எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும்,
அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈடாகாது.
கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அன்பையும், உதவியையும், சேவையையும்
மற்றவர்களுக்கு கொடுத்துப் பழகுங்கள். இதற்காக எதையும் எதிர்பார்க்கவேண்டாம்.
எதைப் பிறருக்கு கொடுக்கிறோமோ அது திரும்பவும் ஆயிரம் மடங்காக நம்மிடமே
திரும்பிவிடும். ஆனால், இப்போதே அதைப்பற்றிச் சிந்திக்காதீர்கள். நீங்கள்
செய்யவேண்டியது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்குக் கொடுப்பது
மட்டுமே.
கைகள் இருப்பது பிறருக்கு உதவி செய்யத் தான். பட்டினியாய்க் கிடந்தாலும்
கடைசிப் பருக்கையையும் பிறருக்கு கொடுப்பது தான் நல்லது. கொடுப்பவன் முழுமை
பெற்று முடிவில் கடவுளாகிறான்.
ஒருவருக்கு உதவி செய்ய எண்ணி, யாருடைய கை முன்னே நீளுகிறதோ, அவனே மக்களில்
சிறந்தவன்.
* மவுனமாக இருப்பது நல்லது. ஆனால், அதற்கு தேவையான மனஅடக்கம் நமக்கு இருப்பதில்லை.
* உண்மையை நாடுபவர்களுக்கு மவுனம் பெருந்துணையாகும். மவுனத்தால் மனதிலுள்ள தயக்கம் விலகி தெளிவான முடிவினை எட்டமுடியும்.
* பேசாமல் இருப்பது மட்டுமே மவுனமாகாது. அவசியமில்லாதவற்றை மனதில் சிந்திக்காமல் இருப்பதே மவுனம்.
* விரதம் என்ற பெயரில் மனதோடு போராடிக் கொண்டிருப்பது நல்லதல்ல. மனதை பூரண அமைதியில் தவழச் செய்வதே சரியான மவுனமாகும்.
* மவுனம் பழகப் பழக ஆண்டவனின் குரலை நம்மால் கேட்க முடியும். சத்திய வேட்கை உடையவர்கள் பழகவேண்டிய அடிப்படைக் குணம் மவுனம்.
* கோபத்தைப் போக்கி சாந்த குணத்தை வளர்த்துக் கொள்ள மவுனத்தைப் போல சிறந்த துணை வேறில்லை.
* மக்களுக்கு சேவை செய்ய விரும்புபவர்களுக்கு நாவடக்கம் மிகவும் அவசியம். அதற்கு மவுனப்பயிற்சி சரியான வழிகாட்டியாக துணை செய்யும்.
* மிகைப்படுத்துவதும், உள்ளதை மறைப்பதும் மனிதனின் இயல்பான குறைபாடாக இருக்கிறது. அதை மவுனம் அடியோடு போக்கிவிடும்.
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
Post a Comment