Pages

Tuesday, June 22, 2010

[vallalargroups:3190] சன்மார்க்கத்தில் அன்னதானம் செய்ய கூடாது ?


அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, 

கோவில்கள், அன்ன தான கூடங்கள், மற்றும் பல இடங்களிலும் 
அன்ன தானமாக ஏழைகளுக்கு உணவு வழங்கப் படுகின்றது. 
நமது சன்மார்க்க சங்கங்களிலும் பசித்தவர்களுக்கு உணவு அளிக்கப் படுகிறது 
இரண்டிற்கும் என்ன வேறுபாடு ? 

அன்ன தானம் என்பது பலன் எதிர்பார்த்து 
அதாவது 
புண்ணியம் சேர வேண்டும் என்றோ 
செய்த பாவம் தீர வேண்டும் என்றோ 
பலன் எதிர் பார்த்து செய்யப் படுவது. 
தானம் என்றாலே பிரதி பலன் எதிர் பார்த்து செய்யப்படுவது. 

ஆனால் சன்மார்க்கம் என்பதின் முக்கிய படியே 
எல்லா உயிர்களையும் தானாக காண்கின்ற 
நிலையினை அடைவதுதான். 
ஆக 
பிற உயிர்கள் படுகின்ற துன்பம் அனைத்தும் 
தான் படுவதாக உணர்ந்து 
பிற ஜீவர்கள் உணவு இல்லாமல் துன்பப் படுவதை 
தான் உணவு இன்றி  துன்பப் படுவதாக நினைத்து 
பசித்தவர்களுக்கு உணவு அளிக்கப் படுகிறது. 

நாம் அனைவரும் ஒன்றான சிவத்திலிருந்து 
ஜீவர்கள் நிலைக்கு இந்த பூமிக்கு வந்தவர்கள். 
ஆகவே நாம் அனைவரும் சகோதர உரிமை உடையவர்கள். 
ஒரு சகோதரன் உணவு இன்றி துன்பப் படுவதை 
மற்ற சகோதரன் காண சகிக்க மாட்டான். 
அதுபோல் நமது சகோதர ஜீவன் உணவு இன்றி 
வருந்தும் போது நாம் சகோதர உரிமையின் காரணமாக 
எந்த பிரதி பலனையும் எதிர் பார்க்காமல் அதாவது 
பாவம் போக வேண்டும் என்றோ அல்லது 
புண்ணியம் சேர வேண்டும் என்று எதிர் பார்த்தோ 
உணவு அளிக்காமல், நிர்மல நிலையினை அடைகிறோம். 
அதாவது நிஷ்காமியம் - இரு வினையினை நீக்கி 
இறை உணர்வினை அடைவதற்கு அளிக்கப் படுகின்ற 
உணவே சன்மார்க்க சங்கங்களில் அளிக்கப் படுகின்றது.

ஆகவே சன்மார்க்க சங்கங்களில் அளிக்கப் படும் உணவு 

அன்னதானம் அல்ல. அது பசி ஆற்றுவித்தல் எனப்படும். 

அன்புடன் 
விழித்திரு ஆறுமுக அரசு 


--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com




--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment