Pages

Friday, May 23, 2008

[vallalargroups:481] Re: Arutperunjothi Agaval - "Grace" Lines - Sath-Vicharam

அருட்பெருஞ்ஜோதி                      தயவு                  அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை                                               அருட்பெருஞ்ஜோதி

============================================================

 அன்பரே,

      திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமானின் ஆலயத்திற்குச் சென்றுவிட்டு,

 பின் (வள்ளல் பெருமான் அடிக்கடி சென்றதாகக் கேள்விப்பட்ட

 பட்டினத்தார் சமாதிக்கு சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் சென்றபோது)

 ஸ்ரீமத் ராமலிங்க மடாலயம் அமைந்த இடத்தின் வழியே செல்லும்

 வாய்ப்பு ஏற்பட்டது. நேரமோ மதியம் 12.30 சுமார் இருக்கும். எனவே

 அந்த நேரத்தில் அந்த மடாலயம் திறந்திருக்கவில்லை. எனவே

 திருத்தணிகை முருகன் காட்சி தந்ததாகச் சொல்லப்பட்ட,  கண்ணாடி

 யினை அன்று பார்க்க இயலவில்லை. எனினும் அன்று எடுத்த

 புகைப்படம் இன்று அன்பர்கள் அனைவரும் பார்க்கும் வசதியை

 ஏற்படுத்தித் தந்தது - தங்களின் செய்தியின் மூலம்.

                                                       ஜீவகாருண்யம்

            ஜீவ காருண்யம் என்பது என்ன என்பதற்கு வள்ளலார்

 குரூப்ஸ் நிறுவனர் -  திரு கார்த்திகேயன், வள்ளல் பெருமானின் உபதேச

 வாசகங்களையே காண்பித்துத் தந்து விட்டார்.

         அதற்கு மேலும் ஒரு படி போய்,  உதாரணமாக, தனது நண்பர் ஒருவரின்

 வாழ்க்கையையும் தெரிவித்து விட்டார்.  அனேகமாக அதில்,  இது குறித்து முக்கியமான விபரங்களும், தினசரி வாழ்வில் எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்ற  முழு விவரங்களும்  தங்களுக்கு  விளங்கியிருக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஜீவ தயவு அல்லது ஜீவ காருண்யம்

தயவுச் செயலால் உள்ளொளி பெருகும்.

(சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளியது)

 

ஜீவ தயவு அல்லது ஜீவ காருண்யம் என்பது என்ன என்றால், புறத்தில் ஜீவர்கள் விஷயத்தில் காட்டப்படும் உயிர் விளக்கமும். அறிவு விளக்கமும் தரும் செய்கையாகும்.

இந்தச் செயல்முறை புறத்தில் காரியப்படும் போது, இச் செயல் புரிகின்றவனின் அகத்தில் கடவுள் தயவால் சுத்தமான இன்பம் ஊற்றெடுக்கின்றது. அவ்வின்ப சக்திதான் அவனுக்கு மேலான அறிவு விளக்கத்தையும், அமுத மயமான உயிர் விளக்கத்தையும் வழங்குவதாம்.

            ஆகையால் ஜீவகாருண்யம் செயல்பட வேண்டியதின் அவசியம் அறியலாகின்றதாம்.

            ஜீவர்களுக்கு எப்போது தயவு செய்ய வேண்டி நேருகின்றது எனின், ஜீவர்கள், பசி, தாகம், பிணி, வறுமையோடு அறியாமை முதலியவற்றால் துன்புற்று வாடி மடிகின்ற போது, அவர்களுக்கு இந்த ஜீவ தயவுச் செயலின் தேவை மிக அவசியமாகின்றது.

            இப்படித் துன்புற்றுக் கலங்குகின்ற ஜீவர்களைக் கண்டும்,  காணாமல் உணர்ந்தும் கூட,  அவர்கள் பால் கருணை காட்ட முற்படுகின்றான் தயவாளன்.

            அப்படித் துன்ப நிலையில் சிக்கி வருந்திக் கொண்டிருப்பவர்களுக்குத் தேவையயன உணவு, நீர், மருந்து முதலியனவும் சிறுதொகைப் பொருள் அல்லது வேண்டிய பொருளைத் தேடிக் கொள்ளும் வழிகாட்டல் முதலியனவும், அறியாமையை விலக்கி, அறிவு ஒளி பெற்றுச் சாந்தியுறும் உபாயமும்,  உதவ வேண்டி இருக்கின்றனவாம்.

            இவ்வுதவிகளால், அந்த ஜீவர்கள் தமக்குற்ற துன்பங்களை விலக்கிக் கொண்டு இன்பில் விளங்கத்தக்கன ஆகின்றனவாம்.

            இவ்வளவு வகையிலும் ஜீவர்களுக்கு தயா உதவி வேண்டப்படுதல் பொதுவான நிகழ்ச்சி ஆகின்றது.

            இவைகளில் முக்கியமானது பசியால் வரும் துன்பம் தான் ஒவ்வொருவரையும் ஆரம்ப முதல் முடிவு வரையும் தொடருவதாக இருக்கின்றது. இந்தப் பசியை நீக்கும் செயல் எப்பொழுதும் நடக்க வேண்டியுள்ளது.

            பசியால் ஏற்படும் துன்பம் பெரிதாகும். இது அதிகரித்தால் உயிர் விளக்கமும் உடன் அறிவு விளக்கமும் குன்றி முடிவில் அழிவே ஏற்பட்டு விடும்.

            இந்த பசித் துன்பம் உண்டாகாமல் தவிர்ப்பதற்கும், உண்டானால் விலக்கிக் கொள்வதற்கும்,  உணவு ஏற்க வேண்டியது அவசியம் ஆகின்றது.

பசியின் தத்துவம்.

ஜீவர்களுக்கு பசி என்னும் ஒன்றைக் கடவுள் ஏற்படுத்தி உள்ளதில் தான் - ஒரு பெரிய தத்துவம் அடங்கி இருக்கின்றது. உடம்பில் உயிர்ச்சக்தி இருந்து கொண்டு, ஜீவ களையோடு கூடிய புற வளர்ச்சிக்கும் (சிவ களை அல்லது) அறிவு விளக்கத்திற்கும் காரணமாய் இருக்கின்றதாம்.  இந்த உயிர்ச் சக்தியில்தான் கடவுள் தத்துவம் -  பசியின் வண்ணமாக வெளிப்பட்டுள்ளது.

உயிர்ச் சக்தியில் நிறை அருள் அமுதம் வெளிப்பட்டிலங்கும் போது ஆனந்த வடிவாகக் கேடின்றி விளங்குவான் மனிதன்.

இவ்வருள் அமுதம் கிடைக்கப் பெறாத வரை புற உணவுச் சக்தியால் தான் உயிர் விளங்குகின்றது. இவ் உணவால் ஏற்படும் உயிர்ச் சக்தி குறைபாடுடையது. அடுத்தடுத்துத் தினமும் உணவு ஏற்று உயிர் விளக்கத்தைத் தூண்டி விட்டுக் கொண்டே  இருக்க வேண்டியுள்ளதாம்.

பசிக்கு உணவு

அப்படி உணவு வழங்கப் பெறாத போதுதான் உயிர்ச்சக்தி மங்குகின்றது. உடலிற் சோர்வு ஏற்படுகின்றதும். பொறி புலன்களின் விளக்கம் குன்றுகின்றது.. உள்ளுணர்வு தடுமாறுகின்றது. அறிவு அனுபவமும் சுருங்குகின்றது. இவை தான் பசியின் செயலாக அறியப்படும்.

இந்தப் பசியை ஒழிப்பதற்கு ஆகாரம் ஏற்பது தான் முறையாக உள்ளது. மற்ற எந்தவித தந்திர உபாயங்களாலும் பசியை நீக்கிக் கொண்டு வாழ முடியாதாம்.

பசியின் கொடுஞ் செயல்களை உணர்ந்தும், அதன் ஆற்றலைப் பொறுக்க முடியாமலும், மனிதன் எதையும் செய்யத் துணிந்து விடுகின்றான். உயிரையே கூட அலட்சியப் படுத்திவிடும் நிலைக்கு வந்து விடுகின்றான்.

இப்படிப்பட்ட பசியை, உணவினால் மாற்றி விட்டு, உள்ளும் புறமும் ஒளி பெறச் செய்து விடுவதுதான் ஜீவகாருண்யத்தின் அருஞ் செயலாக இருக்கின்றது. பசி என்னும் ஒன்று இல்லையானால், இந்த ஜீவகாருண்யச் செயலுக்கே இடமில்லாது போகும்.

இதிலிருந்து, ஜீவகாருண்யத்தின் மேன்மையும் அதனை ஒவ்வொரு சன்மார்க்கியும், தனது வாழ்வில் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியமும், உணரப்படலாகின்றது.

           

 

 

           

 

           

 


 
D A E I O U
Arutperunjothi Arutperunjothi
Thaniperungarunai Arutperunjothi

Daeiou Vanakkam,


----- Original Message ----
From: sivaraman duraivelu <shivy27@gmail.com>
To: vallalargroups@googlegroups.com
Sent: Friday, 23 May, 2008 2:02:25 PM
Subject: [vallalargroups:471] Re: Arutperunjothi Agaval - "Grace" Lines - Sath-Vicharam

Resected Ramanujam, 
 
 
Thank u for the photograph of Thiruvottiyur Shri Vallalar centre.   Have u visited it and saw the " Holy Mirror "  .  
 
My question :  What is the accurate meaning of " Jeevakarunya "  how to follow it in day to day life. 
 
With regards
 
sivaraman

 
On 5/22/08, Ramanujam A <getramanujam@gmail.com> wrote:
Arutperunjothi                     DAEIOU                       Arutperunjothi
Thaniperungarunai                                                  Arutperunjothi
====================================================
Thanks for the information.
The name of the Thiruvotriyur Sangam is ஸ்ரீமத் ராமலிங்க மடாலயம்,
திருவொற்றியூர்.
    மேற்படி மடாலயத்தின் முன் முகப்பு புகைப்படம் அன்பர்களின்
தகவலுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
A.Ramanujam, Madurai.14
22.5.2008 10.58 p.m. (Ind.Std.Time)

 
On 5/22/08, veda puri <vedapuris@yahoo.com> wrote:
Dear anbar JK,

Very happy to see the Graceines message to members.
Kindly consider this suggestion.  I have alredy sent
"OUR GOAL IS ARUL" FEW DAYS BACK.   Now again i have
attached the same for your consideration.  My
suggestion is just attach this to the bottom of that
grace email so that at the bottom they can listen to
this audio song with divine tune.Every one would
relish.  This is only a suggestion.  IF NECESSARY
CHANGE THE WORD ARUL INTO GRACE.

http://www.4shared.com/file/47519004/7df8191/OUR_GOAL__ARUL.html


ANBE SIVAM.

Anbudan,
SV.
--- vallalar groups <vallalargroups@gmail.com> wrote:

> *Ella Uyirgalum Inbutru vaalga*
> **
> *Dear Sanmarga Friends,*
> **
>
> Please Remember these lines when you read "Agaval"
>
>
>
> Purpose of "Jeevakarunyam" – To get "*Grace"*
>
> * *
>
> *Secret of "Artpa" **à** Arul + Paa **à** Grace
> Songs*
> * -> "Full of Grace"*
>
>
>
> *"Arutperunjothi Agaval"  - Vallalar (970-1020
> Lines)***
>
> *What is our nature? *
>
> *        **"**Grace**"** is our Nature…***
>
> * *
>
> *What is our Knowledge? ***
>
> *        **"**Grace**"** is our Knowledge…***
>
> * *
>
> *What is our Character?***
>
> *         **"**Grace**"** is our Character…*
>
> * *
>
> *What is our Mind?***
>
> *         **"Grace"** is our Mind…***
>
> * *
>
> *What is our God?***
>
> *          **"**Grace**"** is our God…***
>
> * *
>
> *What is our Name? *
>
> *            "Grace" is our Name...*
>
> * *
>
> *What is our Place?*
>
> *             "Grace" is our Place..*
>
> * *
>
> *What is our Work? *
>
> *            "Grace" is our Work..*
>
> * *
>
> *What is our Like?*
>
> *            "Grace" is our Like…*
>
> * *
>
> *What is out Asset?*
>
> *             "Grace" is our Asset..*
>
> * *
>
> *What is our pleasure?*
>
> *             "Grace" is our Pleasure...*
>
> * *
>
> *What is our Community?*
>
> *             "Grace*" *is our Community…*
>
>  அருளே நம்மிய லருளே
> நம்முரு
> (999) அருளே நம்வடி
> வாமென்ற சிவமே (1000)
>  அருளே நம்மடி யருளே
> நம்முடி (1001)அருளே
> நம்நடு வாமென்ற
> சிவமே (1002)
>  அருளே நம்மறி வருளே
> நம்மனம் (1003)அருளே
> நங்குண மாமென்ற
> சிவமே (1004)
>  அருளே நம்பதி யருளே
> நம்பதம் (1005)அருளே
> நம்மிட மாமென்ற
> சிவமே (1006)
>  அருளே நந்துணை
> யருளே நந்தொழில்
> (1007)அருளே நம்விருப்
> பாமென்ற சிவமே (1008)
>  அருளே நம்பொரு
> ளருளே நம்மொளி
> (1009)அருளே நாமறி
> வாயென்ற சிவமே (1010)
>  அருளே நங்குல மருளே
> நம்மினம் (1011)அருளே
> நாமறி வாயென்ற
> சிவமே (1012)
>  அருளே நஞ்சுக மருளே
> நம்பெயர் (1013)அருளே
> நாமறி வாயென்ற
> சிவமே (1014)
>
http://www.vallalar.org/WebComponents/ThiruArutpaThirumurai.aspx?CategoryId=6081
>
> Anbudan,
> Karthikeyan
>  *Click
>
**Subscribe<http://vallalargroups.googlegroups.com/web/Subscribe%20to%20vallalargroups1.html?gda=h9YjQlQAAABVXvUeUz4XkNTtBfTNNvL1hodMCdZtj19M6ZOuXXnHuKEfD8gizBqda3A8nb_OSkfnkHF4c59yfEzgi0RDBFoYBl8URYG_SPQKFyvF2B5u8YTIXwSHFlc31AV7pr2W3Bo>to
> this Vallalargroups
> *
> *"Grace" is our Work..*
> **
>
>
>
>












--
sivaraman

Bring your gang together. Do your thing. Find your favourite Yahoo! Group.
--~--~---------~--~----~------------~-------~--~----~
ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI THANIPERNGKARUNAI ARUTPERUNJOTHI

Visit this group at
http://groups.google.co.in/group/vallalargroups?hl=en

To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment