எல்லாம் வல்ல இறைவனே , நீ என்னுடன் எவ்வாறு இருக்கிறாய்?
83.இறை இன்பக் குழைவு
1. கருவில் கலந்த துணையே
2. என் கனிவில் கலந்த அமுதே
3. என் கண்ணில் கலந்த ஒளியே
4. என் கருத்தில் கலந்த களிப்பே
5. என் உருவில் கலந்த அழகே
6. என் உயிரில் கலந்த உறவே
7. என் உணர்வில் கலந்த சுகமே
8. என்னுடைய ஒருமைப் பெருமானே
#4626. கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்
கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்
உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்
உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே
வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே
- THIRU ARUTPRAKSA VALLALAR
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Anbudan,
Vallalar Groups
To Receive Vallalar Messages - Click Subscribe
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
No comments:
Post a Comment