ஆன்ம நேய அன்புடையீர் அனைவருக்கும் வணக்கம் ,
சன்மார்க்க அன்பர்கள் மத்தியில் பல சந்தேகங்கள் இருந்துக்கொண்டு
வருகிறது .
வள்ளலார் படத்தை வழிபடலாமா,வணங்கலாமா என்ற குழப்பம்
இருந்து கொண்டே இருக்கிறது ,
வள்ளலார் மரணத்தை வென்ற மகான் ஞான தேகம் பெற்றவர் ,
ஞானதேகம் என்பது ஒளிஉடம்பு ,ஒளிக்கு உருவம் கிடையாது,
ஊணுடம்பேஒளி உடம்பாய் ஓங்கிநிர்க்க ஞான அமுதம் நல்கிய
நாயகனே என்று வள்ளலார் கூறுகிறார் ,
வள்ளலார் அருட்பெரும்ஜோதியுடன்கலந்துவிட்டார், இப்பொழுது
வள்ளலார் ஒளி உடம்போடு உலாவிக்கொண்டு இருக்கிறார் .
அருட்பெரும்ஜோதிவேறு,வள்ளலார் வேறுஅல்ல,
அருட்பெரும்ஜோதியைவணங்கினால் வள்ளலாரை வணங்கியது போலாகும் ,
உருவவழிபாடு கூடாது என்பது வள்ளலார் கொள்கையாகும்,
தன்னை கடவுளாக நினைத்து வழிபடுவார்கள் என்றுநினைத்து,
மண்ணால்செய்த தன் உருவத்தை போட்டு உடைத்தார் .
பொன்னால் ஆகவேண்டிய உடம்பை மண்ணாக்கிவிட்டீகளே
என்று வருத்தபட்டார் வள்ளலார்.
கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஜோதி யாக இருக்கிறார்
அவரைத்தவிர வேறு எந்த உருவ வழிபாடும் கூடாது,என்பது
வள்ளலாரின் அழுத்தமான் கொள்கையாகும் .
ஆதலால் வள்ளலார் உருவப்படத்தை வணங்கவோ,வழிபடவோ
கூடாது.
அப்படியும் மீறி செயல்ப்பட்டால்வள்ளலார் கட்டளையை மீறிய
செயலாகும்.
நாம் இப்படி செய்வோம் என்று தெரிந்துகொண்டு வள்ளலார்
அருட்பாவில் தெளிவாக எழுதிவைத்துள்ளார் .நம்காலில்விழுந்து
வணங்கி கேட்டுக்கொள்கிறார் .
பாடல்கீழே;--
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாழ்வணங்கிச சாற்றுகிறேன் தயவினொடும்கேட்ப்பீர்
என்மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக்கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம் இறைவனையே தொழுவீர்
புன்மார்க்கதவர்போலே வேறு சில புகன்றே
ப்ந்திமயக்கடையாதீர் பூரண மெய்ச்சுகமாய்த்
தன்மார்க்க்மாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே
தன் ஆணை என்ஆணை சார்ந்து அறிமின் நீண்டே .
என்று வள்ளலார் தெளிவுபட தெரிவித்துள்ளார் .
இதையும் மீறி சன்மார்க்க அன்பர்கள் செயல்ப்பட்டால் ,
அவர்களுக்கு பக்குவம் வரவில்லை என்பதாகும் .
அனைத்தையும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்
கவனித்துகொல்வார் .
நன்றி ;--கதிர்வேல்
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment