🔥 திருக்குறள். 260🔥
●●●●●●●●●●●●●●●
🔥 பொருள் ஆட்சி போற்றாதவர்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு.🔥
🔥 பொருள் உடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றதவர்க்கு இல்லை ; அவ்வாறே , அருள் உடையவர் ஆகும் தகுதி ஊனைத் தின்பவர்க்கும் இல்லை. 🔥
🔥 வள்ளுவர். 🔥
••••••••••••••••••••••••••
🌻 திருவருட்பா. 🌻
●●●●●●●●●●●●●●●
🌻 வன்புடையார் கொலைகண்டு புலை உண்பார் சிறிதும்
மரபினர் அன் றாதலினால் வகுத்த அவர் அளவில்
அன்புடைய என் மகனே பசி தவிர்த்தல் புரிக
அன்றி அருட்செயல் ஒன்றும் செயத்துணியேல் என்றே
இன்புற என் தனக்கிசைத்த என் குருவே எனைத்தான்
ஈன்றதனித் தந்தையே தாயே என் இறையே
துன்பறு
மெய்த்தவர் சூழ்ந்து போற்று திருப் பொதுவில்
தூய நடத்தரசே என் சொல்லும் அணிந்தருளே. 🌻
🌻 வள்ளலார். 🌻
●●●●●●●●●●●●●●●
🌻கொல்லா நெறியே குருவருள் நெறி எனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச் சிவமே. 🌻
🌻 வள்ளலார். 🌻
●●●●●●●●●●●●●●●●
No comments:
Post a Comment