Pages

Friday, April 25, 2014

[vallalargroups:5410] உண்மைக் கடவுளே "சுப்பிரமணியம்"

உண்மைக் கடவுளே "சுப்பிரமணியம்" : வள்ளலார் உரைநடை பகுதியில் இருந்து

சர்வ தத்துவங்களையும் தன் வசமாக்கி, அகங்காரக் கொடிக் கட்டி,அஞ்ஞான நாடகம் செய்த தத்துவ அகங்கரிப்பை அடக்கி,பதி,பசு,பாசம்,அனாதி,நித்தியம் என்னும் சித்தாந்த்தை விளக்கி காட்டுவதற்காக..,
1.    மாச்சரிய குக்குடத்தை போதமாகிய கையால் அடக்கியும்,2.    விசித்திர மாயையாகிய மயிலைக் கீழ்படுத்தி , மேலிருந்து அடக்கியும்,3.    ஆபாச தத்துவங்களை சம்மரித்தும்,4.    சுத்த விஷய புவனமாகிய தேவ லோகத்தை நிலைப் பெறச் செய்தும்,5.    இந்திர பதியான தேவேந்திரனுடைய பெண்ணாகிய தாந்தர தத்துவம் என்னும் தெய்வயானையை இடைப்பால் அமைத்தும்,6.    இந்திரியங்களாகிய வேடர்களின் கண்ணிற் புலப்பட்ட மானசம் என்னும் மானினது கற்பத்தில் உண்டான வள்ளியாகிய சுத்த மனத்தை வலத்தில் வைத்தும்,7.    நவத் தத்துவமாகிய வீரர்களைச் சமீபத்தில் இருத்தியும்,8.    சகல,வலங்களுக்கும்(நினைப்பு,மறப்புக்கும் ) இடையில் விவேக வடிவாயும்,9.    பாதம் முதல் நாபி வரையில் உஷ்ண உருவாயும்,10.  நாபி முதல் கண்டம் வரையில் ஆதார நாடி உருவாயும் ,
11.  கண்ட முதல் புருவமத்தி வரையில் மணி உருவாயும்,
12.  உச்சியில் மணி உருவாயும் ,
13.  அனுபவத்தில் நித்தியமாயும் ,
14.  எங்கும் நிறைவாயும்,
15.  கோணத்தில் ஆறாயும்,
16.  எக்காலமும் மதத்தில் ஆறாயும் ,
17.  சமயத்தில் ஆறாயும் ,
18.  ஜாதியில் ஆறின் கூட்டமாயும்
விளங்குகின்ற உண்மைக் கடவுளே "சுப்பிரமணியம்"
For More details please refer Vallalar Urainadi Section..., 
web    : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment