்பெருங்கருணை🔥
             அருட்பெருஞ்ஜோதி🔥
                   மந்திரம்💥
                      மருந்து🌿
                         மணி🔥
                   *************
          ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து 
மகிழ்கின்றேன்💐🙏
          அருமை சகோதர சகோதரிகள் தயவுசெய்து இந்தப் பதிவை ஒரு ஐந்து நிமிடம் பொறுமையுடன் பார்த்து படித்து அறிந்துகொள்ள
வேண்டி, தயவுடன் விண்ணப்பித்துக் கொள்கின்றேன்🙏.
          எத்தனையோ கலை நிகழ்ச்சிகளுக்கு நாம் குடும்பத்துடன் சென்று அமர்ந்து பொறுமையுடன் குறைந்தது மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நேரத்தைக் கழித்து ,
        எந்தவிதத்திலும் நமது உடம்பிற்கோ உயிருக்கோ  எந்தவிதப் பயனைத் தராமலும்,
வெறும் மனதளவில் சந்தோஷித்து , கண்ணால் பார்க்கின்ற அந்த நேரத்தில்மட்டும் ஒருசிறு மணித்துளிகள் மனதிற்கு மகிழ்வைத் தரக்கூடிய சிற்றின்பத்தால் காலத்தை விரையம் செய்து, வளர்ந்து, வாழ்ந்து வயோதிகத்தால் நரை திரை மூப்பு கண்டு இறுதியில் மாண்டு மடிந்துப் போக்கின்ற நாம் அனைவரும் ,
     என்றாவது நாம் பெறுதர்கரிய 
இந்த மானிடத்தேகத்தைப் பெற்றுக்கொண்டோமே ,
இந்த உடம்பின் வகையையும், உயிரின்வகை ,
இவ்விரண்டையும் இயக்கும் சிவமாகிய பரம்பொருள் தன்மையையும்ம், அருள்சக்தியின் ஆற்றலையையும் பற்றி என்றாவது சிந்தித்திருப்போமா ?

     இதைத்தான் நமது அருட்பெருந்தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவருட்பா ஆறாம்திருமுறை பக்கம் 340 முறையீடு என்ற தலைப்பில் கடைசி பாடலில் தமது வருத்தத்தை பதிவுசெய்து நமக்காக  நமது அலட்சியப்போக்கை நினைத்து ,மனம் வருந்தி வெளிப்படுத்தியுள்ளார்கள்.
 
 பாடல்;🌷
 சிரிப்பிலே பொழுது கழிக்கும் இவ்வாழ்க்கைச் 
           சிறியவர்  சிந்தை 
             மாத்திரமோ
பொருப்பிலே தவஞ்செய் 
பெரியர்தம் மனமும்
             புளிப்பிலே துவர்ப்பிலே
             உவர்ப்புக் 
கரிப்பிலே கொடிய 
கயப்பிலேகடிய
             கார்ப்பிலே
             கார்ப்பொடு கலந்த
எரிப்பிலே புகுவதன்றி 
எள் அளவும்
         இனிப்பிலே
               புகுகின்ற திலையே;
....என்று இவ்வுலகில் நம்மை அகமிருந்து ஆளும் நமது அருட்பெருந் தலைவராகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய தரம் அறியாது, நிலையற்ற இவ்வுலகவாழ்வையே நிலையாகப் பிடித்துக்கொண்டு விரும்பி களித்து காலத்தை வீணாக்குகின்ற ஆன்ம சிறுமையையுடைய சிறியவர்கள்தான் மண்ணாசை பெண்ணாசை பொன்னசை என்ற விடய சிற்றின்ப நிகழ்வுகளில் காலத்தை வீணடிக்கின்றார்கள் என்றால் !
    இவை எல்லாவற்றையும் அறிந்திருக்கும் தவத்தில் சிறந்த பெரியோர்கள்கூட தமது மனத்தை தேனாய் தெள்ளமுதாய் இனிக்கும் அழிவற்ற நிலையான பேரின்பத்தை அளிக்கக்கூடிய அருள்வாழ்வை நாடச்செய்யாமல் ,
    மற்றைய  விடய விஷயங்களில் நாடச்செய்து பொருப்பற்று காலத்தை விரையம் ஆக்குகின்றார்களே என்று நமது அருட்பெருந் தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் மிகவும் வருந்துகின்றார்கள்👏.
     உயர்ந்த ஆறறிவு உடைய உயர்பிறப்பாகிய மனித தேகத்தைத்தைப் பெற்றுள்ள நாம் நமது மனித பிறப்பு எதற்கு கொடுக்கப்பட்டது?
   
     இம்மானுடத் தேகத்தினால் அடையவேண்டிய நமது ஆன்ம லட்சியம்தான் என்ன?
    
      நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த உடம்பின் உயர்ந்த தரம் என்ன ?
   
     இவ்வுடம்பை இயக்கும் நமது உயிரின் தரம் என்ன ?
    
       இவ்வுயிரையும் இவ்வுடம்பையும் நமது ஆன்ம உள்ளொளியாய் இருந்து இயக்கும் நமது ஆன்மநாயகராகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தரம் என்ன ?
        
         இந்த உடம்பை நாம் என்ன செய்தல் வேண்டும் ?
        
       நமது உயிராகிய ஆன்மா எந்த நிலை அடைதல் வேண்டும் ?
         என்று என்றாவது பொருப்போடு விசாரித்து விளக்கம் பெற்றுள்ளோமோ ?
    அதற்காண முயற்சியை மேற்கொண்டுள்ளோமா ?

     எனது ஆன்ம உயிர் உறவுகளே !
     ஆயிரம்கோடி சூரியப் பிரகாசமுடைய அருட்பெருஞ்ஜோதியை நமது ஆன்மாவின் அகத்தில் கொண்டுள்ள நாம் எப்படிப்பட்ட அற்புத சக்தியோடு  இருக்கின்றோம் என்பதும்.
    அந்த அற்புத சக்தியை நாம் எப்படி அடைவது என்பதும்.
   அவற்றை அடையவிடாமல் நமக்கு தடையாக மறைப்பாகவும் திரைகளாகவும் இருக்கின்றவைகள் எவை எவை என்பதையும் அறிந்திருக்கின்றோமா?
     அவற்றை அறிந்து அடைந்தவர்கள் சித்தர்களாகவும் ஞானிகளாகவும் மாறிவிட்டார்கள் ஆனால் நாம் ........?

     🙏🔥பொய்யுடம்பும் மாற்று 
         அரியா பொன்னுடம்பும்🔥🙏
         நாம் பெற்றுள்ள இந்த அசுத்த புலால் உடம்புதான் ,
      மாற்று (தங்கத்தின் மதிப்பைக் குறிக்கும் அளவீடு) இத்தனை என்று அளவிடமுடியாத சுத்த பொன்னுடம்பாய் மாறக்கூடியது என்பதை நாம் அறிந்துள்ளோமா ?
          ஆம் நாம் பெற்றுள்ள இந்த உடம்பு  பஞ்சபூதத்தில் மண்ணின் தன்மைக்கொண்டு விளங்கும்  இம்மண்ணுடம்பிற்கு "மெய்" என்றும் ஓர் பெயர் உண்டு. 
      " பொய்" என்பது நிலையில்லாமல் அழியக்கூடியது.
         "மெய்" என்பது அழிவற்று என்றும் நிலையாக இருக்கக்கூடியது.

 நமது அசுத்த இந்திரியங்களையும்,
நமது அசுத்த அறிவையும்,
நமது அசுத்த கரணங்களையும்,
நமது அசுத்த ஜீவனையும்,
நமது அசுத்த ஆன்ம குற்றங்களையும்
திருவருட் சேர்க்கையால்(அருளொளி) சுத்த இந்திரியங்களாகவும்,
சுத்த கரணங்களாகவும்,
சுத்த ஜீவனாகவும்,
மலங்களற்ற சுத்த ஆன்மாவாகவும்  மாற்றம் செய்து ,
கடவுளது மெய்யறிவையும்,
கடவுளது மெய்யுடம்பையும் பெற்று இவ்வுலகில் அருள்வாழ்வு வாழப்பிறந்தவர்கள் என்று ,
நாம் நமது அற்புதத்தன்மையை என்றாவது உணர்ந்திருக்கின்றோமா?

   ஆன்மநேய உயிர் உறவுகளே ,
   இப்படி இந்த அசுத்த பொய்யான புலால் உடம்பை சுத்த பொன்னுடம்பாய் மாற்றி நமது அகம் நிறைந்துள்ள கடவுளின் தன்மையை முழுவதும் பெற்று வாழக்கூடிய வழி துறைதான் இந்த மருந்து மந்திரம் மணி என்பவைகளாகும்.

     🙏�மருந்தறியேன்,     
            மணியறியேன் ,
                மந்திரம் ஒன்றறியேன் 🔥🙏
        மேற்கூறிய இந்த மருந்து மந்திரம் மணிவகை அறியாமல்தான் நமது வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் ,
முறையீடு செய்கின்றார்கள்.
  திருவருட்பா ஆறாம்திருமுறையில் முறையீடு என்ற 9வது தலைப்பில் முதல் பாடலாக ,
 மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம் ஒன்றறியேன்
 மதியறியேன் விதிஅறியேன் வாழ்க்கை நிலை அறியேன்.
      ....என்று ஆண்டவரிடம் முறையிட்டு வேண்டுகின்றார்கள்.

 இதில் ,
மருந்து சுத்த உடம்பையும்,
மந்திரம் பிரணவ உடம்பையும்,
மணி ஞான உடம்பையும் தரவல்லது.
   எப்படி என்றால்

மருந்து 🌿(அருள் உணவு) ;
        மருந்து என்பது நமது முதலாவது அசுத்த தூல உடம்பை திருவருட் சேர்க்கையால் சுத்தமாகிய சத்துவகுணம் நிறைந்த அருளைத் தரவல்ல  இயற்கை தாவர "சுத்த அருள் உணவினால்" "சுத்த பொன் உடம்பாய்" மற்றித் தரவல்லது🌿

மந்திரம் 💥(அருள் உணர்வு);
      மந்திரம் என்பது நமது இரண்டாவது சூக்கும அசுத்த கரண உடம்பை திருவருட் சேர்க்கையால் சுத்த "அருள் உணர்வினால்" சுத்த "ஓங்கார பிரணவ தேகமாய் " மாற்றித் தரவல்லது💥

மணி 🔥( அருள் ஒளி );
           மணி என்பது நமது மூன்றாவது தேகமாகிய அசுத்த காரணத் தேகத்தை திருவருட் சேர்க்கையால் அருளொளிக்கண்டு "அருள் உறவினால்"சுத்த ஞானத் தேகமாக மாற்றித் தரவல்லது என்பதாகும்.

      இந்த முத்தேக சித்தி நிலைதான் அருட்பெருஞ்ஜோதி கடவுளது தன்மையோடு விளங்கும் 
எல்லாம் செய்யவல்ல ஞான சித்திநிலையாயும்,
அழிவற்ற இயற்கை அருட்பெருஞ்ஜோதி பெருவாழ்வு நிலையாகவும் உள்ளது.

     இந்த உண்மையை தமது அகத்தில் அனுபவித்து அறிந்திருந்த நமது தமிழ் சித்தர்கள் , புறத்தில் அந்த கடவுள் அனுபவத்தை தத்துவமாக உலகிற்கு உணர்த்துவதற்காகத்தான் கோயில் கற்பகிரகங்களில் கடவுள் சிலைகளை அற்புத சித்த மருந்துகளாலும்,
நவமணிகளாலும்,
மந்திரத்தினாலும் உச்சாடனம் செய்து கடவுள் சிலைகளை அமைத்து மக்களை வழிபடச்செய்தார்கள்🌷💐.

🙏🔥 மருந்துஇது,
             மந்திரம்இது 
                மணிஇது என்று அறிந்துகொள்ளல்🔥🙏
            மேலே கண்ட முறையீடு பாடலில் நமது அருட்பெருந்தந்தை வள்ளல் பெருமான் , இந்த மருந்து மணி மந்திரம் எதுவென்று அறியாமல் ஆண்டவரிடம் முறையிட்டு அழுதார்கள்.
     அதன் பலனாக அந்த மருந்தையும் மருந்தையும் மணியையும் ஆண்டவர் அறிவித்து அருளியதை,
ஆறாம்திருமுறை "அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர் " என்ற தலைப்பில் ஆண்டவர் தனக்கு அருள்பாளித்த வல்லபத்தை கீழ்கண்ட பாடல் மூலம் தெளிவுபடுத்துகின்றார்கள்.
பாடல்💐🌷
மருந்துஇது
மணிஇது மந்திரம்இது 
       செய்வகைஇது  
        துறைஇது
        வழிஇது எனவே
இருந்தெனுள் அறிவித்துத் தெள்ளமுதளித்தே
          என்னையும்   
          தன்னையும்
          ஏகமதாக்கி
........என்று ஆண்டவர் மருந்து மணி மந்திரத்தை அருளொளியால் பெறச்செய்த அனுபவத்தை இப்பாடல் பாடல்மூலம் பெருமான் பதிவுசெய்கின்றார்கள்.

  🙏🔥 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மருந்தாய் மணியாய் மந்திரமாய் இருப்பது🔥🙏   
    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மருந்தாய் மந்திரமாய் மணியாய் இருப்பதை அருட்பா ஆறாம்திருமுறை "காட்சி களிப்பு"என்ற 41 வது தலைப்பில் 7வது பாடலில் ,
 மருந்தானை மணியானை வழுத்தா
         நின்ற மந்திரங்க
         ளானானை
         வானநாட்டு
விருந்தானை உறவானை  நண்பினானை....
      என்று மருந்தாயும் மணியாயும் மந்திரமாயும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே இருந்து அருள்பாளிப்பதையும் நமது அருட்பெருந் தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.

     மேலும் மருந்தாய் ,மந்திரமாய்,மணியாய் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எப்படியெல்லாம் நமது உடம்பை பற்றியிருக்கும் பிணியையும்,
 உயிரைப் பற்றியிருக்கும் பிணியையும் நீக்கி,
 இவ்வுடம்பை 
சுத்த  பொன்னுடம்பாகவும்,
சுத்த பிரணவ உடம்பாகவும்,
சுத்த ஞான உடம்பாகவும் மாற்றித் தருகின்றார்கள் என்பதை "அருட் பெருஞ்ஜோதி அகவல் "
1291வது வரி தொடங்கி 1336 வரிவரை பார்த்து படித்து அறிந்து உணர்ந்து அருள்ளொளியால் முத்தேக சித்தி அனுபவத்தைப் பெறுவதற்கு முயல்வோம்;
இதனை விரிக்கில் விரிந்துகொண்டே இருக்கும்,
ஆனால் நமக்கு படிப்பதற்கு மனம் பொறுமையுடன் சம்மதிக்காது என்ற காரணத்தினால் இத்துடன் நிறைவுசெய்துக்கொள்கின்றேன்;
......நன்றி 🙏
........வள்ளல் மலரடிப் போற்றி ! போற்றி ! 🔥🙏
....பெருமான் துணையில்🔥🙏
......வள்ளல் அடிமை 🙏
.....வடலூர் இரமேஷ்🙏

Sunday, April 29, 2018

[vallalargroups:5954] Today Vallalar Poor Feeding On Behalf of Miss.Kalawathy Birthday @ Bangalore , K R Puram, Ramamurthy Nagar Area

செல்வி.கலாவதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு , ஆதரவு இல்லாத பசித்த ஏழைகளுக்கு உணவு கொடுக்கப்பட்டது.

செல்வி.கலாவதி அவர்கள் நீடுழி எல்லா நலமும் ,வளமும்  பெற்று வாழ வள்ளற்பெருமானிடம் பிராத்தனை செய்வோம்


[vallalargroups:5953] support Sticks to Needy @ Bangalore KRPuram

Support Sticks to Needy @ Bangalore KRPuram

Sponsored by Bangalore Vallalar Devotee thayavu. Damotharan &friends

Monday, April 23, 2018

[vallalargroups:5952] எம்மதத்தினருக்கும் பொருந்தும் கதை..

வாரியார் ஸ்வாமிகள் சொன்ன நல்லறிவு கதை.....கடவுளைக் காணத் தேவைப்படும் கண்ணாடிகள்!!!

ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான்.

"ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்'' என்றான்.

"தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.''

"ஓ! கடவுள் என்று ஒன்று

உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?''

"தம்பீ, காண முயலுகின்றேன்.''

"கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?''

"இல்லை.'' "கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?'' "இல்லை.''

"ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை; இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?''

"அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?'' "தேன் பாட்டில்.'' "தேன் இனிக்குமா, கசக்குமா?'

"என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.'' "தம்பீ! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.'' மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.

"ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.''

பெரியவர் புன்முறுவல் பூத்தார். "அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது, உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.

"தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!''

என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.

மாணவன் வாய் சிறிது அடங்கியது. "பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.''

"தம்பீ! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றனையா?'' "இல்லை.''

"என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால் தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப் பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.'' மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.

"என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?'' "உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?'' "என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.''

"தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''

"ஆம். நன்றாகத் தெரிகின்றது.'' "அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?'' "என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?'' "அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?''

"ஆம்! தெரிகின்றன.'' "முழுவதும் தெரிகின்றதா?'' அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது'' என்றான்.

"தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?'' மாணவன் விழித்தான்.

"ஐயா! பின்புறம் தெரியவில்லை.'' "என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?''

"முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.'' "அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு....''

"எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.'' "தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''

"ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.'' "தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?

மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான். தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம் தெரியவில்லை!'' என்றான்.

"குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.'' "ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.''

"தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.'' "ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?''

"அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.

"தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.'' என்று முடித்தார்.

Wednesday, April 4, 2018

[vallalargroups:5950] ஞானசரியை

அருட்பெருஞ்ஜோதி !
            அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
            அருட்பெருஞ்ஜோதி !
               ஞான சரியை
                      ********
         ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவோடு தெரிவித்து மகிழ்கின்றேன்.

       நமது திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் இவ்வுலகவர்களின் புறக்கண்ணுக்கு தெரியாத வண்ணம் அருட்பெருஞ்ஜோதியில் கலந்து நிறைந்து நமது அகத்தில் வந்தமர்வதற்கு முன்பு,
  நம் அனைவரையும் உய்விக்கும் பொருட்டு திருவருட்பா ஆறாம் திருமுறையில் "ஞான சரியை" யில் குறிப்பிட்டுள்ள வண்ணம் நீங்கள் அனைவரும் ஆண்டவரை வழிபட்டுவாருங்கள் என்று அறிவுறுத்தினார்கள்.

   ஞானசரியை என்பது ,
சித்தர்கள் வகுத்த இறைஒழுக்கங்களான சரியை கிரியை யோகம் ஞானம் என்ற 16படிகளில் வருகின்ற 13 வது படியாகவும் கொள்ளலாம்,
அல்லது எல்லாம் வல்ல கடவுளது "மெய்யறிவை" அடைவதற்குரிய பக்குவத்தை பெறுவதற்கு நமது "அறிவை ஒழுக்கப்படுத்துவதற்கு"
"நெறிப்படுத்துவதற்கு" உரிய வழிப்பாட்டுமுறைகள் என்றும் கொள்ளலாம்.

     அப்படி நம்பொருட்டு பெருமான் 
தயவுடன் கொடுத்தருளிய ஞானசரியை பதிகத்தின் முதல் பாடலின் பொருளை ஒருவாறு எனது சிற்றறிவில் உதித்துவித்த வண்ணம் இங்கே தங்கள் அணைவரிடமும் பகிர்ந்துகொள்கின்றேன்.

   இப்பாடலில் இரண்டு முறை வருகின்ற வார்த்தைகள் எல்லாம் அடுக்குத்தொடர் வார்த்தைகள் என்று நினைத்தல் கூடாது , அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட இரண்டு பொருளை உணர்த்தக்கூடியவைகள்
என்பதை உணர்வோம்.
பாடல்;
நினைந்து நினைந்து ;
***********************
            ஆன்மாக்களாகிய நாம் ஆண்டவரை வழிபடும்போதும் மட்டுமல்ல மற்ற எல்லா சமயங்களிலும் நமது சிறுமைகுணத்தை முதலில் வெளிப்படுத்தி பிறகு இறைவனின் பெருமைகளை போற்றவேண்டும்,
வள்ளல் பெருமான் திருவருட்பா பாடல் ஒவ்வொன்றிலும் கவணித்தோமானால் தன்னைக்காட்டாத வண்ணம் ,
நான் எனது என்ற "தற்போத" அகங்காரத்தை எழும்பவிடாத வண்ணம் ,
நாயினும் கடையேன்,
ஈயினும் இழிந்தேன்,
புன்னிநிகர் இல்லேன்,
மலத்தில் புழுத்த புழுவினும் சிறியேன்,
இன்னும் எவ்வளவோ சிறுமையான வார்த்தைகளால் முதலில் தன்னைத்தானே இழிவாகச் சொல்லி பிறகு இறைவனை போற்றி புகழ்வார்கள்.    
     அதுபோன்றே நாமும் நமது சிறுமைகளாகிய குற்றங்களை முதலில் நினைத்தும் பிறகு ஆண்டவனின் பெருமையை நினைத்தும் ஆண்டவரை வழிபடுதல் வேண்டும் என்பதாம்.

உணர்ந்து உணர்ந்து ;
***********************
          ஆண்டவரை கலைகளால் உணர்வது ஒன்று அனுபவத்தால் உணர்வது ஒன்று,
அதாவது படித்த சாத்திரத்தாலும்,
தோத்திரத்தாலும்,
பிறர் சொல்லக்கேட்ட 
கேள்வி ஞானத்தாலும், இறைவனை ஆராய்ந்து அறிந்து உணர்வது என்பது ஆண்டவனை "சாத்திரத்தால் உணர்வது" என்பதும்
 "சாத்திர ஞானம்" என்றும் "படிப்பறிவும்" என்பதுமாகும்.
    மற்றொன்று ஆண்டவரை படித்த சாத்திரத்தாலும் ,பிறர் சொல்லக்கேட்ட ஞானத்தாலும் அறிந்து "அனுபவித்து உணர்வது" என்பதாகும் .
இது "அனுபவ ஞானம்" "அனுபவ அறிவு".என்பதாகும்.

இங்கு அறிவது என்பது ஆராய்ச்சி,
உணர்வது என்பது அனுபவம்;
இறைவன் அனுபவத்தில் விளங்குபவராய் இருப்பதால் அனுபவஞானமே சிறந்தது என்பதாகும்;

நெகிழ்ந்து நெகிழ்ந்து ;
*************************
ஆண்டவரை வழிபடும் போது முதலில் உள்ளமாகிய மனம் நெகிழ்தல் வேண்டும் பிறகு உயிராகிய ஆன்மா நெகிழுதல் வேண்டும் .
ஆன்மா நெகிழ்ந்தால்தான் அதனுள் இருக்கின்ற இறைவனை நமது அன்பாலும் அழுகையாலும் நெகிழ்விக்க முடியும்.
வள்ளல் பெருமான் பிள்ளபெறுவிண்ணப்பத்தில் ஒருபாடலில் ,
"நிருத்தனே நின்னை துதித்தபோதெல்லாம் நெகிழ்ச்சி இல்லாமையால் ,பருத்த எனது உடம்பை பார்த்திடற்கு அஞ்சி ஐயோ படுத்தனன் எந்தாய்" என்பார்கள்;

ஆகலில் மனம் நெகிழ இறைவனை வழிபடுதலைக்காட்டிலும்,
ஆன்மா நெகிழ இறைவனை வழிபடுதலே சிறந்ததாகும்;

அன்பே நிறைந்து நிறைந்து;
*******************************
  அன்பு என்பது இரண்டுவகையாக உள்ளது ,
1:காமிய அன்பு,
2: நிஷ்காமிய அன்பு.

        காமிய அன்பு என்பது ஏதோ ஒரு பொருளின் பொருட்டோ அல்லது ஒரு பயனை எதிர்பார்த்தோ ஒருவரிடம்
அன்புகொள்ளுவது என்பது காமிய அன்பு என்பதாகும். 
காமியம் என்பது செயல் அல்லது வினை என்ற பொருள்படும்.

     நிஷ்காமிய அன்பு என்பது எதையும் எதிர்பார்க்காமல் ஆன்மநேயத்தோடு மற்றவர்கள் மீது அன்புகொள்வது என்பதாகும்.
இதேபோன்று இறைவனை வழிபடும்போதும் முதலில் ஏதோஒன்றுஎதிர்பார்த்து பிறகு எதையும் எதிர்பார்க்காமல் இறைநேயத்தோடு அன்பு செலுத்துவது என்பதாகும்.
     காமிய அன்பு மாறக்கூடியது,
நிஷ்காமிய அன்பு என்றும் மாறாதது,
வள்ளல் பெருமான் நமது ஆண்டவர்மீது மாறாஅன்புகொள்வீர் என்பார்கள்;
ஆகலில் நிஷ்காமிய அன்பே சிறந்தது என்பதாகும்.

ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து,
******************************
        மேற்கூறிய வண்ணம் ஒரு ஆன்மா, தனது சிறுமையை நினைத்தும் உணர்ந்தும் நெகிழ்ந்தும் வருந்துகின்றபோது ,கண்ணீர் பெருக்கெடுத்து வெளிவரும் அது முதலில் அழுகை கண்ணீராக வருகின்றது ,
பிறகு இறைவனின் பெருமையை நினைத்தும் உணர்ந்தும் நெகிழ்ந்தும் இறைவனையே பற்றி வருந்துகின்றபோது ஆணந்தகண்ணீர் வருகின்றது,
இந்த இரண்டு கண்ணீரும் பெருக்கெடுத்து உடம்பு நனைக்கப்படுகின்றது;
இந்த அனுபவத்தை வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி அகவலில் 1460வது வரிகளில்,
"உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக் கண்ணீல் நீர் பெருகிக் கால்வழிந்து ஓடிட" என்று தெரிவித்து
நமக்கு வெளிப்படுத்துவார்கள்;

அருளமுதே நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து
ஏத்துதும்நாம் வம்மின் உலகியலீர்.
*****************************************
 மேற்கூறிய வண்ணம் அழுது தொழுது கண்ணீர் பெருகி உடம்பெல்லாம் நனைய அருளாகிய அமுதத்தை வழங்கக்கூடிய அருளமுதமே,
இவ்வுலகமெல்லாம் தழைத்து இன்பம்பெற ஞான நடம்புரிகின்ற அரசே,  எழுபிறப்பிலும் எனது உயிருக்கு உற்றதுணையாக வருகின்ற என்உரிமையுடைய தலைவனே என்று எண்ணத்தாலும் சொல்லாலும் அலங்கரித்து அலங்கரித்து துதித்து வணங்கிடுவோம் வாருங்கள் உலகவரே என்று இந்த உலகத்தில் உள்ளவர்கள் அனைவரையும் அழைக்கின்றார்கள் நமது பெருமான்.

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்,
*******************************
   மேற்கூறியபடி ஆண்டவரை நினைந்து,உணர்ந்து,நெகிழ்ந்து,அன்புநிறைந்து நிறைந்து ஊற்றெழுந்து வருகின்ற கண்ணீரால் உடம்பு நனைந்து நனைந்து வருந்தி துதித்து வணங்கினால் மரணத்தை வென்று இவ்வுலகில் நிலையாக வாழக்கூடிய அருட்பெருவாழ்வு பெற்று வாழ்ந்திடலாம் கண்டீரோ என்கின்றார்கள்.

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
*************************************
     உலகவர்களே நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பிள்ளை என்பதற்காகவும் ,
அவர் எனது தந்தை என்பதற்காகவும் ஒருதலையாக நின்று ஆண்டவரைப்பற்றிய வார்த்தைகளால் இங்கு சிறப்பித்து அழகுபடுத்தி பெருமைப்பட சொல்லவேண்டும் என்று பொய் சொல்லவில்லை ,
சத்தியமாகவே சொல்லுகின்றேன் உலகவரே,
இந்ததருணம்தான் பொற்சபை சிற்சபை என்று சொல்லக்கூடிய பரமாகாச்திலும் சிதாகாசத்திலும் புகுந்துகொள்ளக்கூடிய தருணமாக இருக்கின்றது ஆகலில் விரைந்து வாரீர் என்று உலகவரை அன்போடும் ஆவலோடும் அழைக்கின்றார்கள் நமது பெருமான்;
சுத்தசன்மார்க்கமே சிறந்தது;
சுத்தசன்மார்க்கமே நிலைப்பது;
என்றுணர்ந்து அணைவரும் வாரீர் ;
....நன்றி,
.......வள்ளல் மலரடிப் போற்றி போற்றி,
........பெருமான் துணையில்,
.........வள்ளல் அடிமை,
...........வடலூர் இரமேஷ்;

Wednesday, March 28, 2018

[vallalargroups:5949] Vallalar Satsang Program in Thanjavur

Vallalar Satsang Program in Thanjavur

Date 23,24 th June (saturday,sunday)

All are welcome to join this satvichara program at thanjavur - arutperunjothi Trust by Th.Thambaiah

Train Tickets are available now. Confirm your presence.

Accommodation and Food will be provided by Arutperunjothi Trust.

Only Vegitarian People are allowed to attend this program

Thanks
karthikeyan

Saturday, March 24, 2018

[vallalargroups:5948] உப்பும் தேனும்

உப்பில் இருப்பது அசுர குணம்.! தேனில் இருப்பது தேவர் குணம்.!--சித்த மருத்துவம்

உப்பின் தன்மை என்ன ?

சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ?
இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு...
உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும் ,இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள்
இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் ..
ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றல் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் .
உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் .
சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உன்ன பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள் ...

தேன்....

தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் . சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?
தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது .. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது . இதனால் தான் தேனனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் . மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் .
ஒரு நெல்லி கனியை தேனில் ஊரப்ப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் .
இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள் ..
மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ:-

1.மாதம் 2 முறையாவது 3 வேளையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் .

2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் .
தேன் சர்க்கரை நோய்களை தூண்டது .

3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும்
நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது .

உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள் )
இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும் நோய்களை குணப்படுத்த
உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது இன்றைய மருத்துவம்(alaopathy )

இனிப்பை வைத்து வைத்யம் செய்வது homeopathi .
உப்பும் ,தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது.

நல்ல தேனை எறும்பு தீண்டாது ,,உப்பையும் எறும்பு தீண்டாது
கருவாடு ,உறுகாய்,போண்டரைவைகள் உதாரணம் ...
நம் சமயத்தில் தேவ அசுர சண்டை என்பது தேனுக்கும் உப்பிற்கும் நடக்கும் சண்டையே .

தேவ அமிர்தம் என்பது தேன் ...
தேன் தேவகுணம் உடையது
உப்பு அசுரகுணம் உடையது
தேன் தேவர்கள் போல் நம்மை இறைவனிடத்தில் அழைத்து செல்லும்
உப்பு பூலோகத்தில் இருக்க வைக்கும் ..
இவைகள் உடல் சார்ந்த விவரம் ....

ஆகவே உப்பை குறைத்தும் ,தேனை சேர்த்தும் சாப்பிட்டு பழகி கொள்வோம் ...

பகிர்வு

[vallalargroups:5947] கஞ்சி , சுக்கு காபி தருமச்சாலையில்

கஞ்சி   , சுக்கு காபி தருமச்சாலையில்
above is doing by sanmarkka sathukkal sath hari & co with dharmasalai support

MOre details Sathu.Hari ...9597786027



🙏🙏🙏🙏

Wednesday, March 21, 2018

[vallalargroups:5946] வெந்நீர் + எலுமிச்சை + தேன்

*"வெந்நீர் + எலுமிச்சை + தேன்"*

தெய்வீக இயற்கை பானம் வாழ்நாள் முழுவதும், 
"நாளின் முதல் திரவ உணவாக" எடுத்துக்கொள்ளும் பட்சத்தில்,
"புற்று நோய்" என்ற,
இந்த நூற்றாண்டில் மனித குலத்தை மிக பயப்படுத்தும் ஒரு வார்த்தை, அகராதியில் இருந்து நீக்கப்படும்!

ஓவராக தெரிகிறதா? 
தொடர்ந்து படியுங்கள் உண்மை விளங்கும்!

ஐந்து வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டுவரும்
எனது "ஒரு நாள் பயிற்சி வகுப்பில்"  கலந்து கொண்ட அனைத்து பயனாளிகளும்(சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள்) அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து தேன்,எலுமிச்சை பானத்தை "உணவாகவும், மருந்தாகவும்"
பருகி வருவதோடு சர்க்கரை, இரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், கர்பப்பை கோளாறு, "மன அழுத்தம்", மற்றும்
அனைத்து விதமான "உடல் மற்றும் மனம்சார்ந்த" நோய்களிலிருந்து பூரணகுணம் கண்டு மருந்து மாத்திரை இல்லா பெறுவாழ்வு வாழ்கிறார்கள் என்று சொன்னால் நம்புவது சற்று கடினம்தான்!

இது பல ஆயிரம் ஆண்டுகளாக, 
உடல் செல்களின் தேவையை புரிந்து கொண்டு, 
உணவை தேடிப்பிடித்து சாப்பிட்டு, 
நோயில்லா வாழ்வு வாழ்ந்து,
இயற்கை மரணம் அடைந்த மூதாதயர்களின் அனுபவ கண்டுபிடிப்பு!

இதைப்பற்றிய தாயாரிப்பு முறை, அளவு, பயன்கள், இதைப்பற்றி மருத்துவர்கள் பரப்பிவிட்டுள்ள மூட நம்பிக்கைகள், தப்பபிப்ராயங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்!

*தாயாரிப்பு முறை மற்றும் அளவு(ஒருவருக்கு)!*

ஒரு தம்ளர் நீரை குறைந்த தீயில் வைக்கவும், 
அவரவரின் பொறுக்கும் திறனுக்கும், 
வசதிக்கும் வெப்பமடைந்தால் போதும்!

ஒரு காலி தம்ளரில், 
பெரியதாயிருந்தால் பாதி, 
சிறியதானால் முழு எலுமிச்சம் பழத்தை பிழிந்துக்கொள்ளவும்!
பருகும் போது அதிக புளிப்புச் சுவையில்லாத அளவு!
அப்பொழுதுதான் கத்தியில் அறுத்த பழமாக இருக்கவேண்டும்!
(ஏற்கனவே அறுத்த பாதி பழத்தை உபயோகிக்க கூடாது,
"சவப்பெட்டியில்" வைத்த எலுமிச்சைக் கூடாது, 
அது உணவாக செயல்படாது, "திருஷ்டி சுத்திப்போட, 
வாகனங்களின் டயர்களுக்கு அடியில் வைக்க சிறந்தது)!

தேன், இரண்டு அல்லது இரண்டரை அல்லது மூன்று ஸ்பூன், 
வாங்கும் தேனின் தன்மைக்கேற்ப!
சுவைக்கும்போது நன்றாக இனிப்பாக, 
உடலும் மனமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்க வேண்டும்!
(சுத்தமான தேன் கிடைப்பது அபூர்வம், 
தேடியலைந்து நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காதீர்கள், 
அசுத்தமான தேனையே உபயோகித்து பலனடையும் 
முறைதான் இங்கு சொல்லப்படுகிறது!
அதிர்ஷ்ட வசமாக சுத்தமான தேன் கிடைக்குமானால் நன்று)!

அத்துடன் அடுப்பில் சுமாராக சூடேற்றப்பட்ட நீரை கலந்து
அருந்த வேண்டும் !

இதை பிரத்யோக முறைப்படிதான் பருக வேண்டும்!
கொஞ்சம் கொஞ்சமாக, 
கவனம் செலுத்தி,
உமிழ் நீரில்  சுவைத்து, 
சுவையை வாயிலேயே முழுவதும் 
உறிஞ்சும் வகையில் "சப்பி  சப்பி" சாப்பிட வேண்டும்!

அலட்டல் என நினைக்க வேண்டாம்!

இதில் நிறைய விஷயம் அடங்கியுள்ளது!
அருந்தும்  முறையை ஒவ்வொரு நாளும் சரியாக செய்யமுடியாதுதான்!
அதற்கு ஒரு முறையுள்ளது, 
அது "ஸ்பூனில்" சாப்பிடுவதுதான், 
எரிச்சலடையவேண்டாம், தயங்க வேண்டாம்!
இதற்கு மொத்தமே 4 அல்லது 5 நிமிடங்களே ஆகும்!
("கொஞ்சம் கொஞ்சமாகதானே சாப்பிட வேண்டும், அத்தோடு நில், நான் பார்த்துக்கொள்கிறேன்", என நம் "மேதாவித்தனத்தை" காட்டுவது பலனளிக்காது! ஸ்பூனில் மட்டுமே சாப்பிட பழகுங்கள்)

*பயன்கள்!*

1. உடல் கழிவுகளை வெளியேற்றும்!

2. "கழிவு தேக்கத்தின் உச்சம் தான் 
புற்று நோய்" என்ற இயற்கையின் நியதிப்படி
புற்று நோய் பயமில்லா வாழ்க்கை உறுதியாகும்!

3. விஷத்தை முறிக்கும் தெய்வீக குணமுடையது எலுமிச்சை!
ஏன் எலுமிச்சை வழிபாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது?
இந்த குணத்தால்தான்!

4. காலையில் நமக்குத் தேவையான "உடனடி குளுக்கோஸ்" நேரடியாக இரத்த ஓட்டத்தில் சேர்க்கப்படுகிறது!
இந்த சேர்க்கைக்கு மனித இன்சுலின் தேவையில்லை என்பது சிறப்பு! 
சர்க்கரை நோயாளிகளுக்கு "கனயத்தின் இன்சுலின் " உதவியில்லாமலே குளுக்கோஸ் கிடைப்பது என்பது இனிப்பானச் செய்திதானே?

*ஏன்? எப்படி?*
தேனில் உள்ள குளுக்கோஸ் முன்னமேயே, 
"தேனீ " என்ற அற்புத உயிரினத்தின் இன்சுலினால் முழுமையாக செரிமானிக்கப்பட்டு, "லட்டு" ப்போல கிடைப்பது!
சர்க்கரை நோயாளிகளுக்கு தேன் ஒரு வரப்பிரசாதம்!
ஒரு உயிரினத்தின் இன்சுலினால் செரிக்கப்பட்ட தேன்,
"உமிழ் நீர்" எனும் செரிமான நீரால், 
நம் உடல் செல்கள் ஏற்றுக் கொள்ளத் தகுதியாக 
மாற்றுவது மட்டுமே நம் வேலை!
அதற்காகத்தான் "ஸ்பூன்" மூலமாக, 
பொறுமையாக, சிறிது சிறிதாக 
சாப்பிடும் பழக்கம)் பரிந்துரைக்கப்படுகிறது.

5. தோல் பராமரிப்பு, முக வசீகரம், 
கிழட்டுத்தனத்தை தாமதப்படுத்துவது!

6.  கர்பப்பை கோளாறுகள் நீங்கி பை உறுதியாகும்!
இரண்டே மாதங்களில் மாதவிடாய் பிரச்சினைகள் ஒழுங்காகும்!
"சிசேரியன்" எனும் வியாபார வலையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்!

7. அமைதியான தூக்கம்!

8.இன்னும் பிற மனித மூளைக்கு பிடிபடாத நன்மைகள்!

*FAQ....!*

1. வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு சாப்பிடுவதால், 
அதில் உள்ள "சிட்ரிக் ஆஸிட்" அல்சரை வரவழைக்கும், 
உள்ள அல்சரை தீவிரமாக்கும் என்பது சரியா........?

*முற்றிலும் தவறு!*

நாம் சாப்பிடுவது சிறிய அளவு எலுமிச்சைச் சாறு!
செயற்கையாக, இராசயனங்கள் மூலம், 
மனிதனால் தயாரிக்கப்படும் சிட்ரிக் அமிலம் வேறு!
எலுமிச்சை பழத்திலுள்ள இயற்கை தயாரிப்பான சிட்ரிக் அமிலம் வேறு!
இயற்கை பண்டங்களில் உள்ள அனைத்தும், 
அதை தேவைக்கருதி சாப்பிடும் உயிர்களுக்கு 
நன்மை பயக்க மட்டுமே படைக்கப்படுகிறது!

2. எலுமிச்சை உட்கொள்வதால் 
சளி, தும்மல், வீஸிங் வருமென்பது சரியா?

*சரியல்ல!*

"பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்"என்பது போன்றதுதான், 
இது போன்ற அறியாமை பயங்கள்!

நுரையீரல், இது நாள் வரை தேக்கிவைத்துள்ள சளி வெளியேற்ற முடியாமல், 
பலமில்லாமல் தத்தளிக்கும் நேரத்தில், 
எலுமிச்சைச் சாறு, நுரையீரலுக்கு உடனடி சக்தியை கொடுத்து
சளியை வெளியேற்றும் செயல்தான் 
மூக்கு ஒழுகுதல், தும்மல் மற்றும் வீஸிங் என்பது!

3. "சர்க்கரை நோயாளிகள் தேனை சாப்பிடக்கூடாது" 
என மருத்துவர்கள் கூறுகிறார்கள்!
அப்படி சாப்பிட்டால் சர்க்கரை "ரீடிங்" தூக்கிடும் என்கிறார்கள்!
இது உண்மையா?

இது நவீன மருத்துவம் கட்டிவிட்ட "மூட நம்பிக்கை"!
மாறாக சர்க்கரை நோயாளிகள் என முத்திரை பெற்றவர்களுக்கு "வரப்பிரசாதம்" தேன்! எப்படி?

நாம் சாப்பிடும் உணவு செரிமாணிக்கப்பட்ட பின் கிடைக்கும் குளுக்கோஸ் அதிகப்டியான அளவு தரமற்றதாக உருவாவதால், 
இன்சுலின் மறுக்கப்பட்டு, சிறு நீரகத்தால், சிறு நீர் வழியாக  வெளியேற்றப்படுகிறது!
இதனால் உடல் செல்கள், 
தேவையான குளுக்கோஸ் சக்தி கிடைக்காமல் அவதிப் படுவதால்
எல்லா நோய்களும் ஏற்பட ஏதுவாகிறது!
இது தான் சர்க்கரை நோயாளிகளின் நிலைப்பாடு!

இப்படிப்பட்டவர்களுக்கு தேன் "ஆபத்தாண்டவன்" !
தேன் ஏற்கனவே செரிக்கப்பட்ட குளுக்ஸை அளித்து 
சர்க்கரை குறைபாடு சரி செய்யப்படுகிறது!

எனவே "சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாது" 
என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய
"கார்ப்பரேட் வியாபார சதி"!

மேலும் உணவுகளை, "சித்தர்கள்" அறு சுவையின் அடிப்படையில் 
வகை படுத்தியிருக்கிறார்கள்!
அதில் தேன் கசப்பு உணவுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது!
"தேன் நாக்கிற்கு மட்டுமே இனிப்பு, உடலுக்கு கசப்பு"!

எனவே சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட்டு, 
நாளும் விரலில் குத்தி இரத்தம் சிந்தி, 
சர்க்கரை அளவு பார்த்து பார்த்து, பயந்து, 
நோயை நிலைப்படுத்திக்கொள்ளும்
"ஆங்கில கோனங்கி பழக்கத்தை" விட்டொழித்து, 
தேன் வாங்க கிளம்புங்கள் தேக ஆரோக்யம் காக்க!

4. தேன் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்பது சரியா?

தேன் உடலுக்கு நல்லது மட்டுமே செய்யும்! 
கழிவுகளை வெளியேற்றும் வேலை செய்வதால், 
கழிவுகளின் எடை குறைவதால், 
மற்றவர்களின் பார்வைக்கு உடல் மெலிவதாக தெரியும்!
அவ்வளவே! 
உடல் "ஸ்லிம்" ஆகும் நல்ல செயல் 
தவறாக புரிந்துக் கொள்ளப்படுகிறது!


*வாழ்க வளமுடன்.......!*
*அன்புடன் சண்முகம்.....!!*

Thursday, March 15, 2018

[vallalargroups:5944] ஜீவகாருண்யம் 2

அருட்பெருஞ்ஜோதி !
             அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
               அருட்பெருஞ்ஜோதி !
     தாவரங்களும் உயிர்கள் தானே,
 அவ்வுயிர்களைக் கொன்று உண்பது பாவம் இல்லையா ?
       **********************************
     ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு எனது பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்.

        சன்மார்க்கம் அல்லாத பல சகோதர சகோதரிகளுக்கு பின்வரும் ஒரு சந்தேகமும், கேள்வியும் பல காலங்களாக இருந்துகொண்டேதான் இருக்கின்றது அவற்றைப்பற்றி பெருமான் தெளிவாக விளக்கி இருக்கின்றார்கள், அதைசற்று விபரமாக நாம் தற்போது பார்ப்போம்;
   உயிர்களில் பேதம் இல்லை ,
அறிவில்மட்டும்தான் பேதம் உள்ளது ,
கடவுள் எல்லா உயிர்களுக்குள்ளும் ஆன்மாக்களை தனது திருநடனமிடும் சபையாகக்கொண்டு அதன் உள்ளொளியாக இருந்து எல்லா உயிர்களுக்கும் பொதுவாக இருந்து நடம்புரிகின்றார்கள் என்றால் ,

     தாவரங்களிலும் அதே ஆண்டவரின் அருளொளிதானே உள்ளிருந்து அவ்வுயிரைக் காத்து வருகின்றது .

   1:அப்படி என்றால் அந்த உயிர்களை இம்சை செய்து வெட்டியும், ஒடித்தும், காய்களை, பழங்களை பறித்தும் அடித்தும், தண்டு இலை காய்களை சமைத்தும் நாம் உண்டு அனுபவிப்பது பாவம் இல்லையா ? 
    அதுவும் ஏகதேசமாய் ஒருவகையில் தாமச குண ஆகாரம்தான் , அந்த ஆகாரத்தை உண்டு அதனால் கிடைத்த உடல் மன சந்தோஷங்களும் அசுத்த கரண சந்தோஷங்களேயாகும்.
ஆனாலும் அப்படி நினைத்தல் கூடாது;

2: ஏன் அப்படி நினைத்தல் கூடாது ?
 கடவுள் எல்லா உயிர்களுக்குள்ளும் உயிராயும், உணர்வாயும் விளங்குவது அனைவரும் அறிந்ததுதான்,
அதேபோன்று புல், செடி, மரம் முதலான தாவரங்கள் எல்லாம் பரிசம்(தொடு உணர்வு) என்ற ஓரறிவுடைய தாவரங்களே ஆகும்.
    அவற்றின் உடம்பிலும் ஜீவ விளக்கம் ஒருசார் விளங்குகின்றது என்பதும் உண்மையே.

   ஆனால், 
A: இந்த தாவரங்கள் உருவாவதற்கு காரணமான வித்தாகிய விதைகள் எல்லாம் விதைப்பதற்கு முன்பு மற்ற வித்துக்களைப் போன்றே அறிவற்ற வெறும் சடமாகத்தான் இருந்தது என்பதை அறிதல் வேண்டும்.
     ஏன் என்றால் அந்த விதையில் உயிர் இருந்திருந்தால் அவற்றை நாம் விதைப்பதற்கு முன்பே முளைத்திடவேண்டும் இல்லையா,
ஆனால் அப்படி முளைக்க இயலாது ஏனென்றால் அவைகள் உயிரற்ற சடங்களாக இருந்தன.

B: அவ்விதைகளை நாமே நிலத்தில் விதைத்து அவற்றிற்கு நீர்விடுத்து 
உயிர்உண்டாக்குகின்றோம் என்பதாலும்,

C: அவற்றின் உயிர் இருக்கும் பகுதியான வேர்களை பிடுங்கி வேறுசெய்யாமல் அந்த உயிரால் விளைந்த உயிரற்ற சடங்களாகவும்,
அதே சமயத்தில் மீண்டும் வேறு உயிர்கள் தோன்றுவதற்கு இடமாக இருக்கும் அதனது சடமாகிய வித்துக்களையும், காய்களையும்,கனிகளையும்,பூக்களையும்,கிழங்குகளையும்,தழைகளையும்,ஆகாரங்களாகக் கொள்ளுகின்றோமே அன்றி ,
அவற்றின் உயிருள்ள வேராகிய முதல்களை நாம் ஆகாரமாகக் கொள்ளுவதில்லை ,

அவ்வாறு இல்லாமல் அவற்றின் வேரைப் பிரித்து ,மண்ணில் இருந்து பிடுங்கி அவற்றின் உயிரைப் போக்கி உண்பதுவும் ஒருவித பாவமேயாகும்.

3:கடவுள் எல்லா தேகத்திலும் உயிராவும் உணர்வும் இருக்கின்றார்கள் என்றால் அந்த தாவர உயிர்களுக்குள்ளும் இன்ப துன்ப உணர்வுகள் இருப்பதில்லையா ?

   A:நிச்சயமாக தாவரங்களுக்கு உணர்வுகள் உண்டு , ஆனால் அவற்றின் வித்து காய் கனி தழை தண்டு முதலியவைகளைக் கொள்ளும்போது ,
  நமது உடம்பின் ஒரு பகுதியாகிய நகங்களும், ரோமங்களும், சுக்கில சுரோணிதங்களும் எப்படி நீக்கும்போது வலியில்லாமல் இருக்கின்றதோ , அதேபோன்ற உணர்வுகள்தான் அவைகளுக்கும் இருக்கும் என்பதை சத்தியமாக அறிதல் வேண்டும்;

   B:அதுமட்டுமல்ல அவற்றின் கிளைகளை வெட்டி ஒரு இடத்தில் இருந்து மறுஇடத்தில் மண்ணில் வைத்து உயிர் ஊட்ட முடியும்,
அதுவும் இல்லாமல் வெட்டிய இடத்தில் ஒன்றுக்கு பலத்துளிர்கள் திருவருள் கருணையால் கிளைத்திடும் என்பதும் நாம் அறிந்ததேயாகும்.

C: அதுவுமன்றி தாவரங்களுக்கு மனம் ,புத்தி,சித்தம்,அகங்காரம் முதலிய அந்தக் கரணங்கள் விருத்தியில்லாதபடியால் அவைகள் உயிர்கொலையும் அல்ல அவற்றிற்கு துன்பம் உண்டுபண்ணுவதும் அல்ல,
என்பதையும் அறிதல் வேண்டும்.
அதனால் அது "ஜீவகாருண்ய விரோதமாகாது";

D: அந்த தாவர ஆகாரத்தினால் வந்த சந்தோஷமும் ஜீவ விளக்க சகிதமான கடவுள் விளக்கமே ஆகும் என்பதை அறிதல்வேண்டும்;

ஆகலில் உயர்வுடைத்தாகிய ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு எல்லாம் ஆகாரமாக கடவுள் விதித்த அருள்நியதி உணவு தாவர உணவேயாகும் என்பதை உறுதியாக அறிதல்வேண்டும் .

.......நன்றி,
.......வள்ளல் மலரடிப் போற்றி போற்றி,
.........பெருமான் துணையில்,
..........வள்ளல் அடிமை,
............வடலூர் இரமேஷ்;

[vallalargroups:5944] ஜீவகாருண்யம் ..உலக அவத்தைகள் ஏழு.

அருட்பெருஞ்ஜோதி !
               அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
                அருட்பெருஞ்ஜோதி !
        உலக அவத்தைகள் ஏழு.
             ********************
          ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்.

      இவ்வுலகில் மனிதப் பிறப்பு எடுத்து வாழவந்த ஆன்மாக்கள் அனைவரும்,
முற்பிறவிகளில் செய்த வினைகளின் பலனாகவும், அவ்வினைகளுக்கு உரிய தண்டனைகளாக ,
1 பசி,
2 தாகம்,
3 பிணி,
4 எளிமை
5 இச்சை,
6 பயம்,
7 கொலை என்ற ஏழுவகையான துன்பத்தால் மிகவும் அவத்தையுறுகின்றார்கள் என்பதையும், அவற்றைப்பற்றிய ஒரு சிறு விசாரத்தை கேள்வியும் பதிலுமாகப் பார்ப்போம்;

   1 இவ்வுலகில் மனிதத்தேகம் பெற்று வாழவந்த என்னைப்போன்ற மானுட ஆன்மாக்கள் ஏழுவகையான துன்பத்தால் அவத்தையுறுவதற்கு என்னக் காரணம் ?
  ...... அறிவு ஒரு சிறிதும் விளங்காமல் அஞ்ஞானம் என்னும் பேரிருளில் மூழ்கிக் கிடந்த ஆன்மாக்களாகிய நமக்கு எல்லாம் வல்ல தனிப்பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனது "சச்சிதானந்த தன்மையை "எல்லா ஆன்மாக்களுக்கும் உணர்த்தி அத்தன்மையை எல்லா ஆன்மாக்களும் அடையும்பொருட்டு "மெய்யறிவு ஆனந்தம்" விளக்கம் பெறவேண்டி அறிவற்று கிடந்த நமக்கு முதன்முதலில் ஓரறிவு தாவரமாகவும் பிறகு ஈரறிவு நத்தை ,சங்கு,சிப்பி போன்றும் மற்றை மூவறிவு நான்கறிவு ஐந்தறிவு என உறுவன,ஊர்வன,பறப்பன,நடப்பன என்று நான்கு வகையான பிறப்புகளைக் கடவுள் படைத்து ஐந்தறிவு விலங்குகள் வரை பலப்பிறவிகள் எடுத்து எடுத்து பிறந்து இறந்து இறுதியில் இப்பொழுது நாம் எடுத்துள்ள இந்த ஆறறிவு விளங்கும் மானுடப் பிறவி கடவுள் பெருங்கருணையால் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பிறவியில்தான் நன்மை தீமைகளை ஆராய்ந்து பார்க்கக்கூடிய ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது.

   இப்பகுத்தறிவைக்கொண்டுதான், தான் யார் என்பதையும், தனக்குதேகம்கொடுத்து ஆளுகின்ற கடவுள் யார் என்பதையும், அக்கடவுளை அடையும் தன்மை எவ்வாறு என்பதையும் நமக்கு வழங்கப்பட்டுள்ள பகுத்தறிவைக்கொண்டு ஆராய்ந்து அறிந்து அடைதல்வேண்டும்.

     இதன்பொருட்டு முற்பிறவிகளில்  கடவுள் வகுத்த அருள்நியதிப்படி வாழாமல்  ஜீவகாருண்யமற்று கடின எண்ணம்கொண்டு இரக்கமற்று மற்றை உயிர்களுக்கு கேடுவிளைவித்து பாவவினைகளை கட்டி சேர்த்துக்கொண்டு வந்ததன் விளைவாக , அவ்வினைகளுக்கு உரிய பலனை அனுபவிக்கும் பொருட்டு ,செய்த ஒவ்வொரு வினைக்குத் தக்கவாறு நாம் ஏழுவிதமான அவத்தைகளை இப்பிறவிகளில் அனுபவிக்கின்றோம்;

     1 பசிக் கொடுமையை எதனால் அனுபவிக்கின்றோம் ?
   திணைவிதைத்தவன் திணையறுப்பான், வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பது போன்று , முற்பிறவியில் சிறிதும் இரக்கமில்லாமல் நம்மைத் தேடிவந்து ஆகாரம் கேட்டவர்களுக்கு ,
     சாதி சமய மத இனம் குலம் ஆச்சாரம் என்று பேதம்பார்த்து சிறிதும் இரக்கம் இல்லாமல் இல்லை என்றுசொல்லி தயவற்று அவர்களை விரட்டியடித்ததும், 
    தம்மிடம் வேலைசெய்பவர்களுக்கு காலத்தே ஆகாரம் கொடுக்காமல் பட்டிணியோடு வேலை வாங்கியதும்,
      போதுமான அளவிற்கு ஆகாரம் கொடுக்காமல் அரைவயிற்றிற்கும் கால்வயிற்றிற்கும் ஆகாரம் கொடுத்ததும்.
        நமது பயன்கருதி நமது வீட்டில் வளர்த்து வந்த தாவரங்களுக்கும், ஆடு மாடு கோழி குதிரை யானை போன்ற வாயற்ற ஜீவன்களுக்கு காலத்தே ஆகாரம் கொடுக்காமலும்      மேலும் அலட்சியம் செய்து அரைவயிற்றுக்கு உணவு கொடுத்து முழு வேலை வாங்கியதும்  ஆகிய பசியால் பரிதவித்த ஜீவன்களுக்கு பசியாற்றுதல் செய்யாத இரக்கமற்ற ஆன்மாக்கள் இப்பிறவிகளில் அதே பசி அவத்தையை தானும் அனுபவிப்பார்கள் என்பதை சத்தியமாக அறிதல் வேண்டும்.

2:தாகத்தினால் எப்படி துன்பப்படுகின்றோம் ?
   மேற்கூறியது போன்றே நம்மிடம் நாடி வந்து ஒருவாய் தண்ணீர் தாகத்திற்கு கேட்பவர்களுக்கு இரக்கமில்லாமல் சாதி மதம் சமயம் ஆச்சாரம் இனம் குலம் என்ற பேதம் பார்த்து தீண்டத்தகாதவனாக எண்ணியும் இரக்கமற்றும் தண்ணீர் கொடுக்க மறுத்தும் ,
அதுபோன்று நமது பயன்கருதி நமது வீட்டில் வளர்க்கின்ற தாவரங்களுக்கும் ஆடு மாடு கோழி குதிரை போன்ற வாயில்லா ஜீவன்களின் தாகமறிந்து அவைகளுக்கு தண்ணீர்கொடுக்காமல் இரக்கமற்று நடந்துகொண்ட கடின சீவர்கள் அதே போன்ற தாக அவத்தையை இப்பிறவியிலும் அனுபவிப்பார்கள் என்று சத்தியமாக அறிதல் வேண்டும்.
    
3 பிணியினால் படுகின்ற அவத்தையும் இப்படித்தானோ ?
    நிச்சயமாக அப்படித்தான் ,
மற்றவர்கள் துன்பத்தைக்கண்டு வருந்தாமல் அவர்களை கேளி செய்வதும், மருத்துவசெலவிற்காக பொருளுதவி கேட்கும்போது இல்லை என்றுசொல்லி வஞ்சகத்துடன் நடந்துகொள்வதும், 
அவர்கள் இப்பிணியினால் இறந்தால் நமக்கு லாபம் என்ற தயவற்று உள்ளொன்று புறமொன்றாய் நடிப்பதும்,
மருத்துவ செலவிற்கு பணம்கொடுப்பது போன்று கொடுத்து வட்டிமேல் வட்டியிட்டு அவர்களின் வீடு மனையை அபகரித்து அவர்களை கதற கதற வெளியேற்றியதும்,
      பகைமையை மனதில் கொண்டு மற்றவர்கள் வளர்த்துவரும் வாயற்ற ஜீவன்களை விரட்டி அடித்தும், கை கால்களை அடித்து உடைப்பதும்  ஆகிய துன்பங்களை செய்த ஆன்மாக்கள் இப்பிறவியிலும் அதேபோன்ற பிணி அவத்தைகளால் துன்பப்படுவார்கள் என்பதையும் திண்ணமாக அறிதல் வேண்டும்.
  
4 எளிமை என்ற வறுமை எதனால் ஏற்படுகின்றது ?
  ஆன்மாக்களினுடைய உட்பகைகளாக இருக்கின்ற ,
காமம் 
குரோதம்
லோபம்
மோகம்
மதம்
மார்ச்சரியம் என்ற இந்த ஆறுவகை தீயகுணங்களால் மற்றவர்களை துன்புறுத்தி அவர்களை ஏமாற்றி 
அவர்களுக்குரிய உடைமைகளைப் பறித்தல், கடவுள் வகுத்த அருள்நியதிப்படி நடவாமல் ஜீவகாருண்யமற்று( இரக்கமற்று )
நடந்து அவ்வுயிர்களுக்கு கேடுவிளைவித்தமையால் ,
       இப்பிறவியில் அவர்கள் தனது சுதந்திரம் எதுவும் இல்லாமல் வறுமையில் மிகுந்த துன்பத்தை அனுபவித்துக்கொண்டு மற்றவர்களை எதிர்பார்த்து வருத்தத்துடன் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை உறுதியாக அறிதல் வேண்டும்.

5: இச்சை என்ற ஆசையும் இதுபோன்றுதானோ ?
     நிச்சயமாக,.... நம்மிடம் எல்லா வசதிகளும் இருந்தும் , தன்னைச் சார்ந்திருப்பவர்களிடமும் மற்றவர்களிடத்தும் கரிமித்தனத்துடன் லோபமாக பணம் செலவுசெய்வதற்கு யோசித்து அவர்களுக்கு காலத்தில் அனுபவிக்கவேண்டிய இச்சைகளை நிறைவேற்றாமல் , 
        கொடுக்கும் குணம் சிறிதும் இல்லாமல் மற்றவர்களுடைய இச்சைக்கு தடையாக இருப்பதுமட்டுமின்றி , கொடுக்கின்ற மற்றவர்களையும் கொடுக்கவிடாமல் தடுப்பதும் , தனக்குப் பிள்ளை இல்லை என்றபோதும் , வறுமையில் வாழும் திருமணமாகாத பெண்பிள்ளைகளுக்கு அவர்களின் பருவ இச்சை அறிந்து , காலம் கருதி அவர்களுக்கு இரக்கத்துடன் திருமணஉதவிகள் செய்யும் குணம் சிறிதும் இல்லாது லோபமாய் வாழ்ந்த ஆன்மாக்கள் அனைவறும் இப்பிறவியில் விருப்பப்பட்ட எந்தவித சுகத்தையும்
அடையமுடியாமல் அவத்தையுறுவார்கள் என்று சத்தியமாக அறிதல் வேண்டும்.

6:  பயம்  என்ற கொடிய அவத்தை எதற்காக ?
 அதுவும் ஜீவகாருண்யமற்ற செயல்களால் நடந்துகொண்டமையால்தான் அனுபவிக்கின்றோம்.
  ஆம் பயந்து ஓடுபவர்களை பகைவருக்கு காட்டிக்கொடுப்பது,
    வாங்கிய கடனுக்கு பயந்து,
கொடுக்க வழியில்லாமல் அவமானப்பட்டு ஒளிந்து மறைந்து கொள்பவர்களை , சிறிதும் இரக்கமில்லாமல் காட்டிக்கொடுத்து அவர்களின் அவமானத்தில் இவர்கள் ஆனந்தப்படுவது,

     ஆடு கோழி நாய் பூனை முதலிய வாயற்ற ஜீவன்களை உயிர் பயம் வெளிப்பட அலறியடித்து ஓட ஓட விரட்டி கல்லாலும் கட்டையாலும் கூறிய ஆயுதத்தாலும் அடிப்பதும் வெட்டுவதும் ஆகிய இரக்கமற்ற கொடுஞ் செய்கைகளால் இப்பிறவியில் அவர் அதேபோன்று பயத்துடன் வாழநேரிட்டது என்பதை அறிந்திடல் வேண்டும் ;

7 கொலை என்ற கொடிய வினைக்கும் இதுதான் காரணமா ?
    சத்தியமாக , உயிர்கள் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவைகள்,
அந்த உயிர்களை படைப்பதற்கும் அழிப்பதற்கும் அவருக்கு மட்டுமே உரிமை உண்டு. 
ஒரு உயிரை படைக்க முடியாத நமக்கு அந்த உயிரை எடுப்பதற்கு மட்டும் உரிமை எப்படி உண்டு.
      இதை உணராமல் நம்மைப் போன்றே இவ்வுலகில் வாழ்வதற்காக கடவுளால் படைக்கப்பட்ட உயிர்களை ஜீவகாருண்யம் சிறிதும் இல்லாமல்  தோலுக்காகவும், இறைச்சிக்காகவும், பகைமைக்கொண்டும், கொன்று அழிப்பது என்பது அருள்நியதிக்கிடையாது அது பாவத்தில் எல்லாம் தலையானது ஆகும்;

    இதுபோன்ற செய்கைகளாலேயே 
முழுமையாய் இப்பூமியில் வாழப் பிறவி எடுத்த மனிதர்கள் அற்ப ஆயுளில் பிணியாலும், வாகன விபத்துகளாலும், மற்றும் இயற்கை அழிவாலும், தற்கொலையாலும்,பகைமைகளாலும்  ஒருவருக்கொருவர் பொறாமைக்கொண்டும் கிடைப்பதற்கரிய மானிடப் பிறவி எடுத்தும் வாழ இயலாமல் அற்ப ஆயுளில் காலத்தை முடித்துக்கொள்கின்றோம் என்பதை உணர்தல் வேண்டும்.

8: அப்படி என்றால் இப்பிறவியில் மனிதர்கள் படும் இந்த ஏழுவகை துன்பதற்கும் காரணம் அவரவர்களேதனோ ?
    நிச்சயமாக நன்மையும் தீமையும் பிறர் தர வாராது;
   ஆகலில் இந்த அனைத்து துன்பத்திற்கும் நாமேதான் காரணம்;
அதுபோன்று நமக்கு கிடைக்வேண்டியதை மற்றவர்கள் தடுத்து கெடுத்துவிட்டார்கள் என்பதுவும் அறியாமை;
நமக்கு கிடைக்க வேண்டியப் பொருள் முற்பிறவி வினையால் அவர்களால் தடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை;

  அதே போன்று செய்வினைகள் என்று சொல்லி பணத்தை விரையம் செயவதும் அறியாமைதான்;
  நமக்கு எப்போதும் மற்றவர்களால் வினைசெய்ய இயலாது , நாம் முன்செய்த வினைதான் அதுபோன்று  நினைக்கச் செய்யும் என்பதை அறிதல் வேண்டும்.

    ஆனால் மேற்கூறிய அனைத்து வினைகளுக்கும் பரிகாரம் ஒன்று உண்டு ,
என்னவென்றால் , அதுதான் "ஜீவகாருண்யம்" அதுதான்  அதற்கு பரிகாரம்.

 ஆம் முற்பிறவியில் ஜீவகாருண்யமற்ற செய்கைகளால் இப்பிறவியில்
வினையை அனுபவிக்கின்ற நாம் 
அதே ஜீவகாருண்யத்தால்தான் அனைத்து வினைகளையும் போக்கிக்கொள்ளவேண்டும்;
இதுதான் "கடவுள் நியதி";
........நன்றி,
...........வள்ளல் மலரடி வாழ்க வாழ்க,
............பெருமான் துனையில்,
.............வள்ளல் அடிமை,
................வடலூர் இரமேஷ்;

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)