Pages

Wednesday, October 14, 2009

[vallalargroups:2273] ThirukkuraL - a sonnet a day - Nos. 61, 62, 63

Dear Friends
Attached and given below are issues 61, 62 & 63 upto 13.10.2009, in Adobe pdf format and in full version of unicode Tamil fonts.

With all good wishes Yours affably J.Narayanasamy

 

 

நாளும் ஒரு திருக்குறள் இதழ் 61. திருவள்ளுவர் ஆண்டு 2040 புரட்டாசித் திங்கள் 25ம் நாள்.

 

தொகுப்பு 50: இடன் அறிதல். வினைகளை வெற்றியுறச் செய்து முடிக்க ஏற்ற இடத்தை அறிதல்.

 

      'கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா

     வேலால் முகத்த களிரறு'      குறள் 500

 

      வேல் ஏந்திய வீரரை அஞ்சாது  எதிர்கொள்ளும் யானை, சேற்றில் கால் அழுந்திவிட்டால் அதனை நரிகள் கொல்லக் கூடும். அவரவகள் இருக்க வேண்டிய இடத்தில் தான் வல்லமையும் பாதுகாப்பும்.

      'பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா?

       அவரவர் இருக்குமிடம் இருத்தால் எல்லாம் சவுக்கியமே'   கவிஞர் கண்ணதாசன்.

 

      'அஞ்சாமை அல்லால் துணை வேண்டா...' என்று குறித்த குறட்பாவைத் தொடர்ந்து, அஞ்சாமையே வலிமை என்று 12 குறட்பாக்களும், அஞ்சத் தக்கவை அஞ்சல் தேவை என்று 14 பாக்களும், அஞ்சுவது தவறு என்று 13 பாக்களும் குறிக்கின்றன. முற்றும் ஏற்ற இடம் காணும்வரை, ஈடுபடும் செயலின் தன்மையை, பகைவரைக் குறைத்து மதிப்பிடவோ, அரண் போன்ற பாதுகாப்பான இடத்திலன்றி, சடுதியாகச் செயலில் ஈடுபடவோ கூடாது. தமக்குத் தக்க இடத்திலிருந்து செயல்படலே வலிமை. நீரில் இருக்கும் வரை  மட்டுமே முதலை வெல்லும் வலிமை கொண்டது. பொருத்தமான இடத்திலிருந்து, உரிய வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படும்போது துணிவே துணை. அரணும் படைச் சிறப்பும் குன்றினாலும், மக்கள் தங்கள் உறைவிடமாகக் காக்கும் நிலத்தைப் பிறர் எளிதாக வென்று நிலைக்க இயலாது.

 

                THIRUKKURAL  - A SONNET A DAY – No. 61. October 11, 2009

 

            CHAPTER 50: JUDGING APPROPRIATE PLACE FOR EXECUTING DEEDS.  As important as time, is selecting a place suitable for the deed on hand after due tests and verification. Fearlessness and boldness, blended with discretion, are basic strengths in executing actions. 12 couplets in KuraL stress that boldness is the strongest guide in executing actions, while 14 warn that caution is necessary to avoid misdeeds and face vileness, and another 13 state that fear is destructive where courage is called for.

 

            'Kaal aazh kaLaril Nari adum kaN anjaa

            Vael aazh  mukaththa kaLiru'    kuraL 500

 

                A tusker facing warriors fearlessly, when caught in a quagmire may even be

            Prey for a fox; beware of a wrong step at a wrong place.

 

The crocodile dominates in deep waters; once out of water it is easy prey to its foes. Choose an appropriate place and do not under-estimate the task on hand. Security to a place of safety like a fort adds strength to will, to act and achieve. Choosing a proper place, staying with courage at a position of vantage and aiming with determination, the weak can also fight to win. Courage is companion in aid to one who acts firm using brain. Though small in strength of forces, and weak in security and form, people on their native soil cannot be subjugated for long.

 

·         * *  * *  * * * *

 

நாளும் ஒரு திருக்குறள் இதழ் 62. திருவள்ளுவர் ஆண்டு 2040, புரட்டாசித் திங்கள் 26ம் நாள்.

 

தொகுப்பு: 51: தெரிந்து தெளிதல். செயல்களுக்கும், தொழில்களுக்கும் ஏற்ற தகுதி உடையவர்களை, ஆரய்ந்து தெளிந்த பின் தேர்வு செய்தல்.

 

முன்னேறும் அரிவியல் உலகச் சூழலில், வேகமான மாற்றங்களுக்கு அடிப்படையாகத் தொழில்நுட்ப ஈடுபாடும், பொருளீட்டலும் கருதப்படுகின்றன. இக்குறிக்கோள்களை அடைய,வெற்றியுடன் செயல்படப் பெரிதும் உதவுபவை மேலாண்மை அறிவியல், மனிதவள மேம்பாடு, தகவல் தொடர்புத் திறன் போன்றவை. அவை தொழில், வாணிபம், நிர்வாகம் இவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்துறைகளில் பண்டைய தமிழர் கோட்பாடுகள், செயல்பாடுகள் எவ்வாறு அமைந்தன என்பதைத் திருக்குறள் பிரதிபலிப்பதோடு, தற்காலத்திற்கு அவை எவ்வாறு உதவும் என்பதையும் அறிவுறுத்துகிறது. செயல்களைத் தெரிந்து செய்தல்,  அதற்குத் தகுந்தவர்களை ஆராய்ந்து, தெளிந்து தேர்வு செய்தல், பணிகளைப் பிரித்தளித்து மேற்பார்வை செய்தல் பற்றி விளக்குபவை தொகுதிகள் 47,51,52.

 

'அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்

திறன்தெரிந்து தேர்ந்து  கொளல்'      குறள் 501

 

வாழ்வியலின் அறம் பொருள் இன்பம் இவற்றை நோக்கும் தன்மையும், உயிரைப் பற்றிய எண்ணமும் ஒருவரிடம் எவ்வாறு உள்ளன என்பதை ஆராய்ந்து அவருடைய தகுதியைத் தெளிந்து தேர்வு செய்யவேண்டும். நல்ல இனத்தின் பண்புகள், குற்றங்கள் அணுகாது, தவறுகளை ஒதுக்கி, நாணத்தக்க பழிகளை நீக்கிச் செயல்படும் தன்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஒருவரின் குணங்களையும் குற்றங்களையும் சீர்தூக்கி அவற்றில் மேலோங்கி நிற்பவற்றைக் கண்டு தேரலாம். குணங்களுக்கு உரைகல் வினைகளைக் கூர்மையாகக் கருதிச் செய்யும் பாங்கு. நெறிமுறைகள் அற்றவரை நம்பித் தேர்வு செய்யக்கூடாது. நம் தேவைகளுக்குப் பயன்படக் கூடியவரா என்பதை அறிந்து தேர்ந்த பின் ஒருவரை ஐய்யப் படுவது நீங்காத துன்பம் தரும்.

 

THIRUKKURAL  -  A SONNET A DAY – No. 62. October 12, 2009

 

CHAPTER  51:  TEST AND TRUST

 

Vast developments in the fields of science and technology, economics and human attitudes in recent times have radically changed life styles. It is useful to reflect and compare values, ethical codes and systems prevailed in ancient times when, where refined civilizations thrived; to know our bearings and traditions, strengthen moral values and enhance quality of life, reducing stress and strain. We can delve into ThirukkuRaL to find wide and new dimensions which have stood the test of time and prevailed flexible to changes, and take guidance.

Though the system of governance and nature of occupations were different those times, basic ingredients of human thought and actions were similar. Success of governance depends on the care and attention given to select suitable people after due tests and verification, finding out their aptitudes. These aspects apply equally to modern day scientific management practices as well. Choose a person eminently suited for the job on hand after fully analyzing capabilities, character and aptitudes.

 

'aRam poruL inbam uyir achcham naankin

thiRan therinthu  therinthu thaerappadum' kuraL 501

 

Test people by their attitudes to life in virtues,

Wealth, love and survival  before you trust.

 

Noble heritage, freedom from vices and shame of blame are some of the norms to choose. Even among scholars who have overcome folly, it is hard to find any  fully free from lack of knowledge. Weigh carefully good and bad traits and choose by virtues that prevail. Quality of deeds is the touch-stone to judge greatness or meanness of mind and words. A person lacking the shame of blame is not trustworthy.  A choice out of affinity, as a favor, entails folly to suffer. Reliance on an untested stranger brings endless troubles. Select by adequate tests and entrust them with work they are capable of. Do not repose trust without tests; nor lurk in doubt after the choice – both are harmful.

 

* *  * *  * * * * * * *

 

 

            நாளும் ஒரு திருக்குறள் இதழ் 63. திருவள்ளுவர் ஆண்டு 2040 புரட்டாசித் திங்கள் 27ம் நாள்.

 

     தொகுப்பு: 52  தெரிந்து வினையாடல்.

     வினையாற்றலுக்கான தகுதிகளைத் தெரிந்து பணிகளை அளித்தல்.

 

      அன்பு, அறிவு, அவாவின்மை, தெளிவு வினை செய்பவர்களுக்கு இன்றி யமையாதவை. இவற்றைச் சிறப்பாகப் பெற்றவர்களைத் தேர்வு செய்வதே நலம். எவ்வகையில் ஆராய்ந்து தேர்வு செய்யினும், வினையாற்றலில் அவரவர்க்கு என்று தனிப்பாணி உண்டு. தனித் தன்மையிலும், வழி முறைகளிலும் வேறு படுகின்றனர். அதனை அறிந்து ஊக்குவித்துச் செயல் படுத்த  வேண்டும்.

 

      'இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

      அதனை  அவன்கண்  விடல்'        குறள் 517

 

      வினையின் தன்மை, செயல்முறை, செய்பவரின் திறன் இவற்றை இணைத்து ஆராய்ந்து, எந்தத் தொழிலுக்கு யார் பொருத்தமானவரோ அவரிடம் ஒப்படைப்பதே சிறந்த மேலாண்மை.

நன்மை, தீமை ஆராய்ந்து உணர்ந்து நற்செயல்களை ஆற்றி, வளதைப் பெருக்கி, வருவாயை விரிவாக்க வல்ல செயலர்களே ஏற்றவர்கள். ஒழுங்காகச் செய்து முடிகும் ஆற்றல் அற்றவர்களைச் சிறந்தவர்கள் எனநம்பிப் பணிகளை ஒப்படைக்கக் கூடாது. வினையின் தன்மையையும், செய்பவரின் திறனையும் தெரிந்து, தக்க காலம் அறிந்து செயலாற்ற வேண்டும். தேர்வு செய்தபின் முழுப் பொறுப்புடன் செயலில் ஈடுபடுத்த வேண்டும். 'கருமமே கண்ணாயினர்' எனும் இயல்புடையவர் தோழமையைத் தவறாக மதிப்பவரின் செல்வமும் பெருமையும் தாமே நீங்கும்.

 

தொழில் செய்வோர் மனம் கோணாது, கடமை உணர்ந்து பாடுபட்டால் மட்டுமே நாடு கெடாது செழிக்கும். ஆழ்வோர் அவர் நலனைப் பேணிக் காக்க வேண்டும்.

 

THIRUKKURAL  -  A SONNET A DAY  -  No. 63. October 13, 2009.

 

CHAPTER 52:  EVALUATE AND ENTRUST.

 

With vast developments in the fields of science and technology, economics and trade human attitudes in recent times have radically changed our life styles. It is useful to reflect on and compare values, ethical codes and systems prevailed in ancient times, where refined civilizations thrived; to know the bearings and traditions, strengthen our moral values, and enhance quality of life reducing stress and strain; balancing thinking and working, with rest and recreation in sports and fine arts.  

We find in ThirukkuraL new dimensions which have stood the test of time and prevailed flexible to changes, and can take guidance from them. Though the system of governance and nature of occupations were different in those times, basic ingredients of human thought and activities were similar.  

It is a vital task in human relations development and successful management, not only to select persons suited, but to assign them duties according to aptitudes and skills.

Success of governance depends on the care and attention given to select suitable people on due tests and verification, find their aptitudes, delegate powers duties and responsibilities according to needs; guide and superintend their activities. These aspects equally apply to modern day scientific management practices as well.

 

'Itahnai ithanaal ivan mudikkum entRu  aaynthu

Athani  avankaN vidal'           KuraL 517

 

Select a person with appropriate means to tackle the

Kind of job, and entrust it for efficient management.

 

The wise ones who can discern good and bad of things and perform right are the best to choose. Competence to augment revenue and foster wealth crossing all hurdles on the way; clear perception by wisdom, love, discerning wit and freedom from lust are essential faculties. Tested and tried, each one has own perception and ways to perform and ability to turn a job to success at apt pace and time; recognize and take advantage.  Scan fitness for a job and assign it to be done to the best of ability. Suspecting loyalty of 'doers for duties sake' leads to loss of wealth and fame. Always keep dear to mind the legitimate interests of toilers whose steady hands keep the world on stride.   

 

 

    

 

      

  

 

 

 

                                                                                                                                                               

 

 

 

 

 

 

           

 

              

 

 

       

 

 

 




Add whatever you love to the Yahoo! India homepage. Try now! --~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment