வள்ளலாரின் அருள் மொழிகள்
_________________________________
1, அனைத்து சமயம் மதம் ஜாதி குலம் கோத்திரம் என்று பேதம் பார்க்காமல் எல்லா உயிர்களையும் தம்முயிராக பாவித்து கருணையுடன் வாழுங்கள்.
2, ஏழைகளின் பசியை போக்கவும் பிற உயிரிணங்களின் துன்பத்தை கண்டு இரக்கம் காட்டும் ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டீன் திறவு கோல் எனவே பசியால் வாடும் ஏழைகளை தேடிசென்று அவர்களின் பசியை போக்கி இறைவன் அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அருளை பெற்று இன்புற்று வாழுங்கள்.
3, எல்லா உயிர்களுக்கும் இறைவன் ஒருவனே அவனே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக விளங்குகராா் அவர் ஒருமையை விரும்புகறார் எனவே அவர் மீது நம்பிக்கை வையுங்கள், ஆனால் ஒருபோதும் உஙகள் கடமையைச் செய்யத் தவறாதீர்கள்
எனவே அன்பர்களே பசியென்று வருவோர்க்கு உணவு என்னும் மருந்தை கொண்டு அவர்தம் பசியை போக்கினால் நாம் நம் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ்வோம் என்பதில் சிரிதும் ஐயமில்லை
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டீன் திறவு கோல்
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ.இளவரசன்
ஜமின்பல்லாவரம்
சென்னை 117
No comments:
Post a Comment