Pages

Thursday, December 12, 2013

[vallalargroups:5231] மகாதேவ மாலை சிறப்பு - Introduction

மகாதேவ மாலை சிறப்பு:
திரு அருட் பிரகாச வள்ளலார் , மகாதேவ மாலை என்ற பகுதியில் , 100 பாடல்களை இயற்றி உள்ளார்கள்.
இதனில், முதல் 70 பாடல்களில் இறைவனின் பெருமையையும், மீதம் 30 பாடல்களில் நமது சிறுமையையும் இறைவனிடம் எவ்வாறு விண்ணப்பம் ( விசாரிக்க) வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்கள்.

இந்த "மகாதேவ மாலை" பகுதியில்,   வேதாந்தத்தில் , சித்தாந்தத்தில்  உள்ள அனைத்து சாராம்சங்களையும் வள்ளலார் ஒருங்கே கொடுத்துள்ளார்கள் .இதனை பின் வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.
"காப்பு செய்யுளில்" , சிவஞான போதம் "12  சூத்திரங்களின்"  சாரத்தை ஒரே பாடலில் கொடுத்துள்ளார்கள்.   
கருணைநிறைந் தகம்புறமும் துளும்பிவழிந்
  துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித்
தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற
  கண்ணுடையோய் சிதையா ஞானப்
பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்ற
  மலர்வாயோய் பொய்ய னேன்றன்
மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையும்உட்
  கசிந்துருக்கும் வடிவத் தோயே
கருணைநிறைந்து - காருண்யம் / தயவு நிரம்பி 
தகம்புறமும்  - உள்ளும் புறமும்
துளும்பி - ததும்பி
வழிந்து  - பெருகி பாய்ந்து
உயிர்க்கெல்லாம்  - சர , அசர உயிகள் அனைத்தினுக்கும்
களைகண் ஆகித் - ஆதாரமாகி
தெருள் நிறைந்த - தெளிவு நிரம்பிய
இன்பநிலை - நித்திய இன்ப நிலையை
வளர்க்கின்ற  - பாதுகாக்கின்ற
கண்ணுடையோய் - அருளாகிய கண்ணை உடையவனே
சிதையா  -  அழிவில்லாத
ஞானப்பொருள் -  ஞானப்பொருள்
நிறைந்த - நிரம்பிய
மறையமுதம் - வேத ஆகமங்கலாகிய அமிர்தத்தை
பொழிகின்ற - பெய்கின்ற
மலர்வாயோய்  - செந்தாமரை மலர் போன்ற திருவாய் உடையவனே
பொய்யனேன் தன் - பொய்யனேன் ஆகிய எனது
மருள்நிறைந்த - மயக்கம்(அஞ்ஞானம்)  நிறைந்த
மனக் கருங்கற்பாறையும் - கருங்கல்,பாறை  போன்ற எனது மனமும்
உட்கசிந்து - உள்ளே கசிந்து
உருக்கும் - உருக்கும்
வடிவத்தோயே - அருள் திருமேனி உடையவனே
Next Article : சிவஞான போதம் "12" சூத்திரங்கள் - மகாதேவ மாலை பாடல் தொடர்பு



Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment