Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts , Vallalar Education ,Vallalar Study Material , Vallalar MP3 Speeches , Vallalar DVD , Vallalar Books,Vallalar Functions - Information Sharing etc
ஜீவனும் ஆன்மாவும் பாகம் 2
அருள் தடித்த அளவு
போதம் இளைக்கும்
போதம் தடித்த அளவு
அருள் இளைக்கும்
விதையும் செடியும்
ஒரே நேரத்தில் உயிர் வாழ முடியாது போல்
விதையின் மரணம்
செடியின் உதயம் போல்
ஜீவனின் மரணம்
ஆன்மாவின் உதயம்
சந்திரனின் அஸ்தமனம்
சூரியனின் உதயம்
ஜீவன் இருந்தால்
ஆன்மா இல்லை
ஆன்மா இருந்தால்
ஜீவன் இல்லை
இது தான் ஜீவன் முக்தி
சந்திரன் நாளும் தேய்ந்து வருதல்
ஜீவன் மரணத்திற்கு சமமாகும்
பின் நாளும் வளர்ந்து
வானில் முழு மதியாதல்
ஆன்மா உதயத்திற்கு சமமாகும்
சிதாகாசத்தில் பூரண மதி உதயமானால்
என்றும் பதினாறு தான் நம் வயது
இளமை மாறா தேகம் சித்திக்கும்
வல்வினைகள் இல்லை - நமனும் இல்லை
சாகாமல் இருக்கலுமாமே
வெங்கடேஷ்
ஜீவனும் ஆன்மாவும்
1.ஜீவன் : மாயை வசப்பட்டுள்ளதால் , எப்பொழுதும் பயத்துடனே இருக்கும் - ஐம்புலன்களுடன் சம்பந்தப்பட்டு , சதா அசைந்து கொண்டே இருக்கும்
ஆன்மா : மாயை இலையாகையால், பயம் என்பதே கிடையாது - ஐம்புலன்களுடன் சம்பந்தப்படாது , தனியாக இருப்பதால் ( தனிக்குமரி ) அசைவற்று நிற்கும்
2. ஜீவன் : தத்துவங்கள் நடுவே இருக்கும்
ஆன்மா : 36 தத்துவங்களைக் கடந்து , தனியாக நிற்கும் - சாமானியர் யாரும் ஏறா நிலை அது - மிகவும் கஷ்டப்பட்டு ஏறக்கூடிய நிலை அது
3. ஜீவன் : பசி, தாகம், நித்திரை, காமம், நோய் , வினை ஆகியவற்றுக்கு உட்பட்டு , முடிவில் இறந்துவிடும்
ஆன்மா : பசி, தாகம், நித்திரை, காமம், நோய், வினை போன்றவை மாயை சம்பந்தப்பட்டது ஆகையால், இவைகளெல்லாம் , ஆன்மாவிற்கு கிடையவே கிடையாது
4. ஜீவன் : மண்ணாசை- பொன்னாசை - பெண்ணாசை உண்டு
ஆன்மா : இயற்கையிலேயே எந்த ஆசையும் இல்லாமலே இருக்கும் - அதன் இயற்கை குணம் தயை -அதனால் " தயவு " என்பது ஆன்மாவைக் குறிக்க வந்த சொல்லாகும்
5. ஜீவன் : எப்பொழுதும் இருமையில் இருக்கும் -
இரவு - பகல்
இன்பம் - துன்பம்
வெப்பம் - குளிர்
நன்மை - தீமை
வேண்டும் - வேண்டாம்
பாவம் - புண்ணியம்
அதனால் எப்பொழுதும் துன்பத்திலேயே உழன்று கொண்டிருக்கும்
ஆன்மா : இரண்டும் " சமம் " என்ற பாவனையில் எப்பொழுதும் " ஒருமையில் " இருக்கும்
இதனைத்தான் - வடமொழியில் - " ஸ்திதப்ரக்ஞன் - சம நோக்கு கொண்டவன்" என்று பொருள் பட கூறுகின்றனர்
6. ஜீவன் : மாயை - கன்மம் ஆகிய இரு மலம் உண்டு
ஆன்மா : ஆணவம் என்கின்ற ஒரு மலம் மட்டும் உண்டு
வெங்கடேஷ்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி