வள்ளலாரின் பேருபதேசம் – "நமது சிறுமையை விசாரித்தல்" :5
140. ஒரு குடித்தனத்தும் கொடியேன்.
141. குறிகளிலும் கொடியன்.
142. அன்றிக் குணங்களிலும் கொடியேன்.
143. மலத்திடையே புழுத்த சிறுபுழுக்களிலும் கடையேன்.
144. வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்.
145. நலத்திடை ஓர் அணுஅளவும் நண்ணுகிலேன்.
146. பொல்லா நாய்க்கு நகை தோன்றநின்றேன்.
147. பேய்க்கும் மிக இழிந்தேன்.
148. நிலத்திடை நான் ஏன்பிறந்தேன்? நின்கருத்தை அறியேன் !
149. விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது விம்முகின்ற
குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்.
150. அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்து நெடுங் காலம் அலைந்தலைந்து
மெலிந்ததுரும் பதனின் மிகத் துரும்பேன்.
151. கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்த பழுமரத்தேன்.
152. கெடுமதியேன்.
153. கடுமையினேன்.
154. கிறிபேசும் வெறியேன்.களக்கறியாப் புவியிடை நான் ஏன் பிறந்தேன்?
155. அந்தோ கருணை நடத்தரசே நின்கருத்தை அறியேனே!
156. அறியாத பொறியவர்க்கும் இழிந்த தொழிலவர்க்கும் அதிகரித்துத்
துன்மார்க்கத் தரசு செயும் கொடியேன்.
157. குறியாத கொடும் பாவச்சுமை சுமக்கும் திறத்தேன்.
158. கொல்லாமை என்பதை ஓர் குறிப்பாலும் குறியேன்.
159. செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன்.
160. சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன்.
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment