Pages

Tuesday, December 3, 2013

திருவடி புகழ்ச்சியின் சிறப்பும் / பெருமையும் --- எதற்காக "ஹோமம்" ?

ஏன் & எப்படி & எதற்காக "ஹோமம்"  செய்கிறார்கள் ?
எப்படி :
அக்னியை மூட்டி , வேதங்களை சொல்லி , தேவதைகளை அக்னியில்
வரவழைத்து வரங்களை பெற..
ஏன் & எதற்காக :
வரங்களை பெற..(
      புதுமனை புகும் பொழுது 
      திருமணத்தின் போது
      துஷ்ட சக்திகள் விலக
      குழந்தை பாக்கியம் பெற   ) etc..
இவை அனைத்தும், வள்ளலார் இயற்றிய "திருவடி புகழ்ச்சியை" காலையில் தீப முன்னிலையில் ஓதினால் நாம் வேண்டியதை பெற்று கொள்ளலாம்.

திருவடி புகழ்ச்சியின் சிறப்பும் / பெருமையும்:

திருவடி புகழ்ச்சி - இந்த திருவடிப் புகழ்ச்சி 128 அடிகளைக்கொண்டதாக இருந்தாலும், உண்மையில் இது 4 அடிகளைக்கொண்ட ஒரே பாடலாகும். எப்படியெனில் ஒவ்வொரு அடியும் 32 வரிகளைக் கொண்டது. (32*4=128).மொத்தம் 4 அடிகள்

1 அடி: (4 வேதங்களை கொண்டுள்ளது )   - "பதியை" பற்றியது
2 அடி: (28 ஆகமங்களை  கொண்டுள்ளது ) - "பசுவை" பற்றியது
3 அடி: (புராணங்களை  கொண்டுள்ளது )  -"பாசத்தை" பற்றியது
4 அடி: (ஞானிகளின் புகழ் & வள்ளலாரின் அனுபங்களை  கொண்டுள்ளது )

இந்த திருவடி புகழ்ச்சியை படித்தால் , அனைத்து வேதங்களையும் , அனைத்து ஆகமங்களையும் , அனைத்து புராணங்களையும் , ஞானிகளின் புகழையும் படித்ததற்கு சமம் ஆகும் .

அனைத்திற்கும் மேலாக,ஹோமத்தில் வெளியே உண்டாக்கப்படும் அக்னி,
“திருவடிபுகழ்ச்சி” படிப்பதன் மூலம், இறைவனால்,காரண தேகம்,சூக்கும தேகம், ஸ்துல தேகத்தில் "அக்னி" தோற்றுவிக்க படுகின்றது . இதன் மூலம், நினைத்த பலன்கள் நிறைவேறுகின்றன.

No comments:

Post a Comment