Monday, April 15, 2019

[vallalargroups:6093] அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தின் ரூபம் சொரூபம் சுபாவம்

🙏🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

🙏🔥🌺 *அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தின்  ரூபம் சொரூபம் சுபாவம்*  🌺🔥🙏
🙏🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥🙏

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர்உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 👏

🙏🔥 *எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !            கொல்லா விரதமே குவலயம் எல்லாம் ஓங்குக !           நல்லோர் நினைத்த நலம் பெறுக !      நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து !* 🔥🙏
        
அண்டத்தையும் பிண்டத்தையும் அருளால் ஆட்சிசெய்கின்ற தன்னிகரற்ற  நமது தனிப்பெரும்பதியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தயவாகிய அருளைப் பெறுவதற்கு உரிய  ஒப்பற்ற திருமந்திரத்தை ,

இவ்வுலக ஆன்மாக்கள் எல்லாம் உச்சரித்து ஆன்மலாபத்தை அடையும்பொருட்டு  ,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை குறைவின்றி பூரணமாக *"தயவால்"* பெற்றுக்கொண்ட நமது வள்ளல் பெருமானிற்கு, 

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  தமது  மேலான பேரின்பத்தை ஆன்மாக்கள் எல்லாம் அடைந்து அனுபவிக்கும் பொருட்டும்,
தமது உண்மையை முழுமையாக வெளிப்படக் காட்டும் வண்ணமும்,

அதற்குரிய சாதக சகாயமான திருவருள் மகா வாக்கிய திருமந்திரத்தை,

நமது அருட்பெருந்தந்தை அருட்பிரகாச வள்ளல்  பெருமானுக்கு, ஆண்டவர் தனிப்பெருங்கருணையுடன் வெளிப்படுத்தி அருளவும், 

அதன்பொருட்டு தனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த,
உண்மையறிவனுபவானந்த இன்பத்தை ( உண்மை அறிவு ஆனந்தம் =சத்து சித்து ஆனந்தம் =சச்சிதானந்த இன்பம்) ,

இவ்வுலகவர் அனைவரும் தம்மைப் போன்றே ஐயம் திரிபு மயக்கமின்றி சச்சிதானந்த அனுபவத்தைப் பெற்றிடும் பொருட்டு,

தனக்குள் எழுந்து பொங்கிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன், குறிப்பிக்கின்றேன், குறிப்பிப்பேன் என்று கூறி ,

நமது ஆண்டவர் எனக்கு இட்ட கட்டளை யாதெனில் ,
சுத்தசன்மார்க்கர்களாகிய நமக்கு முதல் சாதனம் கருணை ஆனதினாலே,

ஆண்டவர் திருவருள் மகாமந்திரத்திற்கும் முற்சாதனமாக கருணையையே குறித்திடும் வண்ணம்,

🌺🌻 அருட்பெருஞ்ஜோதி 
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
🌻🌺

என்னும் திருமந்திரத்தை எனது மெய்யறிவின்கண் தெரிவித்து அருளினார்கள்🌻🙏

அந்த திருவருள் மகாமந்திரத்தின் பலனை பூரணமாக அனுபவித்து ,

இதுவரை இந்த பிரபஞ்சத்தில் எந்தஒரு
அருளாளர்களும் ,  பெருந்தொழில் செய்கின்ற மூவரும்,தேவரும்,முத்தரும்,சித்தரும் எவரும் அடைந்திட முடியாத ஓர் அற்புத சுத்தசன்மார்க்க சுகப்பெரும் நிலையாகிய *"அருட்பெருஞ்ஜோதி இயற்கை " என்னும் பெருநிலையைப்* பெற்றுக்கொண்ட கருணையே வடிவான நமது "திருவருட்பிரகாச வள்ளல் பெருமான்" 
தாம் அடைந்த இந்த பேரின்ப திருநிலைப் பெருவாழ்வை இவ்வுலகவர் அனைவரும் பெற்றிடவேண்டும் என்ற தனிப்பெருங்கருணையால் அந்த அற்புத "மகாமந்திர திருவாக்கியத்தை" நம் அனைவருக்கும் வெளிப்பட தெரிவித்து அருளியுள்ளார்கள்🌻🌺🔥🙏

அந்த மகாமந்திரத்தின் மகிமையை ஒருவாறு இவ்வெளியேனின் சிற்றறிவினால்,
நமது தாயும் தந்தையும் ஞான சற்குருவாயும்  உள்ளும் புறமும் இருந்து நம்மை வழிநடத்தும் ,
நமது அருட்பெருந் தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமானிடமே ஆவலோடு விசாரித்த வகையில்,

குதத்தில் இழிந்த மலத்தினும் சிறியேனாகிய இக்கடையவனின் விசாரத்தையும் ஓர்பொருட்டாய் எடுத்துக்கொண்டு எனது ஆவல்அடங்க ஒருவாறு தெரிவித்தருளியதை ,

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய எனது சகோதர சகோதரிகளுக்கும் தெரிவித்திடும் வண்ணமே இங்கு இவற்றை தயவினொடும்  தெரிவித்து மகிழ்கின்றேன்.🙏🔥🌺

கற்றறிந்த சுத்தசன்மார்க்கப் பெரியோர்கள் இவ்வெளியனின் கருத்தை அனைவருக்கும் கர்வத்தோடும் , பெருமைப்பாட்டிற்காகவும் திணிப்பதாகக் கருதாமல்,

எனது குணத்திலே பெருமான் கொடுக்கின்ற பொருளை எறிந்துவிடாமல்,

எனது ஆன்மநேய சகோதரர்கள் அனைவருக்கும் தயவோடு பகிர்வதாகக்கொண்டு இதைப் பற்றிய மேலும் விசாரத்தை அவரவரும் பெருமானிடமே தயவொடும் விசாரித்து அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தயவொடும் வேண்டுகின்றேன் 🌺🔥🙏.

கடவுளது உண்மையை தனது அகத்திலே, உள்ளொளியாகக் கண்டு அனுபவித்த நமது முன்னைய அருளாளர்கள்,

 அந்த உள்ளொளியாகிய அருட்பெருஞ்ஜோதி இறையொளியை ஓரளவு தம்முள் அனுபவித்த நமது சித்தர்களும் ஞானிகளும் ,
தமது அகஅனுபவத்தை வெளிப்பட சொல்லுவதற்கு ஏற்றவாறு 
அவ்வருள் ஒளியை,
சப்த ஒலிகளாக தருவதற்கு மொழிகளை திருவருள் துணையால் உருவாக்கினார்கள்.🌺🔥🙏
  
அப்படி திருவருட் கருணையால்  நமது சித்தர்களாலும் முனிவர்களாலும் ,  உருவாக்கப்பட்டதுதான்,
இலக்கண இலக்கியத்தைக் கொண்ட நமது அற்புதமான "தமிழ்மொழியாகும்".🌺🔥🙏

   தமிழ்மொழி,
 ....எழுத்து ,சொல்,
பொருள்,அணி,யாப்பு என்ற ஐந்த இலக்கணங்களும், கடவுள் உண்மையை உணர்த்தி , ஆன்மாக்கள் அக்கடவுளை பக்குவத்தில் அடைதல் வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டவையாகும்.🌹🔥🙏

அப்படி அருட்பெருஞ்ஜோதி உள்ளொளி அனுபவத்தை ஒருவாறு அனுபவித்த அருளாளர்களால் உருவாக்கி அளிக்கப்பட்ட  ஒருசில சித்திகளை அடைவிக்கக்கூடிய மந்திரவார்த்தைகளை ,

தமிழ் எழுத்துக்களை கூட்டி குறைத்து  ,
ஒன்று, மூன்று,நான்கு, ஐந்து, ஆறு,எட்டு எழுத்துகளிலும் கூட்டியும் குறைத்தும், மேலும் பலவாறு மந்திரங்களையும் வழங்கியருளினார்கள்.

அவர்களின் ,
வழிவழிவந்த அன்பர்களும் அவற்றை உச்சரித்து அடையவேண்டிய அற்ப சித்திகளை அடைந்து மகிழ்ந்தார்கள்.

உலகமெங்கும் அருளாளர்கள் பரவியிருந்தாலும் அவர்கள் சிவானுபவ போகத்தை அடையவேண்டும் என்றால் ,

நமது தமிழ்விளங்கும் ஞானபூமியாகிய தென்னகத்திற்கு வந்து,
 
அழியா நிலைக்குரிய அமுதத்தை வழங்கும் தமிழ்மொழியைக் கற்று அதன்மூலம்தான் விரைந்து அடையவேண்டிய ஆன்மலாபத்தை அடையமுடியும் என்பதை நமது வள்ளல் பெருமானும் "தமிழ்"என்ற தலைப்பில்
உரைநடைப் பகுதியில் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்கள்🔥🙏
🌹🌺🌻 *_ஐந்தென எட்டென ஆறென நான்கென முந்துறு மறைமுறை மொழியும் மந்திரமே_* 🌻🌺🌹
🙏 
அருட்பா அகவலிலே 1317 வது வரியினிலே,
"ஐந்தென எட்டென ஆறென நான்கென முந்துறு மறைமுறை மொழியும் மந்திரமே"
  என்று பூரண திருவருள் நிலையில் இருந்து நமது பெருமான் வழங்கியருளியுள்ள அகவலில்,

  ஐந்தெழுத்து மந்திரமாகிய "நமசிவாய" மற்றும் "சிவாயநம" என்றும்,
   
  எட்டெழுத்து மந்திரமாகிய "ஓம் நமோநாராயனாய" என்றும்,

  ஆறெழுத்து மந்திரமாகிய "சரவணபவா" என்றும்,

நான்கெழுத்து மந்திரமாகிய "சிவோகம்" என்றும்  இன்னும் பலவாறு ஆதிதொட்டு உச்சரித்து வந்த மந்திரங்களுக்கு எல்லாம் ஆக்கத்தையும், ஊக்கத்தையும், வல்லபத்தையும் கொடுத்து அவ்வவற்றிற்குரிய அற்புத சித்திகளை வழங்கியருளிய அருட்பெருஞ்ஜோதி மாமருந்தே என்று ஆண்டவரைப் போற்றி புகழுகின்றார்கள் நமது பெருமான் 🔥🙏

அப்படி இந்த பிரபஞ்சம் இதுவரை கண்டுவந்த அருளாளர்களும் சித்தர்களும் , முனிவர்களும்,
யோகிகளும், ஞானிகளும் உச்சரித்தும் உபதேசித்தும் வந்த மந்திர தந்திர வார்த்தைகளுக்கு எல்லாம் அருள் வல்லபத்தை தந்து அருள்பாலித்தது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே என்பதும் ,

    அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பூரணமான அருளைப் பெற்றுக்கொண்ட நமது வள்ளல் பெருமானின் அகம் கலந்துநிறைந்த  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே,
 தமது உண்மையை தாமே வெளிப்படுத்தும் வண்ணம், அற்புத திருமந்திர வாக்கியத்தை வள்ளல் பெருமானுக்கு வெளிப்பட தெரிவித்து இவ்வுலகம் உய்வதற்கு அருள்பாலித்தார்கள்.

    அதனாலேயே வள்ளல் பெருமான் இந்த அருட்பெருஞ்ஜோதி திருமந்திரத்திற்கு  "மகா மந்திரம்" என்று பெயரிட்டருளினார்கள் 🔥🙏

நல்லது தற்போது அந்த மகாமந்திரத்தின் விளக்கத்தைக் காண்போம் 🌺👏

இவ்வுலகில் இதுவரை வேதாகமங்களின் வழி சொல்லப்பட்ட  கடவுளர்களும் அக்கடவுளர்களுக்காக உச்சரிக்கப்பட்ட மந்திரங்களும்  எண்ணற்றவையாகும்;
  
ஆனால் அந்த கடவுளர்கள் எல்லோருமே தங்களுக்குரிய மேலான அனுபவத்தை அடையும்பொருட்டு, காணக்கிடைக்காமல் தேடி ,அலைந்து ,வாடி வருந்தி ,நாளும் தவம்கிடக்கும் பரம்பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் புகழ்பாடும் ஒரே மந்திரமும் ,
இதுவரை இவ்வுலகில் உச்சரிக்கப்பட்ட மந்திரங்களுக்கெல்லாம் தலையாய மகா மந்திரமாகவும் திகழ்வது அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரமாகும்.

 *மந்திரம் என்றால் மந் என்றால் நினைப்பது என்று பொருள்* ,
    *திரா என்றால் காப்பாற்றுவது என்று பொருள்* ;
   ஆக மந்திரம் என்றால் நினைப்பவரை காப்பாற்றுவது என்று பொருள்;

ஆகம முறைப்படி கடவுளின் பெயரை வாய்விட்டுச் சொல்லலாம்,
  ஆனால் காயத்திரி மந்திரத்தை வாய்விட்டு சொல்லக்கூடாது மனத்தால் மட்டுமே நினைத்திடல் வேண்டும் என்பார்கள்🔥🌺🙏

     ஆனால்,
சுத்த சன்மார்க்கத்தில் நமது ஆண்டவருடைய பெயரையும் , அவர்களின் வடிவத்தையும், அவர்களின் தன்மையையும் ஒரு சேர வாய்விட்டு சொல்லி புகழும் வண்ணம் மகாமந்திரமாக ஆண்டவரே அமைத்துக்கொடுத்துள்ளார்கள்;


    
     ஒரு சொல் இல்லாமல்  பொருள் விளங்காது,
  அதுபோல் ஒரு பொருள் இன்றி சொல் தோன்றாது;

    ஒவ்வொரு பொருளுக்கும் நாம,ரூப,சொரூபம்  என்ற இலக்கணங்கள் இல்லாமல் இருக்காது;

  உதாரணத்திற்கு எலுமிச்சைப் பழம் என்று சொன்னால் ,
அதன் நாமம் அதாவது அதன் பெயர்,
 எலுமிச்சைப் பழம் என்பதுவும்;

அதன் ரூபம் அதாவது வடிவம் அது சிறிய உருண்டை வடிவம் என்பதுவும்,

அதன் சொரூபம் அதாவது அதன் இயற்கை தன்மை , அது புளிப்புத்தன்மைக் கொண்டதுவும் என்பதாகும்;
      
     இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் நாமம் ரூபம் சொரூபம் உண்டு அது இல்லாமல் எந்தப் பொருளும் கிடையாது எந்த சொல்லும் கிடையாது என்பதாம்;

   அதே போன்று நமது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் நாம ரூப சொருபத்தை விளக்குவதே நமது மகாமந்திரமாகும்;

   எப்படி எனில் முதலில் நமது ஆண்டவருடைய நாமம் அதாவது இவ்வுலகைப் படைத்த ஒரே உண்மைக்கடவுளின் பெயர் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும் .
இதுவே முதல் அருட்பெருஞ்ஜோதியாய் அமைந்துள்ளது🔥🌺🙏

  இரண்டாவது அருட்பெருஞ்ஜோதி,
 நமது ஆண்டவருடைய ரூபம் அதாவது உருவம் ஆகும் , நமது ஆண்டவர் உருவம் எப்படி இருக்கிறது என்றால் அருட்பெருவெளியில் அருளால் நிறைந்த 
மிகப்பெருஞ்ஜோதியாக இருக்கின்றது என்பதாம்.

அருள் என்பது இரக்கம் தயவு,கருணை,அன்பு என்ற பொருளில் , அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,
அன்பால் நிறைந்து,
இரக்கமே வடிவமாக, 
கருணையே உருவாக, தயவே ரூபமாகக் கொண்டு,

பாரொடு விண்ணாய் பரந்ததோர் பெரும்ஜோதியாய் தமது அருளாள் விளங்கி , விளக்கம் செய்விக்கின்றார்கள் என்று அவரது உருவத்தை விளக்கவே இரண்டாவது அருட்பெருஞ்ஜோதி அமைந்துள்ளது🔥🌺🙏

அடுத்து மூன்றாவதாக தனிப்பெருங்கருணை என்பது நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய சொரூபமாகும் .
அதாவது நமது ஆண்டவருடைய இயற்கை குணம் எப்படிப்பட்டது என்பதை விளக்குவதாகும்,
    
நமது ஆண்டவருடைய குணம் தனிப்பெருங்கருணையாய் இருக்கின்றது ,
   தனி என்றால் எதற்கும் ஒப்பிட்டு சொல்ல இயலாதது என்று பொருள்,
பெருங்கருணை என்றால் பெரிய தயவு, பெரிய இரக்கம்,பெரிய கருணை என்று பொருள்.
    ஆகலில் நமது ஆண்டவருடைய குணம் எவற்றிற்கும் , எவருக்கும் , எவராலும் ஒப்பிட்டு சொல்ல இயலாத மிகப்பெருங்கருணை உடையதாய் இருக்கின்றது என்பதை விளக்கவே மூன்றாவதாக தனிப்பெருங்கருணை என்று அமைந்துள்ளது;

    அடுத்து நமது  ஆண்டவரின் நாம ரூப சொரூபத்தையே மந்திரமாக உச்சரிக்க வந்ததால் முதலில் ஆண்டவரின் நாம ரூப சொருபத்தை சொல்லி இப்படிப்பட்டவர் நமது ஆண்டவர் என்று மீண்டும் நான்காவதாக நமது ஆண்டவர் பெயரையே குறித்துக்காட்டும் வண்ணம் மீண்டும்
அருட்பெருஞ்ஜோதி என்று நான்காவதாக அமைக்கப்பட்டது;

   இப்படி அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் சொல்லும்போது ,
அருட்பெருஞ்ஜோதி என்று நிருத்தி மீண்டும் அருட்பெருஞ்ஜோதி என்று உயர்த்தி பிறகு தனிப்பெருங்கருணை  அருட்பெருஞ்ஜோதி என்று இரண்டையும் சேர்த்து சொல்லி நிறுத்தல் வேண்டும்.
அப்பொழுதுதான் இம்மகாமந்திரத்தின் உண்மையும் விளக்கமும் வெளிப்படும்🔥🌺🙏
  
 பொருள் புரிந்து சொல்லும் போது அதன்மகத்துவம் தானாய் விளங்கும்;

 இதன் மூலம் நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,
அருள்நிறைந்த பெருஞ்ஜோதி வடிவாய் ,
ஒப்பற்ற தனிப்பெருங்கருணையோடு விளங்கின்றார் என்று பொருள்படும்;

   இது மற்றைய சமயமதங்களில் நமக்கு புரியாத மொழியில் சொல்லப்படுவதுபோல் இல்லாமல் ,உயரிய தமிழ்மொழியில் , தமிழ் இலக்கண இலக்கியத்தோடு கடவுளின் பெயரையும், உருவத்தையும், அவருடைய குணத்தையும் சொல்லி கடவுளைப் பெருமைப்பட புகழ்ந்து வணங்குகின்ற உயரிய மகாமந்திரம் என்பதை உணர்ந்து ,

இம்மகா மந்திரம் ,
நமது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்கும், சுத்தசன்மார்க்க சுகப்பெரு நிலையை அடைந்து , அருளமுதம் உண்டு, பூரண அருள் அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட முதல் பேரான்மாவாகிய நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவுள்ளத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருளால் உணர்த்திடவும் , அதன்மூலம் அதன் முழுப்பயனையும் அனுபவித்து அடைந்த நமது பெருமானார் ,
  தனிபெருங்கருணையோடு இவ்வுலகவர்களும் அந்தப் பேரின்ப பெரும்பலனை அடையவேண்டும் என்று நமக்கும் வெளிப்படுத்தி ,
நாமும் பேரின்ப பெருவாழ்வை பெற்று அனுபவித்திட வேண்டும் என்று பெருந்தயவோட அருளியுள்ளார்கள்;

நாம் அனைவரும் நாளும் மகாமந்திரத்தை வாயால் உச்சரித்தும் மனத்தால் நினைத்தும்
கையால் எழுதியும் சன்மார்க்கத்தில் பெறுவாழ்வுபெறுவோம்🌺🔥🙏
.......நன்றி🔥🙏
....எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !🔥🙏
....வள்ளல் மலரடி வாழ்க வாழ்க !🔥🙏
....பெருமான் துணையில்🔥🙏
...வள்ளல் அடிமை 🔥🙏
...வடலூர் இரமேஷ்.

Wednesday, April 10, 2019

[vallalargroups:6091] பால் சைவமா அசைவமா.

ஐயா வணக்கம் 
பால் சைவமா அசைவமா.

ஐயா ஒரு கம்பெனியில் வேலை செய்யும் மேனேஜருக்கும் 
லேபருக்கும் ஒரே சட்டம் இல்லையே ஒரே சம்பலமில்லையே.
அதுபோல


ஒரு அடுக்கு மாடியில் குடியிருப்பவர்கள் 


தரையில் நடக்கிறவர் தவறி விழுகிறார்

முதல் மாடியிலிருந்து தவறி விழுகிறார்

2வது
3வது
4வது
5வது
6வது மாடியிலிருந்து இப்படியாக தவறி விழுகிறார் என வைத்துக்கொள்வோம்.

இதில் பாதிப்பு எல்லோருக்கும் ஒரே மாதிரியா வெவ்வேறா

நீங்களே கூறுங்கள் ஐயா.

அதுபோலத்தான் 
சமய சன்மார்க்கி
சுத்த சன்மார்க்கி
இல்லறத்தார்
பிரம்மசாரி
அகவினத்தார் 
புறவினத்தார்
விபூதி வைக்கிற சன்மார்க்கி 
வைக்காத சன்மார்க்கி

பெருமான் உருவத்தை வணங்கிற சன்மார்க்கி
வணங்காத சன்மார்க்கி

5ம் திருமுறை படிக்கிற சன்மார்க்கி 
5ம் திருமுறை தொடாத சன்மார்க்கி

இப்படி இவ்வளோ பெரிய அடுக்குமாடி சன்மார்க்கிகளில் பால் குடித்தலின் சட்டமும் 
தண்டனையும் மாறுமா மாறாதா ஐயா.

அழுத பிள்ளைக்கு அன்னை பால் உணவளிப்பால்

28வயசு பிள்ளைக்கு கூடவ 
தாய் தனது பாலை கொடுக்கிறாள்.

உன் தாயே கொடுக்காத பாலை
பசு கொடுத்தே ஆக வேண்டும் என்பது ஜீவகாருண்யமா ஐயா.

பால் கரக்கவில்லை யென்றால் மடி வலிக்கும் உண்மைதான் 
ஆனால் 3/4லிட்  11/2லிட்டர் மட்டுமே கரக்கும் பசுமாட்டை 20லிட்   15லிட்டர் பால் சுரக்க தீவனத்தை அதுவா கேட்டது .

இப்ப நீங்க வைத்துள்ளது பசுவே இல்ல இது பன்னி .
ஜீன் கொலாப்ரேஷன்.

சென்னாகுன்னி மீன் பவுடர் சேர்த்த தீவனம் போட்டா 2லிட் கரக்கிற மாடுகூட 
20லிட் கரக்குமா 
இந்த பால்தான் மார்க்கெட்டில் உலாவுது.

பசு அதுங்கன்று குட்டிக்கே 
1வருடத்திற்குதான் பால் குடுக்குது.
அப்புரம் போனா எட்டி உதைக்குது
ஆனால் நீங்க புறந்ததிலிருந்து சாகற வரைக்கும் நான் பாலை குடிப்பேன்னு அடம்புடிச்சா 
குழந்தையிலிருந்து எப்ப வளர போறீங்க 

ஏன் தமிழ்  பால்
தேங்காய்  பால் 
சோயா  பால்
கரிசாலை பால்
அன்  பால்
தமிழ்  தேன் 
நினைத்  தேன்
உணர்ந  தேன் இதெல்லாம் அருந்தலாம் அல்லவா 

தயவை விருத்தி செய்ய தடையாக உள்ள எதையும் விட்டு வெளியேறிவரெல்லாம் சுத்த சன்மார்க்கி என்கிறார்கள் .
 
ஐயம் நீக்குங்கள் ஐயா.

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)