அன்புடையீர் வணக்கம்
சமயம் மற்றும் சுத்த சன்மார்க்க ஆராய்ச்சியாளர்களுக்கு சில கேள்விகள் வைக்கப்படுகிறது.
1.முதல் ஐந்து திருமுறை சமயம் என்றால் சுத்த சன்மார்க்கப் பாடல் அதில் இல்லையா.
2.6ந்திருமுறையில் குறிப்பாக சைவ சமய கடவுளான சிவம். ஓம் நமசிவய .ஷடாந்தம். அடியார்களின் குறிப்பு இவையெல்லாம் வருகின்றனவே எப்படி இது சமயங் கடந்தது?
3.பேருபதேசம் தவிர வேறெங்காவது மகாமந்திரம் பெருமான் கைப்பட உள்ளதா?
4.சமய மதங்களையும் ஷடாந்தங்களையும் விட்டுவிட்டேன் என்று சொன்னவர் மகா மந்திரத்தின் இன்பானுபவத்தை தாயுமான சுவாமிகளின் பாடலின் பிரமானத்தால் உணர்க என்று ஏன் சொல்ல வேண்டும்.அப்படியென்றால் மகாமந்திரம் கூட சமயமா?
5.10ரூபாய் பொருமான விபூதியை துறந்த சுத்த சனமார்க்கிகள் 10,000 மதிப்பிலான நகையை ஏன் துறக்கவில்லை.மாயையாகிய மனைவிமக்களை தன் உடமைகளையும் ஏன் துறக்கவில்லை?
6.6திருமுறைகளும் அகவலில் அடக்கம் .
அகவல் மகாமந்திரத்தில் அடக்கம்.
மகாமந்திரம் தாயுமான சுவாமிகளின் பாடலுக்கு அடக்கம் . அப்படியா?
7.அரசியல்வாதி ஏழை எளிய மக்களுக்கு இட்லி போடராரு.
ஆன்மீகவாதி கஞ்சி ஊற்றுகிறார் யாருக்கு தயவு அதிகம் .
8.சுத்த சன்மார்க்கத்தில் கணவன் இறந்தால் தாலி வாங்கக்கூடாது.ஆனால் தாலி கட்டலாமா? இது சமயமா இல்லையா ?
9.ஜீவகாருண்யத்தில் சத்விசாரம் பற்றி வரேவயில்லை.பேருபதேசத்தில் ஜீவகாருண்யம் என்ற வார்த்தையே வரவில்லை.
10.உண்மையிலேயே ஒரு சுத்த சன்மார்க்க சாதகனின் சாதனா முறைகளை வரிசைப்படுத்த முடியுமா?
11.எதற்கு எடுத்தாலும் இடைச்செறுகல் என்று சொல்லி உண்மையறியாது .
ஒன்றுகிடக்க ஒனாறு உளறுவது சரியா?
12.சுத்த ,பிரணவ, ஞான தேகத்தையே வணங்கக்கூடாது என்ற அளவிற்கு அறிவு விளங்கிய சுத்த சன்மார்க்கிகள் கதவையும் பூட்டையும் சுவற்றினையும் பெட்டியையும் வணங்குவது சமயமா ?சுத்த சன்மார்க்கமா?
யார் சுத்த சன்மார்க்கி
நரை-20%
திரை-40%
பிணி-60%
மூப்பு-80%
சாக்காடு-100%எங்கே?யார்?எப்போது.
-சாது ஹரி
No comments:
Post a Comment