Tuesday, November 9, 2010

Re: [vallalargroups:3691] மூலிகை பிரண்டை

Food Market or Uzhavar Sandhai
பிரண்டை Means Green Leaves like: வல்லாரை,தூதுவளை,வில்வம்

2010/11/9 <dkn@tafe.co.in>

Sir,

What is பிரண்டை …? Where it to buy..?

Regards

D.kannan

இதயம் பலப்பட
உடலில் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளவர் களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது. இதனால் இதய வால்வுகள் பாதிப்படைகின்றன.

பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

பெண்களுக்கு சூதக வலியின்போது ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும்.

பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.

கள்ளிச் செடியின்மீது படர்ந்திருக்கும் பிரண்டையை தவிர்ப்பது நல்லது.

The information contained and transmitted by this EMAIL is proprietary to TAFE and  is intended for use only by the individual or entity to which it is addressed, and  may contain information that is privileged, confidential or exempt from disclosure  under applicable law. If this is a forwarded message, the content of this E-MAIL  may not have been sent with the authority of the Company. If you are not the  intended recipient, an agent of the intended recipient or a person responsible for  delivering the information to the named recipient, you are notified that any use,  distribution transmission, printing, copying or dissemination of this information in  any way or in any manner is strictly prohibited. If you have received this  communication in error, please delete this mail.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Re: [vallalargroups:3690] சித்த மருத்துவம் மூலிகை -இஞ்சி

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

அது உடம்பில் அல்ல

உப்பில் 

இஞ்சியை சுட்டு உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்

2010/11/9 <dkn@tafe.co.in>

Dear sir,

              Pl. explain 3rd point how to use, I can't under stand.

Regards

D.kannan

From: vallalargroups@googlegroups.com [mailto:vallalargroups@googlegroups.com] On Behalf Of Mohan Suresh
Sent: 04 November 2010 00:48
To: vallalargroups@googlegroups.com; vallalar groups; Karthikeyan J; Anand S; anand.sriram@yahoo.co.in; suresh Bank ID; Varadaraj Balaji; hariharan; jeevarathinam.ram@gmail.com; Kiruthiga; Lashmi Akka; rama_sdr@hotmail.com; Revathi Akka; Priya Friend; RaviShankar Kandasamy; ravimathi25@yahoo.com; Ronald@sib.co.in; Nagarajan; Sanjai Gandhi; Suganya G; Vijay Anand; Kanaka lakshmi; anand_ptc@yahoo.co.in; Rathina Mala; lavanya_gold; mubin_lovely; Thulasi Ram; vidudhalai@yahoo.com; sureshh_slm@yahoo.co.in; vasansri42@yahoo.com; sundarasoundappan@yahoo.co.in; janaganslm@gmail.com; flytovanu@gmail.com; vinu2smart@yahoo.co.in; archana.prasanna17@yahoo.co.in; selva_vincent@yahoo.co.in; pandswalaja@gmail.com; green_life1984@yahoo.com; jmothish@yahoo.com; karthigeyan_mr@yahoo.co.in; dearprasath@gmail.com; <jayaraman.sivakumar@gmail.com>; sumesh@sib.co.in; jithin@sib.co.in; sivakumar@sib.co.in; skumardhaya@rediffmail.com; rakeshlbs@yahoo.com; sijopaul@sib.co.in; sijoemmatty@gmail.com; mohanfb@gmail.com; shanram_venk@yahoo.com; Lakshmi ka lavanya; Ramya Mohan; Govindasamy Sanjai; Prabu Iswarya; Uma Vishu Priya; Ravi Jai Sports; dhinaccbe@gmail.com; Ashok Ramachandran; Arvind Ramachandran; arulsaro_b4u@rediffmail.com; Vijai Karthi Gladiators; Vijay Anand Sargunam; mail2kkarthik@gmail.com; priyasrdsalem@gmail.com; parthii_2005@yahoo.com; Hemamalini Ramya; Sudhaakaran Palace
Subject: [vallalargroups:3670]
சித்த மருத்துவம் மூலிகை -இஞ்சி

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?

தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர், அதாவது சுக்கு என செல்லமாக அழைத்துப் பின்பு சுக்கு முதலியாரே! என்று கூப்பிடுவது நம் நாட்டு பழக்கமாயிற்றே!

சுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான். சுக்கு, இஞ்சியான உலராத சுக்கு இவைகளை எல்லா மதத்தினரும், இனத்தவரும் விரும்பி மஜ"த் சுல்தான், டேவிட் பிள்ளை மரியதாஸ், போன்ற முஸ்லீம் கிருஸ்துவ நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை

சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை

என்பது பழமொழி அல்லவா?

நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.

இஞ்சி பொதுக் குணம்

இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.

உபயோக முறைகள்

இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜ"ரணிக்க செய்து விடுகிறது.

இஞ்சியின் குணமேதென்றால்

இயல்புடன் உரைக்க கேளீர்

அஞ்சிடும் கன்னியாவும் அகன்றிடும்

பித்ததோடம்

நெஞ்சினில் இருமல் கோழை

நெகிழ்ந்திடும்

கபங்கள் தன்னை

மிஞ்சினி வருமேவென்றும் விளம்பிடும்

வேதநூலே (ஓலைச் சுவடி)

சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.

இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை! ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் புட்டி புட்டியாக எங்குதான் போகின்றனவே? முருகன் தான் அறிவார் இந்த பிளாக் மார்க்கெட்டை!

இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!

இஞ்சி முறபா

மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.

ஆஸ்துமா இருமலுக்கு

இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)

இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

The information contained and transmitted by this EMAIL is proprietary to TAFE and  is intended for use only by the individual or entity to which it is addressed, and  may contain information that is privileged, confidential or exempt from disclosure  under applicable law. If this is a forwarded message, the content of this E-MAIL  may not have been sent with the authority of the Company. If you are not the  intended recipient, an agent of the intended recipient or a person responsible for  delivering the information to the named recipient, you are notified that any use,  distribution transmission, printing, copying or dissemination of this information in  any way or in any manner is strictly prohibited. If you have received this  communication in error, please delete this mail.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

[vallalargroups:3689] Fwd: மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம்

---------- Forwarded message ----------
From: balamurugan d <to.dbala@gmail.com>
Date: 2009/3/30
Subject: மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம்
To: deathlessbody2004@yahoo.co.in, vallalargroups@googlegroups.com

மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம்

 மரம் வாழ்ந்த பின்பு பலகையாகிறது. சந்தன மரம் மட்டும் வாழ்ந்தபின்பும் சந்தனமாகவே இருக்கிறது. ஒப்பற்ற மனித சமுதாயம் மட்டும் வாழும் போதே மூட்டுவலியால் முக்கி, முனங்கி இயக்கம் தடைப்பட்டு மூலையில் ஏன் முடங்க வேண்டும்.

 உடல் பருமன் அடைவது போல், இதயமும், மூட்டும் பெரிதாவதில்லை. எனவே அதிக உடல் எடையால் அடிக்கடி மூட்டு வலியால் அவதிப்படும் அன்பர்கள். (நெல்லி, வெண்ப+சனி, கொள்ளு சூப், சாப்பிட வலி குறையும்) நரம்பு பிடிப்பால் சிதைந்து வரும் மூட்டு வலியை முருங்கையும் முடக்கற்றானும் சரி செய்யும்.

முறையான தூக்கம், சாந்தி ஆசனம், தியானம், நல்ல இசை,  வழிபாடு முதலியவைகளால் அருமையான மனநலம் பெற்று பிட்ய+ட்டரி சுரப்பிகள் சிறப்பாக இயங்கச் செய்யலாம். குளிர்காலத்தில் உடல் சூடு குறைவதானலும் நரம்புகள் பிடிப்பும், தசை இறுக்கம் மிகுவதாலும் வேர்வை சுரப்பிகள், தோல் சுருங்குவதாலும் மூட்டுக்களின் தரையில் வேலை செய்தாலும், உட்கார்ந்தாலும், படுத்தாலும் மூட்டு வீக்கம், வலி, வளையும் தன்மை அதாவது முடக்குவதாகும் உண்டாகிறது.

  பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையால் இரத்த சோகையால் வந்த மூட்டு வலியை மாதுளையும், பேரீட்சையும் சரிசெய்யும்.  கால்சியம் குறைவால், எலும்பு மஜ்ஜை குறைவால் ஏற்படும் வலியை கீரைச் சாறுகள். முந்திரி, கோஸ், முருங்கை, உணவில் சேர்த்து சரிசெய்யலாம்.   வாயுப் பிடிப்பால் விளைத்திடும் மூட்டு வலியை போக்க ப+ண்டு சூப், வெங்காய பச்சடி அருந்த வேண்டும்.

http://attur.in/health/arth.jpg

மூட்டுவலி பெருக சில காரணி உணவுகள்:

  1. அதிய அளவு காபி, டீ அருந்துதல்
  2. அதிக அளவு எண்ணெய் உணவுகள் சாப்பிடுதல்
  3. கடல் உப்பு, உணவில் அதிகம் சேர்த்தல்
  4. வெள்ளைச் சீனி சேர்த்த இனிப்புகள், பானங்கள் எடுத்தல்
  5. அசைவ உணவு
  6. மொச்சை, பட்டாணி, தட்டைபயறு, உருளை
  7. பதப்படுத்திய இரசாயன குளிர்பானங்கள் எலும்புகளை உருக்கி சிதைத்து விடுகின்றன.
  8. மன உளைச்சல், மனபயம், மன சோர்வுகளால் தூக்கமின்மை ஏற்பட்டு பிட்ய+ட்டரி சுரப்பிகளின் இயக்கம் சீர்குலைந்தால் மூட்டு வலி அதிகரித்திட வாய்ப்புகள் உண்டு.

எளிய தீர்வுகள்

  1. மூன்றுநாள் உபவாசம் (அ) பழச்சாறு நோன்பு 30 நாட்களுக்குள் மூட்டுவலி விரட்டிவிடும்.
  2. தினமும் மூன்று நிமிட முழங்கால் விரல்களில் கொடுக்கும் பயிற்சி.
  3. தினமும்  மூட்டுகளைச் சுற்றி ஈரத்துணியால் பட்டி போட்டால் 30 நாளில் குணமாகும்.
  4. இரவு நேர மண்ப+ச்சும், மண்பட்டியும் பகல் நேர மூட்டு வலியை போக்கும்.
  5. எண்ணெய் இல்லாத உணவுகள் எவ்விதமூட்டிவலியையும் போக்கும்.
  6. வெள்ளைப+ண்டு, முடக்கற்றான், மூட்டு வலியை ஒட ஒட விரட்டும்.
  7. வஜ்ஜிராசனம், பத்மாசனம், உட்கடாசனம், தாளாசனமும் கருடாசனம், பாதங்குஸ்தாசனம், படகு ஆசனம், விருச்சிகாசனம் முதலிய ஆசனங்கள் செய்தபின் சாந்தி ஆசனம் செய்து வந்தால் மூட்டுவலி உடலை விட்டு ஓடிவிடும்.
  8. காலை, மாலை, கனி உணவு உண்பார் கடும் மூட்டு வலியாயினும் கலங்கிடார்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

   சுத்த சன்மார்க்க அன்பன்
      பாலமுருகன்
  காஞ்சிபுரம்

--
Regards,
Balamurugan.D

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Re: [vallalargroups:3688] Muutu valli

மூட்டு வலி நீங்க - நாட்டு வைத்தியம்

1.சுக்கு அரைத்து பத்து போட  மூட்டி  வலி குறையும்

2.சுக்கு, மிளகு, வெள்ளை கடுகு, முருங்கைப்பட்டை அரைத்து  காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூட்டு வலி குறையும்.

3. தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணை சமமாக எடுத்து சிறிது சூடு செய்து மூட்டில் தடவ வலி குறையும்.

4.முழுப்பூண்டு பாலில் வேக வைத்து காலையில் 40 நாள் சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.
              
5.அவரை சாப்பிட மூட்டு வலி குறையும்.

6.அவரை, புளி சேர்த்து அரைத்து பத்து போட மூட்டு வலி குறையும்.

7.இரவில்  உள் பாதம் முழுதும் நல்லெண்ணை தடவி படுத்தால் குதிகால் வலி குறையும்.

8.செங்கல் சூடு செய்து அதன் மேல் எருக்கன் இலை வைத்து அதன் மீது குதிகால் வைத்து வந்தால் குதிகால் வலி குறையும்.செங்கல் காஸ் மீது வைத்து சூடு செய்யலாம். 15 நாள் தொடர்ந்து செய்யவும்.

9.எலுமிச்ச இலை அரைத்து பத்து போட தலைவலி, மூட்டி வலி,கெண்டை கால் வலி குறையும்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

   சுத்த சன்மார்க்க அன்பன்
      பாலமுருகன்
  காஞ்சிபுரம்

On Mon, Nov 8, 2010 at 11:28 PM, <dkn@tafe.co.in> wrote:

Dear Sir,

               Muttu valliku sidda maruthuva kuripukal Errukindrada. Send me Some Tips pl.

Anbudan

D.kannan

The information contained and transmitted by this EMAIL is proprietary to TAFE and  is intended for use only by the individual or entity to which it is addressed, and  may contain information that is privileged, confidential or exempt from disclosure  under applicable law. If this is a forwarded message, the content of this E-MAIL  may not have been sent with the authority of the Company. If you are not the  intended recipient, an agent of the intended recipient or a person responsible for  delivering the information to the named recipient, you are notified that any use,  distribution transmission, printing, copying or dissemination of this information in  any way or in any manner is strictly prohibited. If you have received this  communication in error, please delete this mail.

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
Regards,
Balamurugan.D

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)