Pages

Wednesday, October 14, 2009

[vallalargroups:2272] Re: [vallalargroups:/] List of Sath Vichara Questions

அன்பு சன்மார்க்க அன்பருக்கு,
மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தரிவித்து 
என்ற அவ்வையின் அகவலுக்கு விளக்கம் காண வேண்டும் என்றால் 
முதலில் மூலாதாரம் என்றால் என்ன என்பதும் மூண்டெழு கனல் எது என்பதும் கால் என்றால் என்ன என்பதும் பற்றிதான்.
முதலில் மூலாதாரம் என்றால் என்ன ?
மூலம் + ஆதாரம் = மூலாதாரம் 
மூலம் என்றால் நம்முடைய உடல் தோன்றுவதற்கு மூலமாய் விளங்கும் பொருள் எது ?
நமது உடலில் விளங்கும் ஜீவன் தான் நமது உடலுக்கு மூலமாக உள்ளது அந்த ஜீவனுக்குதான் ஆன்மா என்று பெயர்.
சரி ஆன்மாவின் உருவம் மற்றும் வடிவம் என்ன ?
ஆன்மா சிற்றணு வடிவினன் 
ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் கொண்ட உருவினன்.
அடுத்ததாக ஆதாரம் 
நமது ஆன்மா நிலைகொண்டு இருக்கும் இடத்திற்குத்தான் ஆதாரம் என்று பெயர்.
ஆக நமது ஆன்மா நிலைகொண்டு இருக்கும் இடமே மூலாதாரம் எனப்படும்.
அந்த இடத்தைதான் புருவ மத்தியம் என்று நமது சித்தர்களும், வள்ளல் பெருமானும் அழைக்கிறார்கள்.
ஆக மூலாதாரத்து மூண்டு ஏழு கனல் என்பது நமது அன்மாவைத்தான்.
சரி கனல் என்றால் நெருப்பு என்று பொருள் படும்.
நெருப்பை நீங்கள் தீபமாக மாற்ற வேண்டும் என்றால் காற்றை கொண்டு ஊத வேண்டும்.
இங்கு கால் என்றால் காற்று என்று பொருள் படும்.
மேலும் 
ஒரு தூலமான பொருளை தள்ள வேண்டும் என்றால் மற்றொரு தூலமான பொருளோ ஆயுதமோ வேண்டும்.
சூக்குமமான பொருளை மேலேற்ற வேண்டும் என்றால் அதே போன்ற சூக்குமமான பொருளை கொண்டுதான் மேலேற்ற முடியும்.
ஆக
சூக்குமமாய் உள்ள சிற்றணு வடிவாகவும் சூரிய பிரகாச ஒளியாகவும் உள்ள அந்த ஆன்மாவை சூக்குமை உள்ள காற்றின் உதவியுடன் மேலேற்றுவதைதான் இந்த பாடல் உணர்த்துகிறது.
மேலும்
அந்த காற்றும் நேரடியாக மனதின் துணை கொண்டு மேலேற்றாமல் 
அறிவின் துணை கொண்டு அதாவது உணர்வு கொண்டு மேலேற்ற வேண்டும் எனபதைதான் நமது அவ்வையார் சாகாக் கல்வியை  பற்றி பாடி உள்ளார்கள்.
மேலும் விளக்கம் அடுத்த மடலில்

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு

2009/10/14 Vallalar Groups <vallalargroups@gmail.com>
Inbutru Vazga

Dear All,

List of Sath Vichara Questions by Members
  1. மூலாதாரத்து மூண்டெழு  கனலை காலால் எழுப்பும் கருதறிவித்து "  என்பதன்  விளக்கம் என்ன?
  2. kindly discuss about "dasakariyam"
  3. சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்
    அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி.

    இதில் "அகார, வுகார, சிகார, யுகரமும்"  பற்றி விளக்கி கூற வேண்டுகிறேன்.
 
--
Anbudan,
Vallalar Groups
 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
 





--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment