Pages

Monday, May 25, 2009

[vallalargroups:1579] Re: சுத்த‌ ச‌ன்மார்க்க‌ ல‌ட்சிய‌ம் எது என‌ வ‌ள்ள‌லார் கூறுகிறார்?

சுத்த சன்மார்க்க லட்சியமாக வள்ளல் பெருமான்
  1. கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆவார்
  2. சிறு தெய்வ வழிபாடு தவிர்த்தல் வேண்டும், தெய்வத்தின் பெயரால் உயிர் பலியிடக்கூடாது
  3. பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல்
  4. உலக அமைதிக்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டை கடை பிடிக்க வேண்டும்.
  5. மது, மாமிசம் உண்ணாதிருத்தல் வேண்டும்
  6. சாதி, மதம், இனம் சமயம் முதலிய வேறுபாடுகளின்றி இருத்தல் வேண்டும்
  7. எவ்வுயிரையும் தம்முயிர்போல எண்ணி ஆன்மநேய ஒருமைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
  8. உயிர் அடக்கம் கொண்டவர்களை எரிக்காது புதைத்தல் வேண்டும்
  9. எக்காரியத்திலும்,சுயநலமில்லாது பொது நல நோக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்
  10. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று எண்ண வேண்டும்
ஐயா, எனது சிறு அறிவிர்க்கு எட்டியபடி கூறுகையில் இவை அனைத்தையும் லட்சியமாக சன்மார்க்க அன்பர்கள் கருதி பிறருக்கு உண்மையாக உணர்த்துவதே சன்மார்க்க அன்பர்களின் லட்சியம் என வள்ளலார் கூறுகிறார் என்று நினைக்கிறேன்.( இதில் ஏதேனும் சிறு பிழை இருந்தால் சன்மார்க்க அன்பர்களின் கருணை குணத்தோடு என்னை மன்னிக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்)

                          
                                        நன்றி
                                                      
                                                        சுத்த சன்மார்க்கத்தின் பணியில்
                                                   
                                                       P.திருவருள் பிரகாசம்

                                                 

--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment