Pages

Friday, June 6, 2014

[vallalargroups:5468] திருச்சிற்றம்பலம் - ஆரம்பமும் முடிவும்

திருச்சிற்றம்பலம் - ஆரம்பமும் முடிவும்

பிழைப்பிற்காகவும் வேலை நிமித்தமாகவும்
வெளி நாட்டிற்குச் சென்று வாழ்ந்தாலும்
ஒருவன் மனம் எண்ணம் யாவும்
பெற்றோர், மனைவி, மக்கள்
உற்றார், உறவினர், நண்பர்
என உலா வருகின்றது

அது போல்
சிற்றம்பலத்திலிருந்து
புவியில் விழுந்த ஓர் அணு
தன் எண்ணம் செயல் யாவும்
திரும்பத் தான் வந்த இடத்திற்கு
செல்ல வேண்டும் என்று எண்ணாமல்

வீடு, மனைவி, வேலை
செல்வம் , சொந்தம் என்று
புலன் வழியே சென்று
மதி மயங்கி
உலக வாழ்வு மெய் என்று
அதன் பின்னாலேயே செல்லுதல் அழகோ ???

கற்ப வாழ்வு இருக்க
அற்ப வாழ்வுக்கு ஆசைப் படுதல் போலலவோ ???
திருச்சிற்றம்பலம் தான்
ஆரம்பமும் முடிவும்
முதலும் இறுதியும்
தோற்றமும் முடிவும்
 
 
 

எனவே தான் சித்தர்கள் - " வாலை " படத்திற்குள் கீழ் ஒரு பாம்பு தன் வாலை தன் வாயில் கவ்வி இருப்பது போன்று ஒரு ஓவியத்தை வரைந்திருப்பர்

உட்பொருள் : " வந்த இடத்திற்கே திரும்ப வேண்டும் "

" Going back to roots " என்று ஆங்கிலத்தில் கூறுவர்

பண்டைய மேற்கத்திய நாடுகளிலும், இந்த பாம்புச் சித்திரம் காணப் படுகின்றது - இதற்கு ஆங்கிலத்தில் " OUROBOROS " என்று பெயர்

நாம் எங்கிருந்து வந்தோமோ , அங்கேயே திரும்ப வேண்டும் என்பதை தெரியபடுத்தத் தான் , வள்ளலார் , தன்னுடைய ஒவ்வொரு பாடலிலும் " சிற்றம்பலம்" என்று ஆரம்பத்து , " சிற்றம்பலம் " என்றே முடிக்கின்றார்

சிற்றம்பலம் போய்ச் சேரும் வரை ஒரு ஆன்மாவின் பயணம் நிறைவு பெறாது - ஓயாது என்பது திண்ணம்

உலக வழக்கில் - பேச்சில் - " வந்தோமா - வந்த வேலையைப் பார்த்தோமா - போனோமா என்று இருக்க வேண்டும் " என்று வந்தது - ஆனால் நாம் எவ்வாறு இருக்கின்றோம் ???                                               

 
 
வெங்கடேஷ்



No comments:

Post a Comment