சூரசம்ஹாரம் - வள்ளலார் உரைநடை பகுதியில் இருந்து
பதுமாசுரன் = பதுமம் + அ + சுரன்
பதுமம் - நாபி
அ - அவா
சுரன் - சுழித்து எழுதல்
நாபியினடமாய் அடங்காமல் எழுப்பும் குணத்தை அடக்கியும் தடைபடாதது
1. பதுமாசுரனகிய அவா.
2. கஜமுகம் என்பது மதம்.
3. சிங்கமுகம் என்பது மோகம்.
இவைகளை வெல்லுவது பஞ்ச சக்தியாலும் , ஐந்தறிவாலும், உப சத்தியான பஞ்ச சத்தியாலும் கூடாது.
ஆதலால் , சிவத்தால் தடைப்பட்டது.சுப்பிரமணியம் என்னும் ஷண்முகரால் சம்கரிக்க வேண்டுவது.
எப்படி எனில் :
பஞ்ச சக்தியோடு , அன்னனியமாகிய சம்வேதனை எனும் அருட் சத்தியையும் கூட்டி,
சுத்த அறிவே வடிவாகிய ஆறறிவு என்னும் முகங்களோடு,
சுத்த ஞானம் ,சுத்த கிரியை என்னும் சத்தியுடன்,
கூர்மை பொருந்திய வேல் என்னும் விவேகத்தால்,
தயா வடிவாய் அவா , மோக , மதங்களை நாசம் செய்வது சூரசம்ஹாரம்.
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment