Pages

Wednesday, November 18, 2009

[vallalargroups:2413] Re: மனமே - நீ யார் ? Vallalar Answer

அன்பு சன்மார்க்க அன்பர் கார்த்திகேயன் அவர்களுக்கு.

மிகச் சரியாக எடுத்து காட்டினீர்கள்.
ஞானத்தை தேடுபவர் முதல் சாதாரண உலகியலில் வாழ்பவர் வரை
அனைவரையும் நிலை தடுமாற வைப்பது 
மனம் என்னும் அசுத்த மாயை தான்.
உலகியலில் உள்ளவர்களை மனம் தன்னுடைய
கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.
அப்படி மனதின் கட்டுப்பாட்டில் அதன் அடிமையாக
மாறியவர்களின் வாழ்க்கை நிம்மதி இழந்து காணப்படுகிறது.
அதுவே மனதை தன் அறிவின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களின் 
வாழ்க்கை மிக சந்தோஷமாக அமைகிறது.
இது நடைமுறை  வாழ்க்கையிலேயே இப்படி என்றால் 
ஞான பாதையில் செல்வோரை எப்படி எல்லாம் 
திசை திருப்ப மனம் முயற்சி செய்யும்.
ஞான பாதையில் மேல் நிலை அடைந்த ஞானிகள் சிலர் கூட 
மன வயப்பட்டு கீழ் நிலையை அடைந்து மீண்டு மேல் நிலையினை
அடைவதற்கு முடியாமல் மீண்டும் ஆரம்ப நிலையிலிருந்து 
ஞான பாதையை தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட மோசமான மனதை நம் கட்டுப்பாட்டில் 
வைத்திருக்க வேண்டும் என்றால்
நமது வள்ளல் பெருமானார் சொன்னது போல்
அசையாத ஓவியம் போல் வைத்திருக்க வேண்டும்.
ஓவியம் அசைந்தால் அது திரைப் படமாக அதாவது 
சலனப் படமாக மாறி அதன் பாதையில் நம்மை
திசை திருப்பி விடும்.
ஆகவே நாம் மனதை அடக்கி நம் ஆன்மா  அறிவின் துணை கொண்டு  
சுத்த சன்மார்க்க பாதையில் பயணிப்போம்.

அன்புடன்,
விழித்திரு ஆறுமுக அரசு
 

2009/11/18 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Inbutru Vazga
Dear All,
Vallalar is answering for "மனமே - நீ யார்?" in Deiva Mani Malai...,

வாய்கொண்டு ரைத்தல் அரிது என்செய்கேன் என்செய்கேன்
வள்ளல் உன் சேவடிக்கண் மன்னாது
  • பொன்னாசை
  • மண்ணாசை
  • பெண்ணாசை 

       வாய்ந்துழலும் எனது மனது

  1. பேய்கொண்டு, கள்உண்டு,கோலினால் மொத்துண்டு, பித்துண்ட வன்குரங்கோ?
  2. பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ ?
  3. பேதை விளையாடு பந்தோ?
  4. காய்கொண்டு பாய்கின்ற வெவ்விலங்கோ?
  • பெருங்காற்றினாற் சுழல் கறங்கோ?
  • கால வடிவோ?
  • இந்த்ர ஜால வடிவோ?
  • எனது கர்ம வடிவோ?
  •  அறிகிலேன்.....
     
     
     
        
    Anbudan,
    Karthikeyan.J
    Cell: 09902268108
     
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
     





    --
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

    அன்புடன்

    விழித்திரு ஆறுமுக அரசு

    --~--~---------~--~----~------------~-------~--~----~
    To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

    To change the way you get mail from this group, visit:
    http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    -~----------~----~----~----~------~----~------~--~---

    No comments:

    Post a Comment