Inbutu Vazga
Dear All,
Dear All,
THIS SECTION IS VALLALAR HANDWRITTEN
அவ வாலிப பருவம் தோன்றுவதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பம் தருவதற்கு அகத்தும் , புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்சோதி உண்மை கடவுள் ஒருவரே என்று அறிகின்ற மெய்அறிவை விளக்குவித்து அருளினீர்.
வாலிப பருவம் தோன்றிய போதே
- சைவம் ,
- வைணவம் ,
- சமணம் ,
- பவுத்தம்
முதலாக பலபெயர் கொண்டு பலபட விரிந்த , அளவிறந்த சமயங்களும், அச் சமயத்தில் குறித்த சாதனங்களும் , தெய்வங்களும் , கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும் , அவ் அவ் சமயங்களில் விரிந்த
- வேதங்கள் ,
- ஆகமங்கள் ,
- புராணங்கள் ,
- சாத்திரங்கள்
முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்தி கற்பனை கலைகள் என்றும் ,
உள்ளபடியே எனக்கு அறிவித்து அச் சமய ஆசாரங்களை சிறிதும் அனுட்டியாமல் தடை செய்வித்து அருளினீர்.
அன்றியும்,
- வேதாந்தம் ,
- சித்தாந்தம் ,
- போதந்தாம் ,
- நாதாந்தம் ,
- யோகந்த்தம் ,
- கலாந்தம்
முதலாக பல பெயர் கொண்டு பலப்பட விரிந்த
மதங்களும் , மார்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடை செய்வித்து அருளினீர்.
With KindRegards,
Karthikeyan.J
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment