Thursday, April 13, 2017

[vallalargroups:5629] Two New Dharumasalai at Ginji

Kind request to all..

As you may be aware that Deepam Trust has been feeding the poor (Annadhana) for the past 10 years. Now food is being given through 7 Anna Dharumasalais in different parts of the State.

During this week (16.04.2017) we are going to start two new dharumasalais at Devanampet and Gangavaram Villages in Ginji District.
During May 2017 we are going to open 10 more Dharumasalais in and around villages  in Kumbakonam, Viruthachalam,and Erode districts.

For each Dharumasala Gas Stove , Vessels costs around 15000/- Sponsors are welcome.

சென்னை வேளச்சேரி "தீபம் அறக்கட்டளையின்"  சார்பில் வேளச்சேரி, கல்குட்டை, கேணிப்பட்டு, கொஞ்சிமங்களம், செய்யார் உள்பட ஏழு நித்ய அன்ன  தர்மசாலைகள் தயவாளர்களர்களின் நன்கொடையுடன் இயங்கி வருகிறது.

வருகிற ஞாயிற்றுக்கிழமை 16-04-2017  முதல் செஞ்சி தேவதானம்பேட்டை கிராமம்  (எட்டாவது தர்மசாலை) மற்றும் கங்காவரம் கிராமம் (ஒன்பதாவது தருமசாலை) தொடக்கம்.

மேலும் வருகிற வைகாசி மாதம் 11ம்நாள் (25-05-2017) புதன்கிழமை வடலூர் சத்திய தர்மசாலையின்  151 வது தொடக்க விழாவை முன்னிட்டு கும்பகோணம், தஞ்சாவூர், பாண்டமங்கலம், ஈரோடு உள்பட மேலும் 10 தர்மசாலைகள் தொடங்க திருவுள்ளம் கொண்டுள்ளது.

புதிய அன்ன தர்மசாலைகளுக்கு அடுப்பு மற்றும் பாத்திர வகைகள் தேவைப்படுவதால் தயா உள்ளம் கொண்ட அருளாளர்களாகிய தாங்கள்  கிடைப்பதற்கரிய இந்த அரும்பெரும்பணிக்கு  பங்கு பெற்று ஆன்மலாபம் பெற தங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

ஓர் தர்மச்சாலைக்கு உண்டான அடுப்பு மற்றும் பாத்திர வகைகளுக்கு மொத்தம் தோராயமாக Rs.15,000/- மேல் ஆகிறது என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்.


 Donations are Exempted under 80G of Income Tax Act.


The details are:-

Cheque in favour of "Deepam Trust"

Address : No.30 Droupathi Amman Koil Street,(Next to Mosque),  Velachery, Chennai 42


For Money Transfer:

Current Account No.: 30265475129, State Bank of Indian, IIT Madras Branch

IFS Code: SBIN0001055, Deepam Trust


---
With wishes

Yours Sincerely

DEEPAM TRUST

30,Throwpathi Amman Kovil Street,
Velachery, Chennai - 600 042
Phone : 044-2244 2515 | Cell: 94440 73635


Connect with DEEPAM TRUST:

 

Join us Volunteer : Click here

 

Visit Deepam Trust WEBSITE: http://www.deepamtrust.in

 

Like Deepam Trust on FACEBOOK: Click here

 

Follow Deepam Trust TWITTER: deepamtrustngo

 

SUBSCRIBE Our YouTube Channel: Click here

 

Read DEEPANERI Monthly Magazine online: Click here



We send this mail only to our Deepam Donors. If others receive, please ignore or unsubscribe.


Friday, April 7, 2017

[vallalargroups:5627] Download ThiruArutpa Full Urainadai Audio book in a single click - Free of cost

Dear All,

We are pleasure to announce, Now you can download Full ThiruArutpa  Urainadai Audio book in a single click.

File Size: 1.3 GB

File ForMat: ZIP ( Once You download it, You have to Unzip the file at first time)


Full Download Link:

http://www.mediafire.com/file/wstzsiudy54hk4n/000+ThiruArutpa_Urainadai+Audio+Books+-With+Property.zip

For Individula Download:

http://www.vallalarspace.org/space/list/769

or

http://sanmarkkam.com/urainadaipakudhi-audio-mp3/


For help : 07411275938

Share this to All Via WatsApp, FaceBook and other Medias.

==========================================================


திருஅருட்பா உரைநடை பகுதி ஒலி நூல் முழுவதும் பதிவிறக்கம் செய்ய
இங்கே சொடுக்கவும்

50 மணி நேரம் தொடர்ந்து ஒலிக்க கூடியது 1.5 ஜி.பி நினைவகம் தேவை


தனிப் பதிவிறக்கம் (ஓவ்வொரு பகுதியாக) இங்கே சொடுக்கவும்


http://www.vallalarspace.org/space/list/769
or

http://sanmarkkam.com/urainadaipakudhi-audio-mp3/


முழு பதிவிறக்கம் (ஒலி நூல் முழவதும்) இங்கே சொடுக்கவும்


http://www.mediafire.com/file/wstzsiudy54hk4n/000+ThiruArutpa_Urainadai+Audio+Books+-With+Property.zip


முழுபகுதியும் ஜிப் ஃபைல் வடிவத்தில் உள்ளது, பதிவிறக்கம் செய்த பின் ஒருமுறை மட்டும் அன்ஜிப் செய்ய வேண்டும்.

மேலும் விவரம் வேண்டுவோர் தொடர்பு கொள்க : 07411275938

சமூக ஊடகங்கள் மூலம் அனைவருக்கும் பகிரவும்.

Thanks.

--

Regards,

Anandhan. L
Ph: +91 74-112759-38
Web : http://sanmarkkam.com/

[vallalargroups:5624] Iஉயிர் இரக்கம்

Thursday, April 6, 2017

[vallalargroups:5622] Poosam List 2017

[vallalargroups:5621] மது, மாமிசம் இல்லாத புனித பூமி - பேரணி

வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய இடங்களை மது, மாமிசம் இல்லாத புனித பூமியாக தமிழக அரசு  நிரந்தரமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுருத்தி ஐயா படப்பை பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று  மாலை (05/04/2017) வடலூர் நான்கு சாலையில் இருந்து சத்திய ஞான சபை வரைக்கும் பேரணியாக சன்மார்க்கிகள் முழக்கமிட்டு சென்ற கானொளி காட்சி.

Tuesday, April 4, 2017

[vallalargroups:5627] Fwd: மலேசியாவில் 1நாள் தியான & யோக அனுபவ முகாம்,vallalar 1day meditation program


மலேசியாவில் 1நாள் தியான & யோக அனுபவ முகாம்

தமிழகத்தில் இருந்து வருகை தரும் சாதுக்களால் இந்த முகாம் இலவசமாக நடைபெறுகிறது

அருள் பூரண சித்தி யோகம்

🌺ஜோதி தியானம்
🌺ஜோதி வழிபாடு
🌺மூலிகை குறிப்பு
🌺ஞான சத்சங்கம்
🌺திருஅருட்பா         பாராயணம்
🌺யோகாசனம்
🌺சுவாசப் பயிற்சி

நான் யார்? கடவுள் யாா்? ஆன்மீக என்றால் என்ன? குரு என்பவா் யார்? ஏன் வாழ்வில் இன்பம்,துன்பம் மாறிக்கொண்டே உள்ளது?

🌅போன்ற கேள்விகளுக்கு விடை காண.....
🌅பக்தி,தியானம்,
ஜீவகாருண்யம்,யோகம்....... போன்ற அருள் நிகழ்வில் கலந்து கொள்ள ஒா் அாிய வாய்ப்பு

மூன்று வேளை உணவுடன்
பதிவு அவசியம்
கீழே உள்ள எண்ணிற்கு தங்கள் பெயா்,போண் நம்பா்,ஐசி எண் அனுப்பவும்

*Spirituality in the 21st Century*
_Based on the teachings of Swamy Ramalingga Vallalar_

Arutperunjothi Vanakam. Join us for a *1 day Spiritual Workshop* conducted by Sadhu Janagi Raman from the Thiruvannamalai (India) Vallalar Ashram on

*Date: 23 April 2017, Sunday*
*Time: 8am to 6pm*
*Venue: Kalamandapam, Brickfields, KL*
*Age: 16 & above*
*Admission: Free* (donation accepted)

The ARUL POORANA SIDDHI YOGAM workshop will give you an insight to the essence of Spirituality & overall well-being  through:
- Hatta Yoga
- Pranayama (Breathing Exercises)
- Dhyana (Meditation) 
- Sanmarga Satsang
- Siddha & Ayurveda Herbs Uses

*To register, sms/whatsapp the following information to one of the numbers below:*
Full name: 
Contact number: 
IC number:  

1) Malar: 012-2252499
2) Jennifer: 017-3000892
3) Vijaya: 019-6465555

*Workshop will be conducted by the Sadhus in Tamil (handouts will be in Tamil & English). Food & beverages provided. The workshop is not suitable for children.

_Ella uyirgalum inbutru vaalgha_ 🙏🏼

*This Workshop is organized by Vallalar Mission with the aid of volunteers from Malaysian AUM Organization (Krishnaraj: 012-3970431)

--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Arutperunjothi Vallalar Charitable Trust,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarmission.org






--
Best Regards,
ArulThiru.Babu Sadhu,
Arutperunjothi Vallalar Charitable Trust,
Thiruvannamalai.
Mob: +91 9942776351
www.vallalarmission.org



Thursday, March 30, 2017

[vallalargroups:5620] வள்ளலார் உணவு குறிப்புகள்

காரம் : மிளகின் காரமே சிறந்தது இது ஒரு காயசித்தியும் கூட

கசப்பு : பிஞ்சு கத்தரி பிஞ்சு முருங்கை காய் சிறந்த காய்கள்

துவர்ப்பு: கடுக்காய் பொடி அல்லது பாவனை கடுக்காய் இரத்தத்தை சுத்தி செய்து காயம் ஏற்பட்டால்  உறையவைக்கும் காய சித்தி

உப்பு: ஆயுளை நஷ்டம் செய்யும் எனவே குறைவாக முருங்கை அல்லது குப்பைமேனி இலைகள் சேர்ந்து வறுத்து பின் பயன்படுத்தி கொள்ளலாம் கடல் உப்பு வேண்டாம் இந்துப்பு எனப்படும் பாறை உப்பு சிறந்தது.

புளிப்பு: குறைவாக பயன்படுத்தவும் குடம்புளி அல்லது புளியாரை பயன்படுத்தலாம் புளியாரை காயசித்தி தினமும் துவயல் செய்து உண்ண ஆயுள் நீட்டிக்கும்.

இனிப்பு: இதுதான் சன்மார்க்க உணவு நாட்டு சர்க்கரை சிறந்தது வெள்ளை சர்க்கரை வேண்டாம்

குழப்பு பொரியல் இரசம் கறியமுது செய்ய இதோ மிளகு குழப்பு பொடி

மிளகு - 160கிராம்
சீரகம் - 60கிராம்
வெந்தயம் - 40 கிராம்
மிளகாய் -10கிராம்
புளி - 10கிராம்
உப்பு - 10கிராம்

நன்றாக பொன் வறுவலாக வறுத்து 
இதில் வள்ளற் பெருமானார் அருளியது இதில் அறுசுவையும் உண்டு...🌶🙏

Tuesday, March 14, 2017

[vallalargroups:5615] வள்ளலார் சொல்லிய உளவு !

வள்ளலார் சொல்லிய உளவு !

இந்த உலகத்தில் பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே !

நமக்கு அறிவு வந்த காலம்  முதல் ''அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்'' ''அடைந்து அறியாத அற்புத அறிவுகளையும்'',...அடைந்து அறியாத குணங்களையும்,..கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்,...செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,...கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,...அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும்,...பெற முடியாமல் வீணாக அழிந்து கொண்டு உள்ளோம்.

1,அறிந்து அறியாத அற்புத அறிவு,
2,அடைந்து அறியாத அற்புத அறிவு,
3,அடைந்து அறியாத அற்புத குணம்,
4,கேட்டு அறியாத அற்புத கேள்விகள்,
5,செய்து அறியாத அற்புத செயல்கள்,
6,கண்டு அறியாத அற்புதக் காட்சிகள்,
7,அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்கள்,

மேலே கண்ட அனைத்தும் மனித தேகம் எடுத்த நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..ஆனால் அறிந்து  தெரிந்து கொண்டு உள்ளோமா ? என்றால் இல்லை என்பதுதான்,அனைவரிடமும்  பதிலாக வருகின்றது ..

மேலே கண்ட அனைத்தும் அறிந்து தெரிந்து கண்டு ,கேட்டு, பெற்று, அனுபவித்து நமக்குத் தெளிவாக விளக்கி விளக்கம் தருகின்றார் .நமது அருட்தந்தை வள்ளல்பெருமான் அவர்கள்....

வள்ளலார் இவைகளை எல்லாம்  எங்கு இருந்து பெற்றார் ? யார் இடம் இருந்து பெற்றார்? எவ்வாறு பெற்றார் ? என்னும் உண்மையைத்  தெரிந்து கொண்டால் மட்டுமே நாம் வள்ளலார் போல் மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் முத்தேக சித்திப் பெற்று பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழமுடியும் ./

அதை விடுத்து பழைய சமய மதக் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டும்  .வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்கக் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்வதால் எந்தப்  பயனும்,எப்போதும் கிடைக்காது என்னும் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்...

உண்மைக் கடவுள் யார் ?

நாம் இதுவரை சமய மதங்கள் காட்டிய  பொய்யானக் கடவுள்களை வணங்கியும்,வழிபட்டும் சிற்றறிவு பெற்று வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளோம்....நாம் முதலில் உண்மைக் கடவுளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்றார் வள்ளலார் ..

இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும் ....
இயற்கையில் தானே உள்ளவராய் விளங்க்குகின்றவர் என்றும்.
இரண்டும் படாத பூரண இன்பம் ஆனவர் என்றும் ...
எல்லா அண்டங்களையும்,...
எல்லா உலகங்களையும்,...
எல்லாப் பதங்களையும்,....
எல்லாச் சத்திகளையும் ...
எல்லாச் சத்தர்களையும் ...
எல்லாக் கலைகளையும் ...
எல்லாப் பொருள்களையும் ...
எல்லாத் தத்துவங்களையும் ...
எல்லாத் தத்துவிகளையும் ...
எல்லா உயிர்களையும் ....
எல்லாச் செயல்களையும்...
எல்லா இச்சைகளையும் ...
எல்லா ஞானங்களையும் ...
எல்லாப் பயன்களையும் ....
எல்லா அனுபவங்களையும் ....
மற்றும் எல்லா வற்றையும் ...

தமது திருவருட் சத்தியால்,தோற்றுவித்தல்..வாழ்வித்தல் ...குற்றம் நீக்குவித்தல் ...பக்குவம் வருவித்தல்...விளக்கஞ்செய்வித்தல் முதலிய பெருங் கருணைப் பெரும் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்..எல்லாம் ஆனவர் என்றும் ..ஒன்றும் அல்லாதவர் என்றும்.சர்வ காருண்யர் என்றும் ..சர்வ வல்லவர் என்றும்..எல்லாம் உடையவராய் ..

தமக்கு ஒருவரும் ஒப்பு உயர்வு இல்லாத் தனிப் பெரும் தலைமை '''அருட்பெருஞ்ஜோதியர் "'என்றும் சத்திய அறிவால் ஆறியப் படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே ! அவர் அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கம் இன்றி நிறைந்து விளங்குகின்றார் ..

அவர் இருக்கும் இடம் !

சுத்த மெய் அறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் ...அந்த இடத்திற்கு  அருட்பெரு வெளி என்னும் பெயராகும் ...நாம் காணும் பஞ்ச பூத வெளி அல்ல ! நாம் காணும் ,அக்கினி,சூரியன்,சந்திரன்,நட்சத்திரம் போன்ற ஒளிகளில் ஒன்று அல்ல ! அவை அருள் ஒளியாகும் ,அவை இயங்கும் இடம்  அருள் நிறைந்த பெருவேளியாகும் ..

அருட்பெருஞ்ஜோதி அட்டகம் என்னும் தலைப்பில் வள்ளலார் தெளிவாக பதிவு செய்துள்ள பாடல் !

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்து
அருட்பெரும் தலத்து மேன் நிலையில்
அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்
அருட்பெரு திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரும் நிதியே
அருட்பெரும் சித்தி என் அமுதே
அருட்பெரும் களிப்பே அருட்பெரும் சுகமே
அருட்பெருஞ் ஜோதி என் அரசே !

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே ஆகிய கடவுளை ,இவ் உலகத்தின் இடத்தே நீவர்கள் ஆகிய நாம் அறிந்து, அன்பு செய்து ,அருளை அடைந்து அழிவு இல்லாத சத்திய சுக பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,

பல்வேறு கற்பனைகளால் பல்வேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும்,பல்வேறு மார்க்கங்களிலும் பலவேறு லஷியங்களைக் கொண்டு நெடுங்காலம்,பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிறிய அறிவும் இல்லாமல் விரைந்து விரைந்து பலவேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றோம்.

இனிமேல் நாம் இறந்து இறந்து ,பிறந்து பிறந்து .வீண் போகாமல் .உண்மையான கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டு ,,வள்ளலார் சொல்லிய வண்ணம் .உண்மை அறிவு..உண்மை அன்பு..உண்மை இரக்கம் அதாவது ஜீவ காருண்யம் ..முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய் வாழ்ந்து காட்ட வேண்டும் ..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தெரிந்து கொள்வதற்குத் தகுந்த இடம்;---  ,எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொதுக் கடவுளாக விளங்குபவரை  ,,தமிழ் நாட்டில் உள்ள  கடலூர் மாவட்டம் வடலூரில்,''சமரச சுத்த சன்மார்க்க  சத்திய ஞான சபையில்''கடவுளை  ஜோதி வடிவில் ,இயற்கை விளக்கமாக புறத்திலே வைத்து உள்ளார் ....அதேபோல் உண்மைப் பொது நெறியாகிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தையும் வடலூரில் தோற்றுவித்து உள்ளார் . அதேபோல் அருளைப் பெறுவதற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையும்,வடலூரில் தோற்றி வைத்து உள்ளார் ..

அந்த உண்மையான உளவைத் தெரிந்து கொண்டால்...அவற்றை தொடர்பு கொண்டு, அதன்படி வாழ்ந்தால் இத்தருணமே தொடங்கி கருதிய வண்ணம் பெற்றுக் பெரும் களிப்பை அடைவீர்கள்

நாம் எல்லோருக்கும் தாய்,தந்தை,அண்ணன் .தம்பி,உற்றார் ,உறவினர்,நண்பர்கள் .மற்றும் பழைய,சமய,மத  தெய்வங்கள் ,முதலானோர் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ அதற்கும் மேலாக கோடி கோடி பங்கு அதிகமாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வாரி வாரி வழங்குவார் ..இது சத்தியம் ..இது சத்தியம்,இது சத்தியம்...

திருவடிப் புகழ்ச்சி பாடல் !

உள்ளானைக் கதவு திறந்து உள்ளே காண
''உளவு'' எனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
கொள்ளானை என் பாட்டைக் குறிக் கொண்டானைக்
கொல்லாமை விரதம் எனக் கொண்டார் தம்மைத்
தள்ளானைக் கொலை புலையைத் தள்ளா தாரைத்
தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி
எள்லானை இடர் தவிர்த்து இங்கு என்னை யாண்ட
எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே !

மேலும் ஒரு உளவு சொல்லுகின்றார் !

காலையிலே என்தனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச்
சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப்பதியே
சமரச சன்மார்க்க சங்கத்து தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து தாடும்
மாநடத்து அரசே என் மாலை அணிந்து அருளே !

மேலே கண்ட கருத்துக்களின்  வாயிலாக அருளைப் பெரும் உளவை மேலே சொன்ன விளக்கத்தாலும்,பாடல்களாலும் ,வள்ளலார் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் .நாமும் அந்த உளவைத் தெரிந்து கொண்டு ,வள்ளலாரைப்  போல் வாழ்ந்து மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு பெற்று சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் முத்தேக சித்தியைப் பெற்று என்றும் அழிவில்லாமல் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு  வாழ்வாங்கு  வாழ்வோம்...

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896....

Tuesday, March 7, 2017

[vallalargroups:5611] 14 குறிப்புக்கள் - Invitation to view

Vallalar Groups has invited you to view the following shared folder:
Google Drive: Have all your files within reach from any device.
Google Inc. 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, USA
Logo for Google Drive

Sunday, January 15, 2017

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)