திருவடிப் புகழ்ச்சியும் பெருமையும்
முன்னுரை : எல்லா ஞானிகளும், ரிஷிகளும், திருவடியைப் புகழ்ந்து பாடியுள்ளனர்
தெய்வப் புலவர் வள்ளுவரும் " கடவுள் வாழ்த்து " என்னும் அதிகாரத்தில், திருவடியின் பெருமையும், வல்லமையை பற்றியும் 10 குறட்பாவில் பாடுகின்றார்
வள்ளலாரும் " திருவடிப் புகழ்ச்சி - திருவடிப் பெருமை " என்று பாடல் இயற்றியுள்ளார்
வள்ளுவர் திருவடிப் பெருமை பற்றி கூறுகையில் , இதனை பற்றித் தான் பிறவி என்னும் பெருங்கடலை கடக்க முடியும் என்று உறுதி படக் கூறுகின்றார்
திருவடியின் வல்லபம் :
1. ஐம்புலன்களையும் ஒன்றாக ஓரிடத்தில் சேர்த்து விடும் - இதனால் இந்திரிய ஒழுக்கம் கைவல்லியம் ஆகிவிடும்
2. மனதை ஓரிடத்தில் ஒடுக்கி விடும் - இதனால் கரண ஒழுக்கம் கைவல்லியம் ஆகிவிடும்
3. உடல் , மனம் , பிராணன் ஆகியவற்றின் அசைவை நிறுத்தி ஆன்மாவை விழிக்க வைக்கும்
ஜீவனை ஆன்மாவாக மாற்ற உடல் , மனம் , பிராணன் அசையாமல் இருக்க வேண்டும்
4. சாதகனுக்கு 36 தத்துவங்களை தன் ஊனக் கண்ணால் காணும் சக்தியை கண்ணுக்கு அளிக்கின்றது
( வள்ளலார் : ஆறாறு காட்டிய அருட்பெருஞ்சோதி )
5. சாதகனுக்கு 36 தத்துவங்களை கடக்க வைக்கின்றது
( வள்ளலார் : ஆறாறு கடத்திய அருட்பெருஞ்சோதி )
6. சாதகனுக்கு இந்த உலகினில் நீண்ட ஆயுளை வழங்குகின்றது ( வள்ளுவர் - நிலமிசை நீடு வாழ்வார் )
7. சாதகனை ஜீவ நிலையிலிருந்து ஆன்ம நிலைக்கு மேலேற்றுகின்றது - மௌனத்திற்கு அழைத்து செல்கின்றது - பின்னும் மேலேற்றி பொற்சபை - சிற்சபை - ஞானசபைக்கு அழைத்து சென்று மரணமில்லாப் பெருவாழ்வு அளிக்கின்றது
8. சாதகனை " சும்மா இருக்கும் சுகத்திற்கு " அழைத்து செல்கின்றது
9. சாதகனை உலக வாழ்வில் இருந்தும் அதனோடு ஒட்டாமல் வாழ வைக்கின்றது
10. சாதகனை " விழிப்பு " நிலையில் இருக்க வைக்கின்றது
11. சாதகன் " ஸ்திதப்ரஞனாக " மாறிவிடுகின்றான் - அவனின் மனோ நிலை சரிசமமாக இருக்கின்றது. இரண்டும் ஒன்று என்ற பெரிய நிலை - ஒருமை என்ற பெரிய நிலை .
வள்ளலார் :
" எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தாளை ஏத்து "
என்று திருவடி பெருமை பற்றி பாடினார்
ஆனால். சன்மார்க்கத்தவரோ, தங்களுக்கு வசதியாக , இதனை மாற்றிவிட்டனர் :

எல்லாம் வல்லான் தனையே ஏத்து "
வெங்கடேஷ்

No comments:
Post a Comment