Pages

Friday, July 25, 2014

[vallalargroups:5530] மழையும் அமுதமும்



மழையும் அமுதமும்

மழை : புற அமுதம் என்பது வள்ளல் பெருமான் வாக்கு.

இது மிகவும் தூய நீராகும். வானத்திலிருந்து நேரடியாக பூமியின் மேல் விழுவதால், அப்பழுக்கற்ற நீராகும். இது பெய்வதால் , நாடு நகரெல்லாம் செழிக்கும்.வளமும் சுபிக்ஷமும் பெருகும்.

இது உருவாகும் விதம் :

பருவ காலத்தில், காற்று அந்த திசையில் வீசும் போது, கடலில் இருக்கும் ஈரப்பதத்தை எடுத்துக் கொண்டு செல்கின்றது. அந்தக் காற்றானது மலையில் சென்று மோதுகிறது. அதனால் அது மேல் நோக்கி செல்கிறது. அங்கு நிலவும் தண்மையினால், அந்த நீராவி
அணுக்கள் சிதறி, மழைத் துளிகளாக பூமியின் மீது விழுகின்றது

உதாரணம் :

தென் மேற்கு பருவ மழை : காற்றானது கடலில் இருக்கும் ஈரப்பதத்தை எடுத்து, தென் மேற்கு தொடர்ச்சி மலை மீது மோதி, மேல் சென்று, பின் மழையாக பொழிகின்றது



அமுதம் : இது உயிரையும் உடலையும் காக்கும் மிக அற்புத அக மருந்தாகும்.

இது உருவாகும் விதம் :

தவம் செய்ய செய்ய, நம் உடலில் உஷ்ணம் அதிகமாக உண்டாகின்றது. அது சுழுமுனை நாடி வழியாக துவாதசாந்த வெளிக்கு மேல் சென்று, சுத்த உஷ்ணமாக மாறி, அங்கிருக்கும் தண்மையினால், அந்த அணுக்கள் சிதறி, அமுதத் துளிகளாக சாதகன்/யோகியின் உடல் முழுதும் பரவுகின்றது



வெங்கடேஷ்




--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


No comments:

Post a Comment