Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts , Vallalar Education ,Vallalar Study Material , Vallalar MP3 Speeches , Vallalar DVD , Vallalar Books,Vallalar Functions - Information Sharing etc
Friday, April 28, 2017
[vallalargroups:5649] Health Tips பிரண்டை
Thursday, April 27, 2017
Wednesday, April 26, 2017
[vallalargroups:5646] குப்பைமேனி மூலிகை
தாவரப்பெயர் :- ACALYPHA INDICA.
குடும்பம் :- EUPHORBIACEAE.
மூலிகை என்றால் காடுகளில் மட்டும் கிடைக்கக் கூடியது என்று நாம் நினைப்போம், ஆனால் அப்படி அல்ல, மூலிகைகள் காடுகள் தவிர நமது வீட்டருகே, சாலை ஓரங்களில், தோட்டங்களில், வயல் வரப்புகளில் என்று ஏராளமாக வளர்கின்றன, நாம் களைகள் [வேண்டாத செடிகள்] என்று ஒதுக்கும் புல், செடி, கொடிகள் அனைத்திலும் ஏதாவது ஒரு மருத்துவத் தன்மை இருக்கும், அவற்றில் சிலவற்றை கற்ப்பக மூலிகைகள் என கூறுவார்கள். அதில் ஒன்று தான் குப்பைமேனி மூலிகை. குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்த குறுஞ்செடி இது சுமார் 50 செ.மீ. உயரம் வளர கூடியது.
இது இந்தியாவில் அநேக இடங்களில் காணப்படும் செடி, இதன் இலை பச்சை நிறத்தில் முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகு அளவில் பச்சையாக இருக்கும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும்.
மருத்துவ குணங்கள் :
தோல் நோய் நீக்கும் குப்பைமேனி........................
- குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வர சிரங்கு மற்றும் உடல் அரிப்பு நீங்கி சருமம் பொலிவுபெறும்.
- குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண்கள் மீது வைத்து கட்டினால் எந்த வகையான புண்ணும் குணமாகும் மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.
- குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்து வர சொறி, சிரங்கு, படை குணமடையும்.
- குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
- பெண்கள் குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி (Facial) வந்தால் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் காணாமல் போகும் முகமும் அழகும் பெறும்.
- பெண்கள் சிலருக்கு மேல் உதட்டில் ரோமம் முளைத்து இருக்கும் அவர்கள் குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை மாவு போல் அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மீசை இருக்கும் பகுதியில் இரு வாரங்கள் பூசி வந்தால், முடி உதிர்ந்து முகம் பளிச்சிடும்.
- குப்பைமேனி இலையை கடாயில் போட்டு விளக்கெண்ணெய் அல்லது ஆமணக்கெண்ணையில் வதக்கி இளம் சூட்டில் படுக்கைப் புண் உள்ள இடத்தில் வைத்து கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.
- குப்பை மேனி இலையுடன் மஞ்சள், வெள்ளைப் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து முகப்பரு, கரும் புள்ளிகள் மீது தடவி வர முகம் முன்பு இருந்த இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
- குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 1/2 ஸ்பூன் அளவு தேனில் அல்லது மிதமான வெந்நீரில் கலந்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுப் புழுக்கள், குடல்ப் புழுக்கள் வெளியேறும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
- குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. அளவு பெரியவர்கள் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.
- குப்பைமேனி இலையை கடாயில் போட்டு ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கி ஒரு மண்டலம் (48 நாட்கள்) உண்டு வந்தால் வாயுப்பிடிப்பு நீங்கும், குடல் புழுக்கள் வெளியேறும். மூல நோயின் தாக்கம் குறையும், சரும நோய்கள் அகலும், சுவாச நோய்கள் நீங்கி உடலும் ஆரோக்கியம் பெறும்.
- குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லி ஆகும் வரை சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும். 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்குப் பாதியளவு கொடுக்கவும்.
- 10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற விஷநீர் மற்றும் கிருமிகள் வெளியேறும்.
- குப்பை மேனிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு கழுவி சிறு துண்டுகளாக வெட்டி சுக்கு, வெள்ளைப்பூண்டு, சீரகம் சேர்த்துக் கஷாயமாக பருக குடலிலுள்ள பூச்சிகள் அழியும்.
வலி நிவாரணம் பெற...............
- தலை பாரத்தால் ஏற்பட்ட தலைவலி குணம் பெற குப்பைமேனி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து நன்றாக சலித்து வைத்து அந்த பொடியை மூக்கில் பொடி போல் இழுக்க நீர் வடிந்து தலைபாரம் உடனே குணமடையும். இதனை நசியமிடுதல் என்பர்.
- குப்பைமேனி இலையை கடாயில் போட்டு ஆமணக்கு எண்ணெயில் வதக்கி இளஞ் சூட்டுடன் மூட்டு வீக்கம் உள்ள பகுதியில் வைத்து கட்டினால் வீக்கம் குறையும், வாத வலி உள்ள பகுதியில் வைத்து கட்டினால் வாத வலி தீரும்.
- குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.
- குப்பைமேனி இலைச்சாற்றுடன் சம அளவு உப்பைக்கரைத்து அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சினால் உப்பு மட்டும் மிகுந்து விடும் இந்த உப்பை 5 கிராம் அளவில் தினசரி இரு வேளை சாப்பிட்டு வர வாயு, அஜிரணம் மற்றும் வயிற்று வலிக்கு சிறந்த மருந்து.
பூச்சி கடி விஷக்கடிக்கு..............
- குப்பை மேனி இலையை மை போல் அரைத்து வண்டு, தேள், பூரான், பாம்பு, வெறிநாய்க்கடி மற்றும் எலிக்கடியின் கடிபட்ட இடத்தில் பத்து போட விஷம் முறியும்.
- குப்பைமேனி இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு சேர்த்து குழைத்து பூசினால் படர்த்தாமரை, சொறி, பூச்சிக்கடி, காணாக்கடி (என்ன கடித்தது என்று தெரியாத போது) முதலியவை குணமாகும். மேகப்புண்ணும் (பிறப்புறுப்புகளில், மலக்குடல், வாய் அல்லது விரல்களில் வலியற்ற புண்) குணமடையும் .
- குப்பைமேனி வேரை அரைத்து 5 கிராம் எடுத்து 3 நாளுக்கு 3 வேளை சாப்பிட எல்லா வகையான கடியின் விஷமும் முறியும். இந்த சமயத்தில் வாந்தியும் பேதியும் உண்டாக்கும். (உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்)
மலச் சிக்கல், மூலம், பவுத்திர நோய்களுக்கு குப்பைமேனி சிறந்த மருந்தாகும்.
- குப்பைமேனி இலையை அல்லது வேரை கைப்பிடியளவு எடுத்து சீரகம் சேர்த்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி கஷாயம் செய்து குடித்தால் மலச் சிக்கல் அகலும்.
- குப்பைமேனி சமூலத்தை (சமூலம் என்றால் இலை, தண்டு, பூ, காய், வேர் என அனைத்தும் சேர்ந்தது எனப் பொருள்) எடுத்து பொடியாக்கி நெய்யில் கிளறி லேகியமாக்கி வைத்துக்கொண்டு ஒரு மண்டலம் உண்டு வந்தால் எட்டு விதமான பவுத்திர நோய் தீரும்.
- குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.
- மூலநோய் ஒரு சிக்கலான நோய். அறுவை செய்தாலும் வளரும். மூலத்திற்குக் குப்பைமேனி சிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் (பொடி) செய்து இதில் 2 – 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும் குணமாகும். மோரில் கலந்தும் சாப்பிடலாம். புளிகாரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.
சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் கோழைச் சளி..........................
- குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து (வாந்தி அல்லது பேதியாக) கோழையை அகற்றும், இருமலைக் கட்டுப்படுத்தும், ஆஸ்துமாவை குணப்படுத்தும். வயிற்றுப் புழுவைக் கொல்லும்.
- குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும்.
- கும்பைமேனி இலைச் சாற்றை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் குணமாகும்.
- ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை மூன்று நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும்.
- குப்பைமேனி இலைச்சாற்றை 4 தேக்கரண்டி வீதம் 7 நாட்கள் கொடுத்து வர சுவாச நோய்கள் குணமாகும்.
சில பொதுவான மருத்துவ குணங்கள்..........
- குப்பைமேனி, முருங்கைக்கீரை இரண்டையும் நல்லெண்ணையில் வதக்கி வேறு எதுவும் சேர்க்காமல் காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்டால் உடல் எடை குறைவது நன்றாக தெரியும்.
- குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் வாதம், நரம்பு பலவீனம், உடல் மதமதப்பு, கை, கால் மதமதப்பு போன்றவை நீங்கும். சித்த பிரமை குணமடைய வாய்ப்பு உண்டு. .
குப்பைமேனி செடிகளை குப்பையென எறியாமல் தேவைக்கேற்ப பயன்படுத்தி நலம் பெறுவோம்.
Tuesday, April 25, 2017
[vallalargroups:5645] Today Health Tips Puliyarai -புளியாரை
Chutney - Creeping Wood Sorrel Chutney/ Relish
Creeping Wood Sorrel (Indian Sorrel) Relish
Herbs rich in nutritional and medicinal properties flourished in home gardens long time ago. Some were made into chutneys, some other keerais were cooked along with lentils. Some were used in the making of hair oil and bath powders at home. Be it cough, cold, digestive upsets, skin rashes, bumps, swellings, open wounds or any other malady there was always a herb in the garden which came in handy to alleviate the symptom. All these wonderful herbs / weeds are vanishing gradually from our urban spaces, thanks to the vertical growth of residential spaces. Useful medicinal weeds do not have a place in the modern landscapes where the focus is mostly on green lawns and ornamental plants. On the other hand it is heartening to know that many youngsters have taken to growing herbs organically in pots.Gardens of medicinal plants (Moolikai Vanams) have sprung up in many urban areas to conserve the treasure of endemic plants and herbs. An interest to learn about grandma's medicine using native herbs is also gradually catching up.
[vallalargroups:5644] திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவு
Saturday, April 22, 2017
Friday, April 21, 2017
[vallalargroups:5642] சைவம் vs அசைவம்
[vallalargroups:5641] வள்ளலாரின் வாழ்வியல் பயிற்சி
அன்பர்களே,
"வள்ளலாரின் வாழ்வியல் பயிற்சி" கொடுக்கப்படுகின்றது.
அனுமதி இலவசம்
தகுதி : சைவ பழக்கத்தை உடையவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். .
நேரம் : 28/29/30 Apr 2017 4.00am மணி முதல் 10.00pm மணி வரை.(3days)பயிற்சிகள்:
1. ஆலம் விழுது கொண்டு "பல் துலக்குதல்".
2. கரிசாலை கொண்டு "வழலை கழற்றல்".
3. கரிசாலை, தூதுவளை, முசுமுசுக்கை , சீரகம் கலந்த "பானம் தயாரித்தல் & அருந்துதல்"
4. சிறிது நேரம் "இறைவனை துதித்தல்".
5. "காலை ஆகாரம்" எடுத்தல். ( ரஸ்தாளி வாழைப்பழம் + நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிடுதல்)
6. "பஞ்சக் கற்பம்" கொண்டு , சுடுனீரில் நீராடல்.
7. கரிசாலை + நல்லெண்ய் கொண்டு "தைலம் தயாரித்தல்".( செய்முறை விளக்கம்)
Place ::: Trichy,Near to srirangam
[vallalargroups:5640] சித்திரை 8 இன்று அகவல் எழுதிய நாள்
Thursday, April 20, 2017
[vallalargroups:5638] 150 years people living now..
[vallalargroups:5637] Today Health Tips பித்தப்பை கல் எளிதில் நீங்க வழிகள்
Wednesday, April 19, 2017
[vallalargroups:5635] அகவல் எழுதிய நாள்
[vallalargroups:5634] Vallalar Health Tips ::: கெட்டி மளகு availability
Re: [vallalargroups:5633] 2mins Health Tips for summer
*உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..*இந்த செய்தியை நீங்கள் படிப்பது மட்டுமின்றி உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும் பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது.இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் உபாதைகள் ஏற்ப்படுகிறது. இதனை சரி செய்ய நம் சித்தர்கள் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.*தேவையான பொருள்கள் :*1.நல்லெண்ணெய்2.பூண்டு3.மிளகு*செய்முறை:*நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். *சூடு ஆறினதும் எண்ணையை இரு கால்களின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.*இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்._*2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது*_ சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம். மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.இதனை I.T துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.
Tuesday, April 18, 2017
[vallalargroups:5631] 2mins Health Tips for summer
Re: [vallalargroups:5632] vallalar matrimony for vallalar followers
Thanks,
With Best Regards,
R.Chitrambalam.
India
+91 73583 24082
Nigeria
+234 811 219 2193
From: Vallalar Groups <vallalargroups@gmail.com>
Sent: Tue, 18 Apr 2017 10:22:00
To: Vallalar Groups <vallalargroups@googlegroups.com>
Subject: [vallalargroups:5630] vallalar matrimony for vallalar followers
[vallalargroups:5630] vallalar matrimony for vallalar followers
Thursday, April 13, 2017
[vallalargroups:5629] Two New Dharumasalai at Ginji
Donations are Exempted under 80G of Income Tax Act.
The details are:-
Cheque in favour of "Deepam Trust"
Address : No.30 Droupathi Amman Koil Street,(Next to Mosque), Velachery, Chennai 42
For Money Transfer:
Current Account No.: 30265475129, State Bank of Indian, IIT Madras Branch
Connect with DEEPAM TRUST:
Join us Volunteer : Click here
Visit Deepam Trust WEBSITE: http://www.deep
Like Deepam Trust on FACEBOOK: Click here
Follow Deepam Trust TWITTER: deepamtrustngo
SUBSCRIBE Our YouTube Channel: Click here
Read DEEPANERI Monthly Magazine online: Click here
We send this mail only to our Deepam Donors. If others receive, please ignore or unsubscribe.
Wednesday, April 12, 2017
Tuesday, April 11, 2017
Friday, April 7, 2017
[vallalargroups:5627] Download ThiruArutpa Full Urainadai Audio book in a single click - Free of cost
Dear All,
We are pleasure to announce, Now you can download Full ThiruArutpa Urainadai Audio book in a single click.
File Size: 1.3 GB
File ForMat: ZIP ( Once You download it, You have to Unzip the file at first time)
Full Download Link:
For Individula Download:
http://www.vallalarspace.org/space/list/769
or
http://sanmarkkam.com/urainadaipakudhi-audio-mp3/
For help : 07411275938
Share this to All Via WatsApp, FaceBook and other Medias.
==========================================================
திருஅருட்பா உரைநடை பகுதி ஒலி நூல் முழுவதும் பதிவிறக்கம் செய்ய
இங்கே சொடுக்கவும்
50 மணி நேரம் தொடர்ந்து ஒலிக்க கூடியது 1.5 ஜி.பி நினைவகம் தேவை
தனிப் பதிவிறக்கம் (ஓவ்வொரு பகுதியாக) இங்கே சொடுக்கவும்
http://www.vallalarspace.org/space/list/769
or
http://sanmarkkam.com/urainadaipakudhi-audio-mp3/
முழு பதிவிறக்கம் (ஒலி நூல் முழவதும்) இங்கே சொடுக்கவும்
முழுபகுதியும் ஜிப் ஃபைல் வடிவத்தில் உள்ளது, பதிவிறக்கம் செய்த பின் ஒருமுறை மட்டும் அன்ஜிப் செய்ய வேண்டும்.
மேலும் விவரம் வேண்டுவோர் தொடர்பு கொள்க : 07411275938
Thanks.
--
Popular Posts
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
The Master "The Master is the one who removes the darkness of the consiousness and illuminate them, as the sun in the physical sky remo...
-
🙏🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥💧🔥🔥🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🔥🌺 *அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தின் ...
-
G etting goosebumps while listening to Raja's Thiruvasagam is nothing uncommon, but the following real life incident gave me goosebu...
-
Sir forgive me for typing in english i do not have the tamil font in Ema sithi Suriya kalaiyil swasipathan moolam ayul perugum endrum chandi...
-
Dear Sir, It has been my issue with sutha sanmargis too. what is the exact practice they are following. if Mr.sayee says Dindigul sami's...
-
Blessed Immortal Soul, To get Arul, we need his ARUL. Manivasagaperumon in his Shivapuranam says " AVAN ARULAL AVAN THAZH VANANGI...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...