Saturday, September 30, 2017

[vallalargroups:5726] Vallalar Program @ Malaysia |8 oct 2017

VALLALAR AVATAR DAY CELEBRATION IN MALAYSIA @KALAMANDABAM, BRICKFIELD
KUALA LUMPUR

மலேசியாவில் திருஅருடபிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினவிழா
8TH October Sunday,7.30am - 6.00pm

திருஅருட்பா இசைக்கச்சோ்ி
Thiruarutpa music program

அறிஞர் பெருமக்களின் சன்மார்க்க,
ஆன்மிக அருளுரை
அனைவரும் வருக,அருள்நலம் பெறுக

Please contact
Arutperoli samuganala samarasa peravai
அருட்பேரொளி சமூகநலப் சமரசப்பேரவை
+60 12-565 4441

[vallalargroups:5726] Oct 1 Vallalar Programs List & Details

Thursday, September 28, 2017

[vallalargroups:5725] படித்தேன் பொய் உலகியல் நூல்

அருட்பெருஞ்ஜோதி 
அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை 
அருட்பெருஞ்ஜோதி 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...

படித்தேன் பொய் உலகியல் நூல் எந்தாய்
நீயே படிப்பித்தாய் அன்றியும்
அப்படிப்பில் இச்சை ஒடித்தேன் நான் ஒடித்தேனோ ஒடிப்பித்தாய் பின் உன்னடியே துணையென நான் உறுதியாகப் பிடித்தேன் மற்றதுவும் நீ பிடிப்பித்தாய் இப்பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல நடித்தேன் எம்பெருமான் ஈதொன்றும் நானே நடித்தேனோ அல்லது நீ நடிப்பித்தாயோ...

[vallalargroups:5722] Vallalar Program 2 @ singapore (NEAR TO SIVAN Temple)

Invitation Attached

[vallalargroups:5722] Vallalar Program 3 # Singapore Hindu Saba .. 5 Oct 2017

Vallalar Program 3 # Singapore Hindu Saba .. 5 Oct 2017, Invitation attached

[vallalargroups:5722] Vallalar Program @Singapore..1.10.17, Sunday

Arut Perunjothi
In conjunction with the 195th year of Saint Vallalaar's arrival, we are privileged to have Sadhus from our Thiruannamalai Sangam conduct special Satsang & Prarthana. All are welcome to join in
🌺 Thiru Arutpa Parayanam
🌺 Satsang 
🌺 Jothi Prayers & Meditation
Date : 1.10.17, Sunday
Time : 9.00am - 1.00pm (lunch) 
Venue : Singapore Tamil Teachers' Union
394 Race Course Rd
Singapore 218649
Nearest Mrt : Farrer Park 
Contact 
98539792
83038964
93886324
Come join us with your family & friends 
Arut Perunjothi 🙏🏼

Monday, September 25, 2017

[vallalargroups:5720] Athur vallalar Birthday celebration 8 Oct 17 sunday

[vallalargroups:5719] சற்குரு யார்? Vallalar Answer

இன்புற்று வாழ்க.

"சார் உலக வாதனையை தவிர்த்தவர் உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்து அருளும் உத்தம சற்குருவை.."

"மாமணி மன்றிலே ஞான சுந்தர வடிவ ஜோதியாய் விளங்கும் சுத்த சன்மார்க்க சற்குருவே..."

 ..வள்ளலார்

Sunday, September 24, 2017

[vallalargroups:5718] பசி போக்குதலே உண்மை வழிபாடு

[vallalargroups:5717] பசித்திரு..தனித்திரு..விழித்திரு

பசித்திரு
தேகம் நீடிக்க அளவோடு உண்ணல் , சுத்த ஆகாரத்தை பசித்த போது கொள்ளல் .
அமுதமாயினும் அதிகம்
புசியாதிருத்தல் . ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக்  கொள்ளுதலே பசித்திருத்தல் - முழுமை சித்தி அடையும்வரையில்
ஆன்மப் பசியுடன் இருத்தல் ஆகும்.

தனித்திரு :
ஆசாபாசங்களில் அறிவை அழுந்த
விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக்கொண்டிருத்தல் , எவ்வித
கூட்டுறவுகளில் கலந்திருந்த
போதிலும் சீவன் பரமனை பற்றி
இருத்தலே தனித்திருத்தல் - மனம்
தனித்து அமைதி நிலையில் இருத்தல்
ஆகும்.

விழித்திரு :
மனம் , புத்தி ,சித்தம் ,அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன்முயற்சியில் ஈடுபடுத்தி பொய் ,
பொறாமை, காமம் , குரோதம் , லோபம் , மோகம், மதம், மாச்சரியம் முதலான  துவேச உணர்வுகளிலிருந்து
தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் -
விழித்திருத்தல் எனப்பெறும் அறிவுடன் இருத்தல் ஆகும் .



' வள்ளல் பெருமான்' இராமலிங்க அடிகள்
🌞🔥🌝🌞🔥🌝🌞🔥🌝🌞🔥🌝

[vallalargroups:5715] அமுதக்காற்று -விஷக்காற்று

[vallalargroups:5715] அமுதக்காற்று

இன்புற்று வாழ்க

அமுதக்  காற்றின் வியாபகத்தின் போது 

இந்திரிய அடக்கம், 
மனநெகிழ்ச்சி,
ஈசுர பக்தி,
அறிவு விளக்கம்,
தாங்கள் அறியாத  கடவுள் விளக்கம்
 

உண்டாகும்.

...வள்ளலார்.

Saturday, September 23, 2017

[vallalargroups:5714] International Vallalar Conference @ Chennai

International Vallalar Conference @ Chennai

Oct 5 and oct 6

Invitation attached

Tamilnadu CM attending international danmark la conference @ Chennai

[vallalargroups:5713] இறையவர் யார்?

*இன்புற்று வாழ்க*

*"எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும்பெருஞ்ஜோதியரே இறைவர் "*    

- *திருஅருட்பிரகாசவள்ளலார்*

Thursday, September 21, 2017

இரக்கம் காட்டுங்கள் Part2


இரக்கம் காட்டுங்கள் P1


[vallalargroups:5710] எது நமக்கு பேரிழப்பு?

ஓம் திருமூல தேவாய நம

எது நமக்கு பேரிழப்பு?

பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிரானிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேரிழந்தாரே 

                            ...திருமந்திரம்

Tuesday, September 19, 2017

[vallalargroups:5709] ஜீவகாருண்யத்தின் லட்சியம்

ஜீவகாருண்யத்தின் லட்சியம்::

ஊழ்வகையாலும் அஜாக்கிரதையாலும் பசி கொலை    யென்பவைகளால் வரும் அபாயங்களை நிவர்த்தி செய்துகொள்ளத் தக்க அறிவும் சுதந்தரமுமில்லாத சீவர்கள் விஷயத்தில் அவைகளை நிவர்த்தி செய்விக்கத்தக்க அறிவும் சுதந்திரமுள்ள சீவர்கள் வஞ்சியாமல் தயவினால் நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியத்திற்கு முக்கியமான லட்சியம்.


Monday, September 18, 2017

[vallalargroups:5708] Sanmarkkam Book Release 2 Volumes

Sanmarkkam Book Release 2 Volumes

It's written by siddhanatha expert prof.Rathinasabapathy.

For more details please check invitation

[vallalargroups:5707] கடவுள் ஆணை

இன்புற்று வாழ்க 

எல்லா உயிர்களிடத்தும் சீவ காருணியம் வேண்டுமென்று கடவுளால் ஆணை செய்ததென்று அறியவேண்டும்.

..வள்ளலார்

Thursday, September 14, 2017

[vallalargroups:5703] ஒரு சீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுதல் ..முழு விரோதம்

இன்புற்று வாழ்க

ஒரு சீவனைக் கொன்று ஒரு சீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுதல் சீவகாருணிய ஒழுக்கமே யல்லவென்றும், கடவுள் சம்மதமும் அல்லவென்றும், இவைகட்கு முழு விரோதமென்றும் அறியவேண்டும

ஜோதி இராமலிங்கம்

[vallalargroups:5702] உலக சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாடு - மே 2018

Wednesday, September 13, 2017

[vallalargroups:5701] பசிவேதனை

இன்புற்று வாழ்க

நரக வேதனை, சனனவேதனை, மரண வேதனை என்கின்ற மூன்று வேதனைகளுங் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை

..சிதம்பரம் இராமலிங்கம்

Tuesday, September 12, 2017

[vallalargroups:5700] செல்வத்தின் தன்மை

இராமலிங்காய நம

·         சடமாகி ,
·         இன்பம் தராதாகி ,
·         மிகுபெருஞ் சஞ்சலா காரமாகிச் ,
·         சற்றாகி ,
·         வெளிமயல் பற்றாகி ...

ஓடும்இத் தன்மைபெறு செல்வம் அந்தோ!!

§  விடமாகி ,
§  ஒருகபட நடமாகி ,
§  யாற்றிடை விரைந்துசெலும் வெள்ளம்ஆகி,
§  வேலை அலையாகி,
§  ஆங் காரவலையாகி,
§  முதிர் வேனில் உறு மேகம் ஆகிக் ,
§  கடமாய சகடமுறு காலாகி ,
§  நீடுவாய்க் காலோடும் நீராகியே ....

கற்பிலா மகளிர்போல் பொற்பிலா துழலும் இது கருதாத வகை அருளுவாய்    

தடமேவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே

[vallalargroups:5699] வள்ளலார் பொன்மொழிகள்

இன்புற்று வாழ்க

"காலையிலே என்றனுக்கே கிடைத்தப் பெரும் பொருளே..".       

இராமலிங்க சுவாமிகள்

Monday, September 11, 2017

[vallalargroups:5698] சீவகாருணியம் .. கடவுள் விளக்கம்

  1. சீவகாருணியம் ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம்.இயற்கைவிளக்கமில்லாத சீவர்களுக்குக் கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது.

Sunday, September 10, 2017

[vallalargroups:5697] "மேலான விரதம்" ... வள்ளலார்

ஜீவகாருண்யம் 

"பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற சீவகாருண்ய ஒழுக்கமே மேலான விரதம்" ... வள்ளலார்

Saturday, September 9, 2017

[vallalargroups:5696] ஜீவகாருண்யம் வாசகம் .. 1

 கடவுள் அருளாக்கினைக்குச் சீவர்களிடத்துச் சீவர்கள் காருணியம் வைப்பதே சம்மதவென்று உண்மையாக அறியவேண்டும்.

Wednesday, September 6, 2017

[vallalargroups:5691] தொண்டு செய்ய பணம் வேண்டுமா? வள்ளலார் வாக்கு

[vallalargroups:5690] Saturday and sunday சன்மார்க்க ஆய்வரங்கம்

வணக்கம். பெண்ணாடம் வள்ளலார் அறநிலையத்தில் 09/10/17  சனிக்கிழமை சன்மார்க்க ஆய்வரங்கம் _  சார்பியல் துறையில் திரு பாண்டுரங்கன் ஐயா அவர்களின் இரண்டாவது வகுப்பும், அன்று மாலை 6மணியிலிருந்து 10/10/17 ஞாயிறு மாலை 5மணி வரை 
தயவு இராம பாண்டுரங்கன் ஐயாவும்  தயவு இராஜேஸ்வரி அம்மையும் தயவு கோவை ராமலிங்கம் ஐயாவும் இணைந்து வாழ்வியல்  முகாம் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பார்கள்.  தாங்கள் இதில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் நன்றி!

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)