Pages

Tuesday, April 22, 2014

[vallalargroups:5401] Ramayanam - sanmarga meaning

இராமாயணம் - சன்மார்க்க விளக்கம்

சுத்த அறிவு இராமனாகவும்
அறிவின் சத்தி சீதையாகவும்
பத்து திசைகளிலும் அலையக்கூடிய
மனமே இராவணனாகவும்

மாரீசன் என்பது வஞ்சகமாகிய
உலக வாழ்வாகவும்

அறிவு மாரீசன் பின் செல்ல
மனமாகிய இராவணன்

அறிவின் சத்தியாகிய சீதையை கவர்ந்து
சோகம் என்னுமிடத்தில்
பிரணவத்தில் சிறை வைத்து விடுகின்றது
அறிவானது " வாசி" யாகிய அனுமன் துணை கொண்டு

பிரணவத்தை அடைந்து
கோதண்டமாகிய பிரணவத்தை வளைத்து
அதிலிருந்து சிவவொளியை வீசச் செய்து
மனதை அழித்து

அறிவின் சத்தியை மீட்டது என்பதையே
இராமாயணமாகச் சித்தரித்துள்ளனர்

மனிதர்களாகிய நாமும்
உலக வாழ்க்கையை " மெய் " என்று நம்பாமல்
அதன் பின் செல்லாமல்

அறிவு மயமாய் இருக்க வேண்டும்
பிரணவத்தை அமைக்க வேண்டும்
அதை அடைந்து , வளைத்து
அதிலிருந்து வெளிப்படும் சிவவொளியால்
மனதின் எல்லா தீய குணங்களையும்
ஒழிக்க வழி காட்டினர் - கதையாக

இதன் உண்மைத் தத்துவத்தை
நாமும் உணர்ந்து
மனதை ஒழித்து
நம்மை உணர வேண்டும் நம்மை ( ஆன்மாவை ) தரிசிக்க வேண்டும்



BG Venkatesh

No comments:

Post a Comment