Monday, April 24, 2023

Fwd: மயானக் கொள்ளையில் இறைவன் பெயரை சொல்லி ,துடிக்க துடிக்க ஆயிரக்கணக்கான உயிர்பலி



---------- Forwarded message ---------
From: Vallalar Groups <vallalargroups@gmail.com>
Date: Sun, Mar 19, 2023 at 6:46 PM
Subject: மயானக் கொள்ளையில் இறைவன் பெயரை சொல்லி ,துடிக்க துடிக்க ஆயிரக்கணக்கான உயிர்பலி
To: <cmhelpline@tn.gov.in>
Cc: <vallalardheivanilayam@gmail.com>, <commr.hrce@tn.gov.in>


மதிப்புக்குரிய மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு,

மயானக் கொள்ளையில் இறைவன் பெயரை சொல்லி ,துடிக்க துடிக்க ஆயிரக்கணக்கான உயிர்பலியாகி கொண்டு இருக்கின்றது.

Temple name: அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில்
Village name : மேல்காங்கேயன் குப்பம்& கீழ்காங்கேயன் குப்பம்
Taluk:பண்ருட்டி
District:கடலூர்
Date: 22.03.2023


இன்று அங்காள அம்மன் என்று இறைவன் பெயரை சொல்லி, இறைவன் கேட்கிறார் என்று சொல்லி பல் ஆயிரக்கணக்கான ஆடு,மாடு,கோழிகளை ,இறைவன் வழிபாடு என்று கூறி கொண்டு,

ஒவ்வொரு உயிர்களும் கதற,கதற, துடி,துடிக்க ,ஈவு இரக்கமின்றி இறைவன் படைத்த உயிர்களையே,தன்னுடைய சுய நலத்திற்காக இறைவன் கொல்ல சொல்கிறார் என கூறிக்கொண்டு வெட்டி, அதனுடைய இரத்ததை உறிஞ்சி, சதைகளை தின்கின்றார்கள்,

இறைவன் பெயரை சொல்லி நடக்கும் இந்த உயிர் கொலைகளை வடலூர் சுத்த சன்மார்க்க சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

வள்ளலார் இயற்றிய அருட்பா (ஆதாரப்)பாடல்:

"உயிரெலாம் ஒரு நீ திருநடம் புரியும் ஒருதிரு பொதுவென அறிந்தேன் " - 

"எவ்வுயிரும் பொதுஎனக் கண்டிரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்தச் செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின் செயல் எனவே தெரிந்தேன்" - 


"கருணைஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம்உயிர்போல் கண்டு ஞானத் தெருள்நெறி"

"எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும் தம்உயிர்போல் எண்ணி
உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான்
சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன்" (தனித் திருஅலங்கல்)

"மண்ணுலகதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிதெனினும் கண்ணுறப் பார்த்தும், செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன்"


உயிர்கள் - இறைவன் திருநடம் செய்ய கூடிய இடம்.ஒவ்வொரு உயிர்களிலும் இறைவன் இருக்கிறார்

எல்லா உயிர்களும் உயிர் கொலை துன்பம் இன்றி இன்புற்று வாழ தாங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தயவன்போடு கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு
VallalarGroups
J. Karthikeyan





web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)