🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !
🙏🌻🌺 *சுத்தசன்மார்க்க சாதனா சாத்தியம்* 🌺🌻🙏
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 👏
சுத்தசன்மார்க்க நெறியின் அடிப்படைத் தகுதியே தயவுதான் .
*"தயவுடையோர்கள் அனைவரும் சுத்தசன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள்"*
அப்படி என்றால்,
*தயவு இல்லாமல் சன்மார்க்கம் என்று கூறிக்கொண்டு நாம் செய்கின்ற செயல்கள் அனைத்துமே சுத்தசன்மார்க்க நெறியைச் சாராத செயல்களேயாகும்* .
அதனால்தான் *தயவு இல்லாமல் செய்கின்ற செயல்கள் அனைத்தும் மாயாசாலச் செய்லகளே என்று நமது பெருமான் கூறுகின்றார்கள்* .
_*அப்படி என்றால் இதன் பொருள் என்ன ?*_
தயவு இல்லாமல் செய்கின்ற எந்த செயல்களும் நிலையான இன்பத்தை தராமல் ,நிலையற்று மறைந்து போகக்கூடிய சிற்றின்ப வகைகளேயாகும் என்பதாகும் .
*தயவினால் செயயப்படக்கூடிய செய்லகள் எதுவாக இருந்தாலும் அது நிலைத்து நின்று திருவருள் சம்மதத்துடன் பயன்தரக்கூடியதாகும்* .
*எனவே , ஆன்மாக்களாகிய நமது ஜீவதயவைக் கொண்டு கடவுளது பெருந்தயவை பெறவேண்டி நடக்கின்ற "தயவைநோக்கியப்" பயணம்தான் நமது மானுடவாழ்க்கைப் பயணம் .*
*🔥ஜீவதயவைக்கொண்டு கடவுளது பெருந்தயவை பெறச்செய்வதே சுத்தசன்மார்க்கமாகும்* 🔥
இப்படிப்பட்ட *தயாநெறியில்* பயணிக்கின்ற சுத்தசன்மார்க்க அன்பர்களுக்கு *சாதனங்களாக* இருப்பவைகளும்
அவற்றின் முடிவில் பெறப்படுகின்ற *சாத்தியமாக* இருப்பவைகளும் எவைஎன்று பெருமான் கூறுகின்றதைப் பார்ப்போம் 🔥🙏
🌺 *சாதனங்கள்* 🌺
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
சுத்தசன்மார்க்கத்தின் முதற்சாதனம் " *ஜீவகாருண்ய ஒழுக்கமேயாகும்* இதைத்தான் பெருமான் " *பரோபகாரம்* " என்று கூறுகின்றார்கள்
*இந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் நமக்குள் அரும்பி மலர்ந்து காய்த்து பிறகு கனியாகி கடவுளது பெருந்தயவைப் பெறவேண்டுமானால் நமது கரணங்களும் ஜீவனும் ஆன்மாவும் சில ஒழுக்கங்களை கடைபிடிக்கவேண்டியுள்ளது இவைகள்தான் அடுத்த சாதானங்கள்* .
அவற்றை வள்ளல் பெருமான் ,
*1:இந்திரிய ஒழுக்கம், 2:கரண ஒழுக்கம், 3:ஜீவ ஒழுக்கம், 4: ஆன்ம ஒழுக்கம்* என்ற நான்கையும் கூறி அவற்றினுள் ஒவ்வொன்றிலும் எவ்வாறு நமது இந்திரியங்களும், கரணங்களும்,
ஜீவனும், ஆன்மாவும் ஒழுக்கம் சார்ந்து நிற்கவேண்டும் என்பதை பெருமான் உரைநடைப் பகுதியில் விவரித்து வகைப்படுத்தி கொடுத்துள்ளார்கள் .
ஆகலில் *சுத்தசன்மார்க்க நெறியை கடைபிடித்து பயன்பெற முதல் சாதனம் ஜீவகாருண்ய ஒழுக்கமாகிய பரோபகாரம் என்பதும் ,அதற்கு அடுத்த இரண்டாவது சாதனம் நான்கு ஒழுக்கங்கள் என்பதுவும் ஆகும்.*
அடுத்து மூன்றாவது சாதனமாக " *பரவிசாரம்* " கூறப்படுகின்றது.
இந்தப் பரவிசாரத்தின் மூலமே *"நிராசை" என்னும் மேலானப் படியை* அடைய இயலும் என்பதாலும் ,
*இந்த நிராசை படியை அடைந்துவிட்டால் இவ்வுலகப்பற்றை விடுத்து அம்பலப் பற்றையே பற்றாகப் பற்றிக்கொண்டு பெறவேண்டிய பெருவாழ்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதால் இங்கு "பரவிசாரத்தை"மூன்றாவது சாதனமாக சொல்லப்பட்டுள்ளது.*
ஆனால் உரைநடைப் பகுதியில் பரோபகாரம் பரவிசாரம் என்ற இரண்டு மட்டுமே சன்மார்க்க சாதனமாகச் சொல்லப்பட்டிருக்கும் .
ஏனென்றால் *சுத்தசன்மார்க்கத்தார்கள் என்றாலே இந்திரிய கரண ஒழுக்கம் சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதுதான் .*
மேற்கண்ட இந்த இரண்டு ஒழுக்கத்தையும் ஜீவர்களாகிய நமது நற்செயலாலும் முயற்சியாலும் அடைந்துகொண்டால் அடுத்துள்ள ஜீவஒழுக்கம் மற்றும் ஆன்மஒழுக்கம் திருவருள்துணையால் விரைந்து அடைந்துகொள்ளலாம் .
எனவே,
சுத்தசன்மார்க்கத்தில் பயணிக்கும் அன்பர்களுக்கு , *சாந்தசற்குணத்தை விருத்திசெய்விக்கும்இந்திரிய கரண ஒழுக்கங்களும்,*
*அன்பையும் அறிவையும் விருத்திசெய்விக்கும் ஜீவகாருண்ய ஒழுக்கமாகிய பரோபகாரமும்,*
*இவ்வுலகப்பற்றை விடக்கூடிய நிராசை என்னும் படியை அடைவிக்கும் "பரவிசாரமும் " ஆகிய மூன்று சாதனங்களும் மிகவும் அவசியமாகும்.*
🙏🔥🌻 *மேற்கண்ட சாதனத்தால் பெறக்கூடிய சுத்தசன்மார்க்க சாத்தியங்கள்** 🌻🔥🙏
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
மேற்கண்ட சாதனங்களைக்கொண்டு சுத்தசன்மார்க்க நெறியில் நன்முயற்சியுடன் வாழ்ந்துவருகின்ற ஜீவர்கள் அடையக்கூடிய புருஷார்த்தங்களாகிய சாத்தியங்கள் நான்காகும் .
அவை,
*1:ஏமசித்தி(தங்கம் செய்தல்), 2: சாகாக்கல்வி, 3:தத்துவ நிக்கிரகம்,4:கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்.*
என்ற நான்கு அரியபெரிய புருஷார்த்தங்களைப் பெற்று *சுத்தசன்மார்க்கப் பெருநிலையாகிய அருட்பெருஞ்ஜோதி இயற்கை என்னும் அருள்தேகம் பெற்று, அருள்நிலையில் நின்று, அழிவற்ற அருள்வாழ்வாகிய, மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்தல்கூடும் என்பதாம்.* நாமும் அவ்வண்ணமே சாதனத்தை தொடர்ந்து சாத்தியத்தைப் பெற்று வாழ்வதற்கு திருவருள் துணைக்கொண்டு முயல்வோம் 🔥🙏
.....நன்றி🙏
...வள்ளல் பெருமான் மலரடிப் போற்றி போற்றி🙏
....பெருமான் துணையில் 🙏
...தயவுடன் வள்ளல் அடிமை🙏
....வடலூர் இரமேஷ்;
No comments:
Post a Comment